தமிழக மக்களின் ஒத்துழைப்பு பாராட்டத்தக்கது: குரேஷி

“கடந்த சட்டசபை தேர்தலில், மக்களின் பங்களிப்பு அபரிமிதமாக இருந்தது. குறிப்பாக, தமிழக மக்கள் தேர்தல் கமிஷனுக்கு முழு ஒத்துழைப்பும், ஆலோசனைகளையும் வழங்கி, உற்சாகப்படுத்தியுள்ளனர்,” என, தலைமை தேர்தல் கமிஷனர் குரேஷி கூறியுள்ளார்.

தமிழகத்தில், சட்டசபை தேர்தல் நடந்து முடிந்துள்ளது. முன் எப்போதும் இல்லாத அளவிற்கு, தேர்தல் கமிஷன், இந்த தேர்தலில் தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை, கடுமையாக பின்பற்றியது. குறிப்பாக, ஓட்டுக்கு பணம் கொடுக்கும் விஷயத்தில், தேர்தல் கமிஷன் மிக கடுமையாக நடந்து கொண்டது. குறிப்பிட்ட சில அரசியல் கட்சிகள், தேர்தல் கமிஷனின் இந்த நடவடிக்கைக்கு, எதிர்ப்பு தெரிவித்தன. எதிர்க்கட்சிக்கு ஆதரவாக, தேர்தல் கமிஷன் செயல்படுகிறது என, ஆளும் கட்சி தலைவர்கள் விமர்சனம் செய்து வந்தனர். இருப்பினும், சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில், 78 சதவீதம் ஓட்டு பதிவு நடந்தது. மக்களின் இந்த பேராதரவு, தேர்தல் கமிஷனுக்கு கிடைத்த பெரும் வெற்றி என்று பத்திரிகைகளும், அரசியல் பார்வையாளர்களும் பாராட்டியுள்ளனர். இந்நிலையில், கடந்த சட்டசபை தேர்தலில் தமிழக மக்களின் பங்களிப்பு பாராட்டும் படியாக இருந்தது என, தலைமை தேர்தல் கமிஷனர் குரேஷி, சி.என்.பி.சி., டிவி 18 என்ற தனியார் தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

குரேஷி அளித்துள்ள பேட்டி: ஐந்து மாநிலங்களிலும் நடந்த சட்டசபை தேர்தலில், வாக்காளர்களிடம் காணப்பட்ட மாற்றம் வரலாற்றில் இல்லாத ஒன்றாகும். இதற்கு மூன்று காரணங்களை கூறலாம். வாக்காளர்கள் பயமின்றி ஓட்டுப் போடும் சூழ்நிலையை உருவாக்கியது; தேர்தலில் புதுமையான தொழில் நுட்பங்களை புகுத்தியது; வாக்காளர்கள் மத்தியில் ஓட்டு போட வேண்டிய அவசியத்தை கூறி, விழிப்புணர்வை ஏற்படுத்தியது ஆகியவையே, முன் எப்போதும் இல்லாத அளவிற்கு, ஓட்டுப் பதிவு அதிகரித்ததற்கு காரணங்கள்.

வாக்காளர்களின் எண்ண ஓட்டத்தை அறிந்து கொண்டு, அதற்காக அறிவியல் ரீதியாக எடுக்கப்பட்ட பல நடவடிக்கைகள், எங்களுக்கு, கடந்த சட்டசபை தேர்தல்களில் நல்ல பலனை கொடுத்துள்ளன. ஐந்து மாநிலங்களிலும் நடந்த சட்டசபை தேர்தல்களில் மக்களின் பங்களிப்பு அபரிமிதமாக இருந்தது. குறிப்பாக, தமிழகத்தில் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு, மக்கள் ஓட்டளித்துள்ளனர். தமிழகத்தில் நடந்த தேர்தல் குறித்து, பல்வேறு சமூக நலச் சங்கங்களிடம் இருந்தும், ஜனநாயக அமைப்புக்களிடம் இருந்தும், நல்ல விமர்சனங்களை பெற்றுள்ளோம். தேர்தல் நேரத்தில் இந்த அமைப்புக்கள், அரசியல்வாதிகளின் முறையற்ற நடவடிக்கைகள் குறித்த தகவல்களை, உடனுக்குடன் கொடுத்து உதவின. அவர்கள் கொடுத்த தகவல்களின் பேரில், உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும், என்னென்ன செய்ய வேண்டும் என்று அவர்கள் கொடுத்த ஆலோசனைகள், எங்களுக்கு மிகவும் உதவிகரமாக இருந்தன.

அரசியல்கட்சிகளின் அடாவடித் தனங்கள், முறைகேடுகள், பணப்பட்டுவாடா ஆகியவை குறித்து, பொதுமக்களும் எனக்கு தகவல் கொடுத்தனர். தினசரி, 200 முதல் 300 இ-மெயில்கள், எனக்கு வந்தன. தகவல் கொடுத்தவர்களின் பெயர்கள், ரகசியமாக வைக்கப்பட்டு, உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது. விதிமுறை மீறல் குறித்த தகவல்களை கொடுத்து, ஜனநாயகத்தை காக்க வேண்டிய தங்கள் கடமையை, மக்கள் நிறைவேற்றியுள்ளனர். அவர்களுக்கு இந்த நேரத்தில், மனம் நிறைந்த பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்ள வேண்டியது எனது கடமை. இவ்வாறு தலைமை தேர்தல் கமிஷனர் குரேஷி கூறியுள்ளார்.

(dm)

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s