site4any

Free downloadable Tamil & Tamil dubbed movies, Free Tamil books & News, Articles, Health tips…

கடந்த 10 ஆண்டுகளில் பாகிஸ்தானுக்குஅமெரிக்கா வழங்கியது ரூ. 92 ஆயிரம் கோடி

Posted by sambala87(சூரியன்) on May 8, 2011

பாகிஸ்தான் அளித்து வரும், பயங்கரவாத ஒத்துழைப்பிற்காக, கடந்த 10 ஆண்டுகளில், அந்நாட்டிற்கு அமெரிக்கா அளித்த நிதி உதவி, 92 ஆயிரம் கோடி ரூபாய் என்பது தெரிய வந்துள்ளது.
அமெரிக்கா மீது, அல்-குவைதா, 2001, செப்டம்பர் 11ம் தேதி, தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலுக்கு பின், பயங்கரவாதத்தை அடக்க, அமெரிக்காவுக்கு பாகிஸ்தான் உதவி தேவைப்பட்டது. பாகிஸ்தானுக்கோ நிதி உதவி தேவைப்பட்டது. இதை அமெரிக்கா நன்றாக பயன்படுத்தி கொண்டது.”அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்ட ஒபாமா, அமெரிக்கா மீது தாக்குதல் நடத்தியவர்கள் கொல்லப்படுவார்கள் அல்லது உயிருடன் பிடிக்கப்படுவார்கள்’ என, தேர்தல் வாக்குறுதி அளித்தார்.இந்த வாக்குறுதியை காப்பாற்ற, அதிபராக பொறுப்பேற்ற பின், பாகிஸ்தானுக்கு அளித்த வந்த நிதி உதவியை இரட்டிப்பு செய்தார். 2008ல், 9,200 கோடி ரூபாய், 2009ல், 13 ஆயிரத்து, 800 கோடி ரூபாய், 2010ல், 19 ஆயிரத்து, 780 கோடி ரூபாய், அமெரிக்காவால் பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டது.
ஒசாமாவை சுட்டுக் கொன்ற பின், அமெரிக்க அரசியல்வாதிகளால் மட்டுமின்றி, உலக நாடுகளால் எதிர்பார்க்கப்படுவது, பாகிஸ்தானுக்கு அளித்து வந்த நிதி உதவியை அமெரிக்கா, தொடருமா, தொடராதா என்பது தான்.”பாகிஸ்தானுக்கு நிதி உதவி வழங்கக் கூடாது’ என்று, அமெரிக்க அரசியல்வாதிகள் குரல் எழுப்பியுள்ளனர். அமெரிக்காவின் கொள்கை முடிவில் மாற்றம் இருக்குமா என்பது உறுதிப்படுத்தாத நிலையில், “பாகிஸ்தானுடன் தொடர்ந்து அமெரிக்கா பணியாற்றும்’ என்று, அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் கூறியிருப்பதும் பல்வேறு வியூகங்களை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த, 2002ல் இருந்து, பாகிஸ்தானுக்கு, அமெரிக்கா, இதுவரை, 92 ஆயிரம் கோடி ரூபாய் வழங்கியுள்ளது. 1947 முதல், 2000ம் ஆண்டு வரை பாகிஸ்தானுக்கு அமெரிக்கா அளித்த நிதி உதவி, 55 ஆயிரத்து, 200 கோடி ரூபாய். அதாவது, 53 ஆண்டுகளில் அளித்ததை விட, வெறும் பத்தாண்டுகளில் மட்டும் பாகிஸ்தானுக்கு நிதி உதவியை அமெரிக்கா அள்ளி, அள்ளி கொடுத்துள்ளது.
ஆனால், இந்த 10 ஆண்டு நிதி உதவியில், பாதுகாப்பு தொடர்பான நிதி உதவியாக, 59 ஆயிரத்து, 800 கோடி ரூபாய், பொருளாதார நிதி உதவியாக, 27 ஆயிரத்து, 600 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.இப்படி அளிக்கப்பட்ட நிதி உதவியை அமெரிக்கா எதற்காக பயன்படுத்தியது என்ற தெளிவான பதிலை பாகிஸ்தானிடம் இருந்து கேட்டு பெற வேண்டும் என்று அமெரிக்க அரசியல் கட்சிகள் தற்போது குரல் எழுப்புகின்றன.
பாதுகாப்பு காரணங்களுக்காக வழங்கப்படும் நிதி உதவி எதற்காக பயன்படுத்தப்படுகிறது என்பதை கண்காணிக்க வேண்டும் என்ற ஆலோசனையும் எழுந்துள்ளது. அமெரிக்க மக்களின் பணம் தவறான வழியில் வீணடிக்கப்படுவதை விரும்பவில்லை என்று அமெரிக்காவில் மாற்று கருத்து உருவாகியுள்ளது. இதுவரை பாதுகாப்பு காரணங்களுக்காக மட்டுமே, பாகிஸ்தானுக்கு அதிகளவில் நிதி உதவியை அமெரிக்கா அளித்து வந்துள்ளது.அமெரிக்க விஞ்ஞானிகள் கூட்டமைப்பின் சார்பில் இந்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

(dm)

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: