site4any

Free downloadable Tamil & Tamil dubbed movies, Free Tamil books & News, Articles, Health tips…

எம்.பி.க்களின் சொத்துவிவரங்கள் இணையதளத்தில் வெளியிடப்படாது

Posted by sambala87(சூரியன்) on May 9, 2011

மாநிலங்களவை எம்பிக்களின் சொத்துவிவரங்கள் அரசு இணையதளத்தில் வெளியிடப்பட மாட்டாது என அந்த அவையின் நன்னெறிக் குழு தெரிவித்துள்ளது.

எனினும் 2004-ம் ஆண்டு அறிவிப்பின்படி மாநிலங்களவைத் தலைவரிடம் இருந்து அனுமதி பெற்றபின்னர் எந்தவொரு தனிநபரும் எம்பி ஒருவரின் சொத்துவிவரங்களையும், கடன்களையும் தெரிந்துகொள்ளலாம்.

முன்னதாக எம்பிக்களின் சொத்துவிவரங்களை இணையதளத்தில் வெளியிடுவது குறித்து ஆய்வுசெய்து அறிக்கை தருமாறு நன்னெறிக் குழுவிடம் மாநிலங்களவைத் தலைவர் கேட்டுக்கொண்டிருந்ததாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு மாநிலங்களவை சார்பில் பதிலளிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் குறித்து நன்னெறிக் குழு அதன் கூட்டத்தில் பரிசீலித்தது. விதிமுறைகளின்படி எம்பி ஒருவரின் சொத்து விவரம் குறித்து யாராவது கேட்டால் பின்னர் பரிசீலனைக்குப் பின் அதை அவருக்கு வழங்க முடியும் என அந்தக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இணையதளத்தில் எம்பிக்களின் சொத்து விவரங்களை வெளியிட வேண்டிய அவசியம் இல்லை என நன்னெறிக் குழு கருதுவதாக சமூகநல ஆர்வலர் எஸ்.சி.அகர்வாலுக்கு தகவல் அதிகாரி சுனிதா சேகரன் பதில் அளித்துள்ளார்.

தகவல் ஆணையர்களின் சொத்துவிவரங்களை இணையதளத்தில் வெளியிடுவது குறித்து மத்திய தகவல் ஆணையமும் இதே கருத்தைக் கொண்டிருந்தது. ஆனால் பின்னர் தானாகவே முன்வந்து தகவல் ஆணையர்களின் சொத்து விவரங்களை அதன் இணையதளத்தில் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

(di)

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: