நாமக்கல் மாவட்டத்தில் கழகங்களிடையே கடும் போட்டி

“முட்டை’க்கு பெயர் பெற்ற, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஆறு சட்டசபை தொகுதிகளில், இம்முறை ஓட்டுப்பதிவு சதவீதம் உயர்ந்துள்ளது, கட்சிகளிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இம்மாவட்ட தொகுதிகள் யாருக்கு சாதகமாக உள்ளது என்பது குறித்த அலசல்:

ராசிபுரம் (தனி): கடந்த முறை பொதுத் தொகுதியாக இருந்த ராசிபுரம், இம்முறை, தனித்தொகுதியாக மாற்றமடைந்துள்ளது. அ.தி.மு.க., சார்பில், முன்னாள் அமைச்சர் தனபால், தி.மு.க., சார்பில், துணை சபாநாயகர் துரைசாமி ஆகியோர் போட்டியிட்டனர்.

இரு வேட்பாளர்களும், தொகுதியைச் சேர்ந்தவர்கள் அல்ல. தி.மு.க., அரசின் திட்டங்கள், கூட்டணியின் ஒத்துழைப்பு தன்னை கரை சேர்க்கும் என, தி.மு.க., வேட்பாளர் நம்புகிறார். தற்போதைய தி.மு.க., – எம்.எல்.ஏ., மீதான அதிருப்தி, விலைவாசி, மின்வெட்டு உள்ளிட்ட அரசுக்கு எதிரான விவகாரங்கள், அ.தி.மு.க.,வை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்கிறது.

சேந்தமங்கலம் (எஸ்.டி.,): தி.மு.க., “சிட்டிங்’ எம்.எல்.ஏ., பொன்னுசாமி, மீண்டும் களமிறங்கியுள்ளார். மக்கள் மத்தியில் அதிருப்தி இல்லாததாலும், எதிரணி வேட்பாளர் பலமில்லாத காரணத்தால், மீண்டும் தி.மு.க., வெற்றி பெறும் என, உடன்பிறப்புகள் நம்புகின்றனர். தே.மு.தி.க.,வுடனான கூட்டணியும், அரசுக்கு எதிரான விஷயங்களும், அ.தி.மு.க.,விற்கு சாதகமாக உள்ளன. இரு தரப்பிலும் வைத்திருக்கும் நம்பிக்கைக்கு, வலுவான காரணங்கள் இருப்பதால், இழுபறியாக உள்ளது.

நாமக்கல்: கடந்த முறை தனித்தொகுதியாக இருந்த நாமக்கல், தற்போது பொதுத் தொகுதியாக மாறியுள்ளது. கடந்த, 34 ஆண்டுக்கு பிறகு, பொதுத்தொகுதியாக மாறிய நாமக்கலில் போட்டியிட, ஆளுங்கட்சியினர் அதிக ஆர்வம் காட்டி வந்தனர். இந்நிலையில், தொகுதி, கொ.மு.க.,வுக்கு ஒதுக்கப்பட்டதால், அதிருப்தி ஏற்பட்டது; அது பிரசாரத்திலும் எதிரொலித்தது.

அ.தி.மு.க., வேட்பாளர் பாஸ்கர், கட்சியின் நகர செயலர், முன்னாள் நகராட்சித் தலைவர், தற்போது கவுன்சிலர் என, தொகுதி மக்களுக்கு அறிமுகமானவராக உள்ளார். கூட்டணி பலத்தோடு, அ.தி.மு.க., வெற்றி பெறும் என்பது இறுதி நிலவரம்.

ப.வேலூர்: தொகுதியை பா.ம.க.,விற்கு ஒதுக்கியதால், தி.மு.க., கூட்டணியில் அதிருப்தி நிலவியது. “சிட்டிங்’ பா.ம.க., எம்.எல்.ஏ., நெடுஞ்செழியன் மீதான அதிருப்தி, உள்ளடி வேலை, வேட்பாளர் வடிவேல், வெளியூரைச் சேர்ந்தவர் என்பது போன்ற காரணங்களால், மாம்பழம் பழுப்பது சிரமம் என்கின்றனர் தொகுதிவாசிகள். அ.தி.மு.க., கூட்டணி சார்பில் போட்டியிட்ட கொங்கு இளைஞர் பேரவை கட்சித் தலைவர் தனியரசுவின் பிரசார பலம், கூட்டணியினர் ஒத்துழைப்பு, அவரை வெற்றி பெற வைக்கும் என்பதே தற்போதைய நிலை.

திருச்செங்கோடு: சேலம் மாவட்டம், ஆத்தூர் காங்கிரஸ் எம்.எல்.ஏ., சுந்தரத்திற்கும், தே.மு.தி.க., வேட்பாளர் சம்பத்குமாருக்கும் நேரடி போட்டி. இரு வேட்பாளர்களும், தோழமைக் கட்சிகளின் அதிருப்தியால், பிரசாரத்தின்போது திணறினர். இருப்பினும், நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சம்பத்குமார், “மண்ணின் மைந்தர்’ என்ற அடிப்படையில் முன்னிலை பெற்றுள்ளார்.

குமாரபாளையம்: இது, நாமக்கல் மாவட்டத்தில் புதிதாக உருவாகியுள்ள தொகுதி. தி.மு.க., சார்பில், முதல்முறையாக சட்டசபை தேர்தலை சந்திக்கும் வேட்பாளர் செல்வராஜுக்கு சொந்த தொகுதி என்பதால், மக்கள் மத்தியில் அறிமுகமான நபராக உள்ளார். எனினும், அடாவடியில் ஈடுபடக் கூடிய நபர் என, மக்கள் மத்தியில் அவர் மீது பதிந்துள்ள கறை, சாயக்கழிவு நீர் பிரச்னைக்கு, ஆளுங்கட்சி தீர்வு காணாதது போன்றவை, வேட்பாளர் செல்வராஜுக்கு மைனசாக அமைந்துள்ளது.

அ.தி.மு.க., வேட்பாளர் தங்கமணிக்கு, குமாரபாளையம் சொந்த தொகுதி. தற்போது எம்.எல்.ஏ.,வாக உள்ளதால், மக்கள் மத்தியில் நன்கு அறிமுகமான நபராக உள்ளார். தொகுதி மக்களிடத்தில் நற்பெயர் எடுத்துள்ளார். கூட்டணிக் கட்சியினர் ஒத்துழைப்பால், தொகுதியை அ.தி.மு.க., கைப்பற்றும் என, அ.தி.மு.க.,வினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

(dm_)

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s