வாக்கு எண்ணும் மையங்களுக்கு பலத்த பாதுகாப்பு: டிஜிபி போலோநாத்

தமிழகத்தில் மே 13-ம் தேதி வாக்கு எண்ணும் பணியின்போது, 3 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்று தமிழக டிஜிபி போலோநாத் தெரிவித்தார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

தமிழகத்தில் உள்ள 234 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் மையங்கள் 91 இடங்களில் உள்ளன.

மே 13-ல் வாக்கு எண்ணும் பணி நடைபெறுவதை முன்னிட்டு போலீஸôர், துணை ராணுவப் படையினர், மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் உள்ளிட்டோரின் 3 அடுக்கு தீவிர பாதுகாப்பு வளையம் அமைக்கப்படும்.

மாநிலத்தில் வாக்கு எண்ணும் மையங்கள் மட்டுமன்றி முக்கிய இடங்களிலும் 75,000 போலீஸôர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவர். இதுதவிர துணை ராணுவ படையின் 18 அணியினர் (கம்பெனி) தமிழகத்துக்கு புதன்கிழமை வரவுள்ளனர். சென்னை, திருச்சி, மதுரை ஆகிய இடங்களுக்கு விமானம் மூலம் வரும் இவர்கள், இதர பகுதிகளுக்கு பாதுகாப்புப் பணிக்காக பிரித்து அனுப்பப்பட உள்ளனர்.

தமிழகத்தில் அனைத்து தொகுதிகளிலும் வாக்குப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு சாதனங்கள் ஆகியவை வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறைகளைச் சுற்றிலும் மத்திய பாதுகாப்புப் படையினர் ஏற்கெனவே குவிக்கப்பட்டுள்ளனர். வாக்குப்பதிவு இயந்திரங்களை மையங்களுக்கு எடுத்துச் செல்லும் வழிநெடுகிலும் கம்பி வலைத் தடுப்புகள் அமைக்கப்படும்.

வாக்கு எண்ணும் மையத்துக்கு 100 மீட்டர் சுற்றளவுக்கு வெளியே மட்டுமே பொதுமக்கள் அனுமதிக்கப்படுவர். வாகனங்கள் இப்பகுதியில் அனுமதிக்கப்படாது. சாலைகளில் தடுப்புகள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படும்.

வாக்கு எண்ணும் மையங்களுக்கு உள்ளே (முதல் அடுக்கில்) வருவோரிடம், அடையாள அட்டைகள் உள்ளது குறித்து உள்ளூர் போலீஸôர், ஆயுதப் படையினர், அதிரடிப் படையினர், துணை வட்டாட்சியர் ஆகியோர் சோதனை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. ரோந்துப் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

செல் போன், கேமராக்களுக்கு தடை: 2-வது அடுக்கில் சிறப்பு காவல் படையினர், அதிரடிப்படை காவலர்கள், 3-வது அடுக்கில் ஆயுதம் தாங்கிய மத்திய பாதுகாப்புப் படையினரும் குவிக்கப்படுவர். இந்தப் பகுதிக்குள் செல் போன், கேமராக்கள் எடுத்துச் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணும் பணிகள் தடையில்லாமல் தொடரும் வகையில், மின்சார ஜெனரேட்டர்கள், மின் விளக்குகள், தீயணைப்பு சாதனங்களுடன் தீயணைப்புப் படையினரும் தயார் நிலையில் நிறுத்தப்படுவர்.

6,818 வழக்குகள் பதிவு: தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதி மீறல்கள் தொடர்பாக, இதுவரை 6,818 வழக்குகள் போலீஸôரால் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் பல்வேறு பகுதிகளில், பதிவான 4,587 வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 1,372 வழக்குகளில் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு, நீதிமன்ற உத்தரவின்பேரில் அபராதம் செலுத்துதல் உள்ளிட்ட தண்டனைகள் விதிக்கப்பட்டுள்ளன.

தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, தேர்தல் தொடர்பாக நிலுவையில் உள்ள வழக்குகள் அனைத்தும் விசாரித்து, விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும்.

வில்லூரில் இதுவரை 90 பேர் கைது: மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள வில்லூர் கிராமத்தில் இரு சமூகத்தினரிடையே ஏற்பட்ட மோதல் உள்ளிட்ட சம்பவங்கள் தொடர்பாக இதுவரை 90 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இப்போது இந்த கிராமத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் சட்ட ஒழுங்கு நிலை கட்டுக்குள் வந்துள்ளது. எனினும், போலீஸôர் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர். இந்த கிராமத்தில் அனைவரும் நல்லிணக்கத்துடன் வாழும் வகையில், இருதரப்பினரும் பங்கேற்கும் வகையில் அமைதிக் குழுக்கள் அமைத்தல் உள்ளிட்ட சமரச நடவடிக்கைகள் விரைவில் எடுக்கப்படும் என்றார் டிஜிபி போலாநாத். ஏடிஜிபி கே. ராதாகிருஷணன், தேர்தல் பிரிவு ஐ.ஜி. சுந்தரமூர்த்தி ஆகியோர் உடனிருந்தனர்.

(di)

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s