“ஸ்பெக்ட்ரம்’ வழக்கு: சி.பி.ஐ., மீது குற்றச்சாட்டு

டில்லி பாட்டியாலா சி.பி.ஐ., கோர்ட்டில் நேற்று நடந்த “ஸ்பெக்ட்ரம்’ ஊழல் வழக்கில் சரத்குமார் ரெட்டியின் வக்கீல் அல்தாப் சி.பி.ஐ., குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்து வாதாடினார்.

சரத்குமார் ரெட்டியின் வக்கீலான அல்தாப் வாதிட்டார். அப்போது அவர் கூறியதாவது: சினியுக் நிறுவனத்திடம் இருந்து வாங்கிய கடனை 10 சதவீத வட்டியுடன் கலைஞர் “டிவி’ திருப்பித் தந்தது. மிகக் குறைந்த வட்டியுடன் திருப்பிச் செலுத்தியுள்ளதாக சி.பி.ஐ., குற்றம் சாட்டுகிறது. சி.பி.ஐ.,யின் இந்தக் கூற்று புதிராக உள்ளது. வட்டி எவ்வளவு என்பதை ரிசர்வ் வங்கிதான் முடிவு செய்கிறது. அன்றைய காலகட்டத்தில் ரிசர்வ் வங்கி என்ன வட்டி வீதத்தை வைத்திருந்ததோ அதன்படியே கலைஞர் “டிவி’யும் கடனை திருப்பிச் செலுத்தியது. இதில் தவறு இல்லை. இவ்வாறு அல்தாப் வாதிட்டார்.

பின்னர் சி.பி.ஐ., வக்கீல் லலித் பேச முற்பட்டார். தனது வாதங்களை கேட்க வேண்டுமென அவர் நீதிபதியிடம் கேட்டுக் கொண்டிருந்தபோதே, பல்வாவின் வக்கீல் குறுக்கிட்டார். ” எனது கட்சிக்காரர் சிறையில் உள்ளார். அவருக்கு ஜாமின் வழங்குவது குறித்த எனது வாதத்தை கேட்க வேண்டும். பணபரிமாற்றங்கள் நடந்துள்ளதாக சி.பி.ஐ., குற்றம் சாட்டுகிறது. அவர்களின் வாதப்படியே பார்த்தாலும், பணம் வாங்கியவர்களுக்கு சம்மன் மட்டுமே சி.பி.ஐ., அனுப்பியுள்ளது. பணம் வழங்கியவர்களாக கூறப்படுவோர் அனைவரையும் சிறையில் அடைத்துள்ளது. இது விசித்திரமாக உள்ளது’ என்றார். மதிய உணவு இடைவேளையை தொடர்ந்து, பல்வா வக்கீல் மாலை வரை வாதிட்டார். நேரம் ஆகிவிடவே தன் வாதங்களை நாளை (இன்று) வைப்பதாக சி.பி.ஐ., வக்கீல் லலித் கூறினார். நீதிபதி சைனி முடிவாக, “ஜாமின் மனுக்கள் குறித்த விசாரணை முடிந்து உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை ஏற்கனவே உள்ள உத்தரவு அமலில் இருக்கும்’ என்றார்.

கோர்ட்டில் பெரும் பரபரப்பு

* பாட்டியாலா கோர்ட்டில் சைனியின் சி.பி.ஐ., கோர்ட் மட்டும் நேற்று காலை முதலே மிகவும் பரபரப்பாக இருந்தது. காலை 8.30 மணிக்கே தி.மு.க.,வினர் குவியத் துவங்கினர்.

* டி.ஆர்.பாலு, இளங்கோவன், ஆதிசங்கர், சிவா, செல்வகணபதி, ராமலிங்கம், சுகவனம், செல்வேந்திரன் உள்ளிட்ட பலரும் முன்கூட்டியே வந்திருந்தனர்.

* காலை 9.50 மணிக்கு கனிமொழி, அவர் கணவர் அரவிந்தன், சரத்குமார் ரெட்டி ஆகியோர் ஒன்றாக காரில் வந்திறங்கினர்.

* 10 மணிக்கு கோர்ட் அறைக்குள் நீதிபதி ஓ.பி.சைனி வந்து தன் இருக்கையில் அமர்ந்தார்.

* கோர்ட் அறைக்குள் கிரிமினல் வக்கீல் ராம்ஜெத்மலானி வந்ததும், டி.ஆர்.பாலு தனது இருக்கையை அவருக்காக விட்டுக் கொடுத்து, அமரும்படி கேட்டுக் கொண்டார்.

* கோர்ட் முழுவதும் நிரம்பி வழிந்ததால், ராம்ஜெத்மலானி என்ன பேசுகிறார் என்பதை யாராலும் கேட்க முடியவில்லை. ஒரே இரைச்சலாக இருந்தது.

* கோர்ட்டுக்கு வரும் போது லேசான பச்சை நிற சல்வார் உடையில் கனிமொழி வந்திருந்தார்.

* கோர்ட் அறையில் முன்வரிசையில் கனிமொழி அமர்ந்திருந்தார். அவருக்கு ஒருபுறம் அரவிந்தனும், மற்றொருபுறத்தில் சரத்குமார் ரெட்டியும் அமர்ந்து கோர்ட் நடவடிக்கைகளை கவனித்தனர்.

* ராஜாவும், கனிமொழியும் உணவு இடைவேளைக்கு பிறகு, கோர்ட் அறைக்குள் பேசிக் கொண்டனர்.

* கோர்ட்டில் வாதம் நடந்து கொண்டிருந்த போது தி.மு.க., எம்.பி., ஆதிசங்கர் திடீரென மயங்கி விழுந்ததால், அரை மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது. அவருக்கு முதலுதவி அளித்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s