site4any

Free downloadable Tamil & Tamil dubbed movies, Free Tamil books & News, Articles, Health tips…

ஒசாமாவின் விடியோ டேப்புகள் வெளியீடு

Posted by sambala87(சூரியன்) on May 8, 2011

ஒசாமா பின்லேடன் சுட்டுக் கொல்லப்பட்ட அபோட்டாபாத் மாளிகையில் கைப்பற்றப்பட்ட 5 விடியோக்களை அமெரிக்கா சனிக்கிழமை வெளியிட்டது.

போர்வையை உடலில் போர்த்தி, தரையில் அமர்ந்தபடி, ஒரு கையில் ரிமோட் கன்ட்ரோலை வைத்துக் கொண்டு பின்லேடன் டி.வி. பார்ப்பது போன்று ஒரு விடியோவில் பதிவாகியிருக்கிறது. டிவியிலும் அவரது படமே ஓடிக் கொண்டிருக்கிறது. தாடியும் தலைமுடியும் நரைத்தது போன்று அந்த விடியோவில் அவர் காணப்படுகிறார்.

டிவியைச் சுற்றிலும் செல்லும் வயர்கள் அருகிலுள்ள கட்டுப்பாட்டுப் பெட்டியுடன் இணைக்கப்பட்டிருக்கின்றன.

மற்றொரு விடியோவில் அவர் நீண்ட அங்கியும் தலைப்பாகையும் அணிந்திருக்கிறார். முடிக்கு சாயம் பூசியும், தாடியை ட்ரிம் செய்தும் காணப்படுகிறார். வேறொரு விடியோவில் அவர் பேசுவதற்கு ஒத்திகை பார்ப்பது போலத் தெரிகிறது.

அவரது விடியோவை அவரே தயாரித்திருப்பதாகக் கூறப்படுகிறது. எனினும் எந்த விடியோவிலும் ஆடியோ இல்லை.

இந்த விடியோக்களை அமெரிக்க உளவுத்துறை அதிகாரி ஒருவர் பென்டகனில் சனிக்கிழமை வெளியிட்டார்.

அபோட்டாபாத் வீட்டில் ஒரு கம்ப்யூட்டர் இருந்திருப்பதும் இந்த விடியோ மூலம் தெரியவந்திருக்கிறது. டி.வி.க்காக சாட்டிலைட் டிஷ் ஒன்றும் அந்த வளாகத்தில் இருந்ததை சிஐஏ அதிகாரிகள் கண்டுபிடித்திருக்கின்றனர்.

பல்வேறு தொலைபேசி எண்களைக் கொண்ட ஆவணங்களும் அங்கு கைப்பற்றப்பட்டிருக்கின்றன.

ஆப்கானிஸ்தான் குகையிலும் காடுகளிலும் பின் லேடன் வசித்து வருவதாகவும், நாட்டு நடப்புகளும் அன்றாடச் செய்திகளும் அவருக்கு உடனடியாகத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்றும் கூறப்பட்டு வந்தது. ஆனால், போதுமான தகவல்தொடர்பு வசதியுடன் அவர் இருந்திருக்கிறார் என்பது இப்போது தெரியவந்திருக்கிறது.
(di)

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: