site4any

Free downloadable Tamil & Tamil dubbed movies, Free Tamil books & News, Articles, Health tips…

ஏழைகளுக்கு உணவு தானியம் :அமைச்சர் உறுதி

Posted by sambala87(சூரியன்) on May 8, 2011

“உணவு பாதுகாப்பு மசோதாவின் கீழ், கோதுமை ஏற்றுமதி அறிவிப்புக்கு முன், ஏழை குடும்பங்களுக்கு, போதிய உணவு தானியங்கள் இருப்பில் இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்த வேண்டும்’ என்று, மத்திய உணவு மற்றும் நுகர்வோர் விவகாரத்துறை இணை அமைச்சர் கே.வி. தாமஸ் கூறினார்.

பஞ்சாபில், கோதுமை கொள்முதல் குறித்து ஆய்வு நடத்த வந்த, மத்திய இணை அமைச்சர் கே.வி. தாமஸ், சண்டிகரில் அளித்த பேட்டியில் கூறியதாவது:கோதுமை ஏற்றுமதி என்பது பெரிய அளவிலான கொள்கை விஷயம். தற்போது, நாட்டில் 6.53 கோடி குடும்பங்கள், வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளன. இவர்களுக்கு, உணவு பாதுகாப்பு மசோதாவின் கீழ், தலா 35 கிலோ உணவு தானியம் வழங்க வேண்டியது இருக்கலாம். பல்வேறு மாநிலங்களுக்கு, 50 லட்சம் டன் உணவு தானியங்கள் வழங்க, அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இன்னும், இம்மாநிலங்களின் தேவைகளை பூர்த்தி செய்ய உணவு தானியங்கள் தேவைப்படுகின்றன.கோதுமை ஏற்றுமதிக்கு அனுமதி வழங்குவது, சர்வதேச அளவில் விலையை பாதிக்கும். விஞ்ஞான ரீதியில், நாடு முழுவதும், 20 லட்சம் டன் உணவு தானியங்களை சேமித்து வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தனியார் நிறுவன உத்தரவாத திட்டத்தின் கீழ், கூடுதலாக, 150 டன் உணவு தானியங்கள் சேமித்து வைப்பதற்கான பணிகள் நடந்து வருகின்றன.

இதில், பஞ்சாபில் 50 லட்சம் டன், அரியானாவில் 38 லட்சம் டன் சேமித்து வைக்கப்படும்.பஞ்சாபில் இருந்து, மற்ற மாநிலங்களுக்கு, உணவு தானியங்கள் கொண்டு செல்வதில் சிக்கல் உள்ளது. சரக்கு ரயில் போக்குவரத்தை விரைவுபடுத்த வேண்டியுள்ளது.அரசின் அனைத்து சேமிப்புக் கிடங்குகளிலும், கம்ப்யூட்டர் வசதி ஏற்படுத்திய பின்னர், உணவு தானிய இருப்பை கண்காணிக்க கேமரா பொருத்தப்படும். கடந்த ஐந்தாண்டுகளுக்கு முன், உணவு தானிய வீணடிப்பு, 2.5 சதவீதமாக இருந்தது. இது தற்போது, 0.2 சதவீதமாக குறைந்துள்ளது. கடந்தாண்டு, நாட்டில், 18 ஆயிரம் டன் உணவு தானியங்கள் வீணானது.

தற்போது நடந்து வரும் கோதுமை கொள்முதலில், எனக்கு திருப்தி உள்ளது. விவசாயிகளுக்கு, நேரடியாக அரசே பணம் பட்டுவாடா செய்வதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.இவ்வாறு இணை அமைச்சர் கே.வி. தாமஸ் கூறினார்.கடந்த 2007ம் ஆண்டில் இருந்து, கோதுமை ஏற்றுமதிக்கு நாட்டில் தடை உள்ளது குறிப்பிடத்தக்கது.

(dm)

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: