site4any

Free downloadable Tamil & Tamil dubbed movies, Free Tamil books & News, Articles, Health tips…

இந்திய பெண்களுக்கு கன்னித்தன்மை பரிசோதனை: இங்கிலாந்து மன்னிப்பு கேட்க வற்புறுத்தல்

Posted by sambala87(சூரியன்) on May 12, 2011

1976ம் ஆண்டில் இங்கிலாந்து அரசு, இந்திய பெண்களுக்கு கன்னித்தன்மை பரிசோதனை மேற்கொண்டது. இதற்கு இங்கிலாந்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற கோரிக்கை தற்போது எழுந்து இருக்கிறது.

இங்கிலாந்து நாட்டை சேர்ந்தவர்களை திருமணம் செய்யப்போவதாக குறிப்பிட்டு, அந்த நாட்டின் குடியுரிமைக்கு விண்ணப்பிக்கும் மற்ற நாட்டு பெண்களுக்கு கன்னித்தன்மை பரிசோதனை நடத்தப்பட்டது. இந்த நடைமுறை கடந்த 1976ம் ஆண்டு முதல் 1979 வரை அமலில் இருந்தது. பின்னர் இதற்கு ஏற்பட்ட எதிர்ப்பு காரணமாக, இந்த நடைமுறை நிறுத்தப்பட்டது.

இந்த குறிப்பிட்ட காலத்தில் டெல்லியை சேர்ந்த 73 பெண்களுக்கும், மும்பையை சேர்ந்த 9 பெண்களுக்கும் கன்னித்தன்மை பரிசோதனை நடத்தப்பட்டதாக, இங்கிலாந்தில் இருந்து வெளி வரும் ஆங்கில பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டு இருக்கிறது.

35 வயதான இந்திய ஆசிரியை ஒருவர், விமானம் மூலம் இங்கிலாந்தில் உள்ள ஹீத்ரு விமான நிலையத்தில் போய் இறங்கினார். அப்போது அவருக்கு கன்னித்தன்மை பரிசோதனையை ஆண் டாக்டர் ஒருவர் நடத்த இருந்தார். இதற்கு அந்த பெண் எதிர்ப்பு தெரிவித்தார்.

என்றாலும், இந்த பரிசோதனையை மேற்கொள்ள சம்மதிக்கா விட்டால், அவரை இந்தியாவுக்கு விமானத்தில் திருப்பி அனுப்பி விடுவார்கள் என்ற பயத்தால், அந்த பெண் மிகவும் மன வருத்தத்துடன், பரிசோதனையை மேற்கொண்டார் என்றும் அந்த பத்திரிகை தெரிவித்து இருக்கிறது.

இதுபோன்ற கொடுமை 1979ம் ஆண்டு நிறுத்தப்பட்டாலும், 82 இந்திய பெண்கள் மன வருத்தத்துக்கும், வேதனைக்கும் உள்ளாகி இருக்கிறார்கள். எனவே இங்கிலாந்து அரசு இதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற கோரிக்கை தற்போது எழுந்து இருக்கிறது.

இதுபற்றி குடியுரிமை பெறுவோர் நலச்சங்க இயக்குனர் ஹினா மஜித் கூறுகையில், “இது ஒரு வெட்ககரமான செயல். பெரிய மனித உரிமை மீறல். இதற்கு இங்கிலாந்து அரசு வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்றார்.

இதுபற்றி இங்கிலாந்து அதிகாரி ஒருவர் கூறுகையில், “இது 30 ஆண்டுகளுக்கு முன் நடந்ததாக கூறப்படும் குற்றச்சாட்டு. இதை ஏற்கனவே தடை செய்து விட்டோம். எங்கள் நாட்டின் குடியுரிமை சட்டம் திருத்தப்பட்டு இருக்கிறது” என்று குறிப்பிட்டார்.
தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்

(nkn)

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: