பின்லேடனின் மகன்கள் ஐ.நா.சபை விசாரணை நடத்த கோரிக்கை

உலக நாடுகளை அச்சுறுத்தி வந்த அல்-கொய்தா தீவிரவாத இயக்கத்தின் தலைவரும், பயங்கரவாதியுமான ஒசாமா பின்லேடன் அமெரிக்க படைகளால் தாக்குதல் நடத்தி கொல்லப்பட்டார்.

பின்லேடன் கொல்லப்பட்டது கொடூரமானது என்றும், ஐ.நா.சபை இது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் பின்லேடனின் மகன்கள் இப்போது கோரிக்கை விடுத்து உள்ளனர்.

பின்லேடன் மற்றும் அவரது மனைவி, ஒரு மகன் ஆகியோர் கொல்லப்பட்டது குறித்து பின்லேடன் குடும்பத்தினர் யாரும் இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை. இந்த நிலையில், அவரது மகன்கள் வெளியிட்ட அறிக்கை என்று கூறி, அமெரிக்காவில் இருந்து வெளியாகும் நிïயார்க் டைம்ஸ் பத்திரிகை ஒரு செய்தி வெளியிட்டு உள்ளது.

அந்த அறிக்கையை பின்லேடனின் 4-வது மகன் உமர் (30) கொடுத்ததாக அந்த செய்தியில் கூறப்பட்டு உள்ளது. ஆனால், அதில் பின்லேடனின் மற்ற மகன்கள் பெயர்கள் இடம் பெறவில்லை.

தற்போது வளைகுடா நாடுகளில் வசித்து வரும் உமர் பின்லேடன், அவரது தாய் நஜ்வா ஆகியோர் இணைந்து, `வளர்ந்து வரும் பின்லேடன்’ என்ற தலைப்பில் தங்களது வாழ்க்கை வரலாற்றை 2009-ம் ஆண்டு எழுதினர். இந்த புத்தகம் எழுத உதவிய அமெரிக்க எழுத்தாளர் ஜீன் சாச்சன்தான் தற்போது இந்த அறிக்கையை நியூயார்க் டைம்ஸ் பத்திரிகைக்கு அளித்துள்ளார்.

அதில், ’’நானும், என் தாய் நஜ்வாவும் 1999-ம் ஆண்டுவரை எங்கள் தந்தையுடன் ஆப்கானிஸ்தானில் வசித்து வந்தோம். பின்னர் அவரது வன்முறை மற்றும் தீவிரவாதம் பிடிக்காமல் அவரை விட்டு பிரிந்து விட்டோம்.

ஆனாலும், என் தந்தை கொடூரமாக கொல்லப்பட்டதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. கொடூரக்கொலை எப்போதும் அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வாக அமையாது.

ஆயுதம் ஏதும் இல்லாமல், நிராயுதபாணியாக இருந்த என் தந்தையையும், எங்கள் குடும்பத்தினரையும் அமெரிக்க படையினர் கொடூரமாக கொன்றுள்ளனர். சர்வதேச சட்ட விதிகளை மீறி, விசாரணையின்றி கொன்றதுடன், என் தந்தையின் உடலை கடலில் அடக்கம் செய்து உள்ளனர். கடலில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது எங்கள் குடும்பத்தின் உரிமையை பறிக்கும் செயல்.

எங்கள் குடும்பத்தினரையும், என் தந்தையின் ஆதரவாளர்களையும் அவமதிக்கும் செயல். இது இஸ்லாமிய முறைகளுக்கு விரோதமானது. மனிதாபிமான முறையிலும், மத ரீதியிலும் இதை ஏற்றுக் கொள்ள முடியாது.

ஈராக் அதிபர் சதாம் உசேன் மற்றும் செர்பியா அதிபர் ஆகியோர் கொல்லப்பட்டபோதுகூட சர்வதேச விதிகள் பின்பற்றப்பட்டு உள்ளன. ஆனால், எங்கள் தந்தையை கொன்றதில் இது மீறப்பட்டு உள்ளது. பல உண்மைகள் மறைக்கப்பட்டு உள்ளன.

இந்த வன்முறையான கொலை குறித்து, சர்வதேச விதிகளுக்கு கட்டுப்படாத கொடுஞ்செயலில் ஈடுபட்ட அமெரிக்காவின் தாக்குதல் குறித்து ஐ.நா. சபை விசாரணை நடத்தி உண்மையை உலகுக்கு தெரிவிக்க வேண்டும்.

எங்கள் தந்தை கொல்லப்பட்டதற்கு அமெரிக்கா மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க எங்களுக்கு உரிமை உண்டு. எங்கள் தந்தையை அமெரிக்கா கைது செய்து, கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து இருக்கலாமே? அப்போது அவரைப்பற்றிய உண்மைகள் உலகத்துக்கு தெரியவரும் அல்லவா? அப்படி செய்யாதது ஏன்? என்பதை இந்த உலகத்துக்கு அமெரிக்கா தெரிவிக்க வேண்டும். எங்கள் தந்தை கொல்லப்பட்டதற்கான காரணத்தை ஒபாமா தெளிவுபடுத்த வேண்டும்.

பாகிஸ்தானின் பிடியில் இருக்கும் எங்கள் குடும்பத்தினரான பின்லேடனின் 3 மனைவிகள், பல மகன்கள்-மகள்கள் ஆகியோரை பாகிஸ்தான் எங்களிடம் ஒப்படைக்க வேண்டும்’’ என்று குறிப்பிட்டு உள்ளனர்.

ஏறத்தாழ இதே கருத்துகள் ஜிகாதிஸ்ட் என்ற இணைய தளத்திலும் வெளியாகி உள்ளது. ஆனால் சற்று சிறியதாக, கொஞ்சம் மாறுதலாக அந்த தகவல்கள் உள்ளன.

பின்லேடன் கொல்லப்பட்டதற்கு பிறகு அவரது 3 மனைவிகளை பாகிஸ்தான் அரசு கைது செய்து விசாரித்து வருகிறது. அவர்களிடம் விசாரணை நடத்த அமெரிக்கா முடிவு செய்து, அவர்களை தங்கள் வசம் ஒப்புவிக்க வேண்டும் என்று பாகிஸ்தானிடம் கேட்டு உள்ளது. இதற்கு பாகிஸ்தானும் அனுமதி அளித்து விட்டது என்று கூறப்பட்டது. ஆனால், இதை பாகிஸ்தான் வெளியுறவுத்துறை செயலாளர் சல்மான் பஷீர் மறுத்தார்.

இந்த நிலையில், இதுபற்றி அமெரிக்காவின் ராணுவ தலைமையகமான பென்டகனில், அதன் செய்தி தொடர்பாளர் கர்னல்டேவ் லபான் நிருபர்களிடம் கூறுகையில், “பின்லேடனின் மனைவிகளிடம் விசாரணை நடத்த அனுமதி கேட்டு இருக்கிறோம். அங்கிருந்து இன்னும் பதில் கிடைக்க வில்லை. பாகிஸ்தான் அரசாங்கத்துடன் தொடர்ந்து பேசி வருகிறோம்” என்று தெரிவித்தார்.
தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்

(nkn)

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s