site4any

Free downloadable Tamil & Tamil dubbed movies, Free Tamil books & News, Articles, Health tips…

போதைக்கு அடிமையாகும் குடிசை வாழ் சிறுவர்கள்

Posted by sambala87(சூரியன்) on May 8, 2011

மும்பையில் உள்ள மன்குர்ட், கோவண்டி குடிசைப் பகுதிகளில் வசிக்கும் சிறுவர்கள், அதிகளவில் போதை பொருட்களுக்கு அடிமையாவது, ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

மும்பையில் உள்ள மன்குர்ட், கோவண்டி குடிசைப் பகுதிகளில் அண்மையில் 12 பேர் கொண்ட டாக்டர்கள் குழு ஒன்று ஆய்வு நடத்தியது. அதில், அந்த குடிசைப் பகுதிகளில் வசிக்கும் சிறுவர்களில் 90 சதவீதம் பேர், புகை, மது, பாக்கு உள்ளிட்ட போதை பொருட்களுக்கு அடிமையாகி உள்ளது தெரியவந்தது. ஏழு வயதிலேயே இந்த சிறுவர்கள் சிகரெட் உள்ளிட்ட போதைப் பொருட்களை பயன்படுத்தத் தொடங்குவது தெரியவந்தது

இதுகுறித்து அந்த டாக்டர்கள் குழுவினர் கூறியதாவது: இங்குள்ள குடிசைப் பகுதியில், 300 குடும்பங்களை தேர்ந்தெடுத்து, 1,500 சிறுவர்களிடம் இந்த ஆய்வுகளை நடத்தினோம். இதில், 80 சதவீத சிறுவர்கள், சிகரெட் மற்றும் மதுப்பழக்கங்களுக்கு அடிமையாகி உள்ளனர். 90 சதவீதம் பேர், போதை பாக்குகளை பயன்படுத்துகின்றனர். மேலும், இந்த சிறுவர்கள் 10 வயதிலேயே குற்றச் செயல்களிலும் ஈடுபடத் தொடங்குகின்றனர். போதைப் பாக்கு பயன்படுத்துவதால், இந்த சிறுவர்களில் 1,000 பேருக்கு மேல், பல் தொடர்பான அபாயமான நோய்கள் ஏற்பட்டுள்ளன.

புகை மற்றும் மது பழக்கங்களால், 200 க்கும் அதிகமான சிறுவர்கள், சுவாசக் கோளாறு உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து, எங்கள் ஆய்வறிக்கையை, மாநில தலைமை செயலரிடம் அளித்துள்ளோம். அந்த அறிக்கையின் அடிப்படையில், பல்வேறு சுகாதார நடவடிக்கைகள் மேற்கொள்ள உள்ளதாக, அரசு தரப்பில் தெரிவித்துள்ளனர். இந்த குடிசைப் பகுதியில் வசிக்கும் பெரும்பாலானோருக்கு, சரியான வேலையோ, கல்வியறிவோ எதுவும் இல்லை. எனவே, அவர்கள் தங்கள் பிள்ளைகளை, சரியான முறையில் கண்காணிக்கத் தவறி விடுகின்றனர். கட்டுப்பாடற்ற சுதந்திரம் கிடைப்பதால், அந்த சிறுவர்கள், தவறான நபர்களுடன் சேர்ந்து, தவறான பழக்க வழக்கங்களுக்கு அடிமையாகின்றனர். இவர்கள் வளர்ந்து 20 வயதை தொடும் முன்பாகவே, பல்வேறு சமூக விரோத செயல்களில் ஈடுபடத் தொடங்கி விடுகின்றனர். எனவே பெற்றோர், தங்கள் பிள்ளைகளின் நடவடிக்கைகளை கண்காணிக்க வேண்டியது மிக அவசியம். இவ்வாறு டாக்டர்கள் கூறினர்.

(dm)

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: