site4any

Free downloadable Tamil & Tamil dubbed movies, Free Tamil books & News, Articles, Health tips…

சொன்ன வாக்குறுதியை காப்பாற்றுங்கள்………..

Posted by sambala87(சூரியன்) on May 8, 2011

பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் உறுதியான நடவடிக்கைகள் எடுப்பதன் மூலம் உங்கள் வாக்குறுதியை நிரூபியுங்கள்’ என, பாகிஸ்தானுக்கு, அமெரிக்கா அறிவுரை கூறியுள்ளது. அதேநேரத்தில், “ஒசாமா பின்லாடன் கொல்லப்பட்ட பின் பாக்., மீதான நம்பகத் தன்மை மீது சந்தேகம் வருகிறது’ என்று அமெரிக்க பார்லிமென்ட் ஆய்வுக் குழுவின் (சி.ஆர்.எஸ்.,) அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் 2003ம் ஆண்டில் இருந்து, ஒசாமா பின்லாடன் தங்கியிருந்தார். அவர் அங்கு இருந்தது பற்றி, தங்களுக்கு ஒன்றும் தெரியாது என, பாக்., சாதித்து வருகிறது. இதுகுறித்து அமெரிக்க எம்.பி.,க்கள் மற்றும் அரசியல் நிபுணர்கள் பல்வேறு கேள்விக் கணைகளைத் தொடுத்து வருகின்றனர். எந்தக் கேள்விக்கும் பாகிஸ்தானிடம் இருந்து சரியான பதில் வரவில்லை.

இந்நிலையில், அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மார்க் டோனர் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது: பயங்கரவாதத்துக்கு எதிரான போரில், உறுதியான நடவடிக்கைகளை பாகிஸ்தானிடம் இருந்து எதிர்பார்க்கிறோம். அதேநேரம், பயங்கரவாதத்துக்கு எதிரான அமெரிக்கா, பாக்., கூட்டணி, சில நல்ல பலன்களைத் தந்துள்ளது. பாக்.,ல் இயங்கி வரும் அல்-குவைதா மற்றும் பிற பயங்கரவாத இயக்கங்கள் மீது அந்நாட்டு அரசு, தனது நெருக்கடியை அதிகரிக்க வேண்டும். பயங்கரவாதம் தான் பாகிஸ்தானுக்கு மிகப் பெரிய அச்சுறுத்தல். பின்லாடன், பாகிஸ்தானில் தங்கியிருந்தது பற்றி அமெரிக்கா பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. விரைவில் பதில் தருவதாக பாக்., கூறியுள்ளது. எனினும், இவ்விசாரணை முடிவுக்கு வர சில காலம் எடுத்துக் கொள்ளும். இருதரப்பு நலன் கருதி, பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் பாக்.,உடன் அமெரிக்கா தொடர்ந்து செயலாற்றும். இவ்வாறு மார்க் டோனர் தெரிவித்தார்.

சந்தேகம் வருகிறது: இதற்கிடையில், அமெரிக்க எம்.பி.,க்களுக்காக, அமெரிக்க பார்லிமென்ட் ஆய்வுக் குழு (சி.ஆர்.எஸ்.,) தயாரித்து வெளியிட்ட அறிக்கையில், அமெரிக்கா – பாக்., உறவு பற்றிக் கூறப்பட்டிருப்பதாவது: ஒசாமா கொல்லப்பட்ட சம்பவமும் சூழலும், பயங்கரவாதத்துக்கு எதிரான நோக்கத்தில் பாக்., பற்றிய அமெரிக்காவின் நீண்ட கால சந்தேகங்களை மேலும் அதிகரிக்க வைத்துள்ளன. இது அமெரிக்காவின் பாக்., உறவை எதிர்காலத்தில் சீர்குலைக்கவே செய்யும்.பின்லாடன் வேட்டை இரண்டு முடிவுகளைத் தருகிறது. ஒன்று, பாகிஸ்தானில் பின்லாடன் ஒளிந்திருப்பதற்கு சில அதிகாரிகள் துணைபுரிந்திருக்க வேண்டும். இரண்டு, அல்- குவைதா தலைவர்களைத் தேடுவதில் பாக்., ராணுவம் மற்றும் உளவுத் துறை இரண்டும் முற்றிலும் செயல்திறமையற்று இருந்திருக்க வேண்டும். பல ஆண்டுகளாக, பின்லாடன் உள்ளிட்டவர்கள் பாகிஸ்தானில் இல்லை என்று அந்நாட்டு அதிகாரிகள் சொல்லி வந்தனர். இதனாலேயே இப்போது பாக்., மீதான நம்பகத் தன்மை பலத்த அடி வாங்கிவிட்டது. ராணுவ அகடமியின் அருகில், வசதியான ஒரு வீட்டில் பல ஆண்டுகளாக பின்லாடன் தங்கியிருந்திருக்கிறார் என்பது இப்போது தெரியவந்துள்ளது. அதனால் தான், பாகிஸ்தானுக்கு தொடர்ந்து நிதியுதவி செய்துதான் ஆக வேண்டுமா என்பதில் அமெரிக்க பார்லிமென்ட், தனது ஆட்சேபனையை மேலும் அதிகரித்துள்ளது. இவ்வாறு சி.ஆர்.எஸ்., அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

(dm)

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: