அறிமுக வேட்பாளரிடம் அனுபவ வேட்பாளர் தோற்பாரா?

தமிழகத்தின் கடலோர மாவட்டமான ராமநாதபுரத்தில், நான்கு தொகுதிகள் உள்ளன. அமைச்சர் சுப.தங்கவேலன், காங்., எம்.எல்.ஏ., ஹசன் அலி, முன்னாள் அமைச்சர் சத்தியமூர்த்தி உள்ளிட்டோர் களமிறங்கிய இந்த மாவட்டத்தின் தற்போதைய நிலவரம்:

ராமநாதபுரம்: அ.தி.மு.க., கூட்டணியில், ஜவாஹிருல்லா (ம.ம.க.,), காங்., கட்சியின், “சிட்டிங்’ எம்.எல்.ஏ., ஹசன் அலி உடன் மோதினார். புகழ்பெற்ற இந்து தலங்களை கொண்ட இப்பகுதியை, சிறுபான்மை தொகுதியாக முத்திரை குத்த அரசியல் கட்சிகள் திட்டமிடுவதாகக் கூறி, பா.ஜ., தரப்பில் நிறுத்தப்பட்ட துரைக்கண்ணனுக்கு ஆதரவு குவிந்தது. இதனால், ராமநாதபுரத்தில் மும்முனை போட்டி அமைந்தது.

ராஜபக்ஷேவின் நட்பு, ஹசன்அலிக்கு தொகுதியில் ஆட்டம் கொடுத்தது. தி.மு.க.,வினர் பலர், “கை’ விரித்ததால், கடைசி நேரத்தில், “பூத்’ல் உட்கார ஆளில்லாமல் காங்., திண்டாடியது. அ.தி.மு.க., ஓட்டுகளை பிரதானமாக நம்பியது ம.ம.க., சில இடத்தில் இதற்கு பலன் கிடைத்தது. இருந்தும், பா.ஜ.,வுக்கு கிடைத்துள்ள கணிசமான ஓட்டு, யாருக்கு வெற்றி என்பதை தீர்மானிக்க முடியாத நிலையை ஏற்படுத்தி உள்ளது.

திருவாடானை: கடந்த முறை, 65.46 சதவீதம் ஓட்டுப் பதிவான இத்தொகுதியில், இம்முறை, 74.5 சதவீதம் பதிவானது. தி.மு.க., அமைச்சர் தங்கவேலன், தே.மு.தி.க.,வின் அறிமுக வேட்பாளர் முஜ்பூர் ரகுமான் இடையே கடுமையான போட்டி இருந்தது.

முஜ்பூரை வேட்பாளராக அறிவித்ததும், தாங்கள் வெற்றி உறுதி செய்யப்பட்டதாக, தி.மு.க.,வினர் மகிழ்ந்தனர். இடையில் ரித்தீஷ் எம்.பி., கைது, கிராமங்களில் எழுந்த எதிர்ப்பு போன்றவை, தி.மு.க.,வுக்கு சிக்கலை ஏற்படுத்தியது. அதே மாத்திரத்தில், அறிமுக வேட்பாளர் என்பதை உடைத்து, தே.மு.தி.க., தரப்பில் கடுமையான களப்பணியாற்றினர்.

தி.மு.க.,வின் ஒன்றிய, கிளை செயலர் சிலர், “செலவழித்த பணத்திற்கு பலன் கிடைக்கவில்லை’ என, ஓட்டுப் பதிவுக்கு முதல் நாள் புலம்பியது, தி.மு.க.,வுக்கு மைனஸ்; முஸ்லிம் ஓட்டுகள் அதிகம் கிடைத்திருப்பது தே.மு.தி.க.,வுக்கு பிளஸ்.

பரமக்குடி (தனி): காங்., கட்சியின் ராம்பிரபு – அ.தி.மு.க.,வின் டாக்டர் சுந்தர்ராஜ் இடையே போட்டி. கடந்த முறை தபால் ஓட்டுகளில் வெற்றி பெற்ற ராம்பிரபு, இம்முறை தேர்தல் களத்தின் கடுமையை சந்தித்தார். “நன்றி சொல்வதற்கு கூட நீங்கள் வரவில்லையே’ என, வாக்காளர்கள் நேரடியாகவே கேட்டனர். கடந்த முறை, “கை’யில் இருந்த கம்யூ.,கள், இம்முறை அ.தி.மு.க.,வில் இடம் பெற்றது, காங்.,கிற்கு பெரிய இழப்பு. அ.தி.மு.க., ஓட்டுகளை பாதிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட பா.ஜ., ஓட்டுகள், இறுதியில் மாறியது, அ.தி.மு.க.,வுக்கு பலமாக உள்ளது.

முதுகுளத்தூர்: அ.தி.மு.க., தரப்பில், அறிமுக வேட்பாளர் முருகன், தி.மு.க., சார்பில், அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் சத்தியமூர்த்தி இடையே போட்டி இருந்தது. சத்தியமூர்த்திக்கு தெரியாமல் தி.மு.க.,வினர் நடத்திய உள்ளடி வேலைகள், அ.தி.மு.க.,வுக்கு நல்ல பலம். இத்தொகுதியில் ஜான்பாண்டியன் போட்டியிட்டதால், இரண்டு கட்சிகளுக்கும் வரக்கூடிய ஆதிதிராவிடர் ஓட்டுகள் கணிசமாக குறைந்துள்ளது. ஜெ.,யின் நேரடி ஓட்டு சேகரிப்பு, அ.தி.மு.க.,வுக்கு கூடுதல் தெம்பை கொடுத்துள்ளது. அறிமுக வேட்பாளரிடம், தேர்தல் அனுபவம் தோற்காது என்ற நம்பிக்கையில், தி.மு.க.,வினர் உள்ளனர்.

(dm)

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s