site4any

Free downloadable Tamil & Tamil dubbed movies, Free Tamil books & News, Articles, Health tips…

பயணப் பட்டியல் :கறுப்புப் பண சேமிப்பை கண்டறிய அதிரடி

Posted by sambala87(சூரியன்) on May 9, 2011

கறுப்புப் பண புழக்கத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்பதில், தீவிர அக்கறை காட்டி வரும் வருமான வரித்துறை, வரிச் சலுகை அளிக்கும் நாடுகளுக்கு பயணம் செய்தோர் மற்றும் வர்த்தக ரீதியாக அந்நாடுகளுக்கு விமானப் பயணம் மேற்கொண்டோர் குறித்த விவரங்களை தீவிரமாக ஆராயத் துவங்கியுள்ளது. அவர்களின் பட்டியலையும் பெற்று விசாரித்து வருகிறது.

சுவிட்சர்லாந்து உட்பட அன்னிய நாட்டு வங்கிகளில் இந்தியர்கள் டிபாசிட் செய்துள்ள கறுப்புப் பண விவகாரம், சமீபகாலமாக பெரும் சர்ச்சையை கிளப்பி வருகிறது. “அதை மீட்டுக் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என, மத்திய அரசுக்கு பல்வேறு தரப்பிலும் நெருக்கடி உருவாகியுள்ளது. குறிப்பாக, இது குறித்த பொதுநல வழக்கில் சுப்ரீம் கோர்ட் எழுப்பும் கேள்விகள், அரசுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தி வருகின்றன.இந்நிலையில், கறுப்புப் பணப் புழக்கத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்பதில், நிதியமைச்சகமும், வருமான வரித்துறையினரும் தீவிர அக்கறை காட்டி நடவடிக்கை எடுத்து வருகின்றன. வரிச் சலுகை அளிக்கும் நாடுகளான, சுவிட்சர்லாந்து, வெர்ஜின் தீவுகள் மற்றும் பகாமாஸ் போன்ற நாடுகளுக்கு, கடந்த ஆண்டில் பயணம் மேற்கொண்ட பிரமுகர் யார், யார். அவர்கள் என்ன காரணத்திற்காக அங்கு சென்றனர். அவர்களில் வருமான வரி கணக்குக் காட்டாதவர்கள் யார் என்பது குறித்தும் பரிசீலித்து வருகின்றனர்.

சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்திடம் இருந்து, வருமான வரித்துறையின் உளவுப் பிரிவினர் இந்த விவரங்களைப் பெற்று, ஆய்வு செய்து வருகின்றனர். இதில், வரிச் சலுகை அளிக்கும் நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டோரில் பலர், தெரிவித்த காரணங்கள் ஏற்கக் கூடியதாக இல்லை. அப்படியானால் அவர்கள் பதிலளிக்க வேண்டும் என்பதற்காக சாக்குப் போக்காக இப்படி தகவல் தெரிவித்திருக்கலாம் என்பதால், அடுத்த கட்ட விசாரணை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. பலர், வர்த்தகப் பயணம் என்று கூறிச் சென்றுள்ளனர். அப்படிச் சென்றவர்கள் கறுப்புப் பணத்தை டிபாசிட் செய்தனரா என்பது குறித்தும் இனி விசாரணை நடைபெறும். அதுமட்டுமின்றி, பயணம் மேற்கொண்டோரில் பலர் தங்களுக்காக இல்லாமல், தங்களுக்கு வேண்டியவர்களுக்காக, சில காரணங்களுக்காக பயணம் செய்திருக்கலாம் என நம்பப்படுகிறது. அதனால், அவர்களின் பயண விவரம் குறித்து விசாரிக்கப்பட உள்ளது.

ஏற்கனவே அமலாக்கப்பிரிவு கறுப்புப் பணம் குறித்து சில ஆய்வுகளை மேற்கொண்ட நிலையில், இம்மாதிரிப் பயணம் செய்தவர்கள் பற்றி தகவல் சேகரித்து, விமானப் பயணப் புலனாய்வுத்துறை அதிகாரிகள் அதை கம்ப்யூட்டர் தகவலுடன் ஒப்பிட்டு அதற்கு ஏற்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்டது.

(dm)

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: