site4any

Free downloadable Tamil & Tamil dubbed movies, Free Tamil books & News, Articles, Health tips…

தபால் ஓட்டுகள் எண்ணிக்கை எப்படி?

Posted by sambala87(சூரியன்) on May 10, 2011

தேர்தல் ஓட்டு எண்ணிக்கையின் போது, யார் வெற்றி பெறுவர் என்பதை, தபால் ஓட்டுகளால் முடிவு செய்யும் நிலை ஏற்பட்டால், தேர்தல் பார்வையாளர் அல்லது தேர்தல் அலுவலர் மேற்பார்வையில், முதலில் இருந்து ஓட்டு எண்ணிக்கையை நடத்த வேண்டும் என, தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.

தபால் ஓட்டுகள் எண்ணப்படுவது குறித்து தேர்தல் கமிஷன் அறிவித்துள்ள விதிமுறைகள்: ஓட்டு எண்ணிக்கைக்கான நேரம் துவங்கியதும், முதலில் தபால் ஓட்டுகள் எண்ண வேண்டும். அதன் பிறகு, 30 நிமிடம் கழித்து தான், மின்னணு ஓட்டுகள் எண்ணப்படும். தபால் ஓட்டுகளை உதவி தேர்தல் அலுவலர் முன்னிலையில் எண்ணலாம். இதற்கு வேட்பாளர்கள் தனியாக, முகவர்களை நியமிக்கலாம்.

ஒவ்வொரு தபால் ஓட்டும், 13 பி என்ற கவருக்குள் வைத்து ஒட்டியிருக்க வேண்டும். அந்த கவருடன், ஒரு உறுதிமொழி படிவம் (13ஏ) வாக்காளர் கையெழுத்திட்டு, வைத்திருக்க வேண்டும். இந்த 13 பி, 13 ஏ படிவமும் சேர்த்து, 13 சி கவரில் வைத்து அனுப்பியிருக்க வேண்டும். ஓட்டு எண்ணும் மேற்பார்வையாளர், தேர்தல் நடத்தும் அலுவலரின் முகவரிக்கு வந்துள்ள, 13 சி கவரை கவனமுடன் பிரிக்கும் போது, உள்ளே இருக்கும், 13 ஏ, 13 பி கிழியாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

இதில், 13 ஏ உறுதிமொழிப் படிவம், 13 சி கவருக்குள் வைக்காமல் இருந்தால்; 13 ஏ படிவத்தில் வாக்காளர் கையெழுத்து இல்லாமல் இருந்தால்;13 ஏ படிவத்தில் உள்ள ஓட்டுச் சீட்டின் எண்ணும், 13 பியில் உள்ள எண்ணும் வேறுபட்டிருந்தால் அந்த ஓட்டை தள்ளுபடி செய்யலாம். ஒரு ஓட்டும் பதியாமல் இருந்தால்; ஒன்றிற்கு மேற்பட்ட வேட்பாளருக்கு ஓட்டளித்திருந்தால்; ஓட்டுச் சீட்டு சேதமடைந்திருந்தாலும், 13 பி கவரில் அனுப்பாமல் இருந்தாலும் அது தள்ளுபடி செய்யப்படும். யாருக்கு ஓட்டளிக்கப்பட்டது என கணிக்க முடியாமல் இருந்தாலும், அந்த ஓட்டு தள்ளுபடி செய்யப்படும்.

ஒரு ஓட்டுச் சீட்டில் எந்த வேட்பாளருக்கு எதிரே எந்த குறியீடும் இடலாம். குறியீட்டை இரண்டு கட்டத்திற்குள் பதிந்தால், அது தள்ளுபடி செய்யப்படும். அந்த கட்டத்திற்குள், எந்த இடத்தில் குறியிட்டாலும் தகுதியான ஓட்டாகும். அந்த கட்டத்திற்குள், ஒன்றுக்கு மேற்பட்ட குறியீடு இருந்தாலும், அது தகுதியான ஓட்டாகும். ஒரே கட்டத்தில் ஒன்றிற்கு மேற்பட்ட குறியீடு போட்டுள்ளதாக கூறி தள்ளுபடி செய்யக் கூடாது. தள்ளுபடி செய்த கவர்களை, தேர்தல் நடத்தும் அலுவலர் நிராகரித்த காரணத்தை குறிப்பிட்டு எழுத வேண்டும்.

வாக்காளர் பெயரை ரகசியமாக காப்பாற்ற, அவரது உறுதிமொழி படிவத்தை தனியாக கவரில் வைத்து, “சீல்’ வைக்க வேண்டும். இந்த நடைமுறைகளுக்கு பிறகு தான், 13 பி கவரில் உள்ள ஓட்டுச் சீட்டை வெளியில் எடுக்க வேண்டும்.

மேலும், தேர்தல் முடிவுகள் தபால் ஓட்டுகளால் முடிவு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டால், மீண்டும் முதலில் இருந்து தபால் ஓட்டுகளை எண்ண வேண்டும். அந்த நேரத்தில் தேர்தல் பார்வையாளர் அல்லது தேர்தல் நடத்தும் அலுவலர் மேற்பார்வையில் தபால் ஓட்டுகளை எண்ண வேண்டும்.

(dm)

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: