ஒரு கோடி ரூபாய் வேண்டாம்: மறுத்தார் அன்னா ஹசாரே

ஊழலை ஒழிக்க லோக்பால் மசோதாவை விரைவில் கொண்டுவர வலியுறுத்தி, உண்ணாவிரதப் போராட்டம் நடத்திய அன்னா ஹசாரே, தனக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட, ஒரு கோடி ரூபாயுடன் கூடிய ரவீந்திரநாத் தாகூர் விருதை ஏற்கப்போவதில்லை என, அறிவித்துள்ளார்.

ஊழலுக்கு எதிரான லோக்பால் மசோதாவை பார்லிமென்டில் கொண்டு வரவும், வரைவு மசோதா தயாரிக்கும் குழுவில் பொதுமக்கள் பிரதிநிதிகளும் இடம் பெற வேண்டும் என வலியுறுத்தி காந்தியவாதியும், சமூக ஆர்வலருமான அன்னா ஹசாரே, உண்ணாவிரதம் இருந்தார். இதற்கு இந்தியா முழுவதும் எழுச்சியும், ஆதரவும் கிடைத்தது. இதையடுத்து, சர்வதேச அளவில் அன்னா ஹசாரே பெயர் பிரபலமானது. இந்நிலையில், இந்திய திட்டம் மற்றும் மேலாண்மை நிறுவனம், அன்னா ஹசாரேவுக்கு ரவீந்திரநாத் தாகூர் விருதும், ஒரு கோடி ரூபாய் பரிசுப் பணமும் வழங்கப்படும் என அறிவித்தது.

இது குறித்து இந்நிறுவனத்தின் முதல்வர் பேராசிரியர் அரிந்தம் சவுத்ரி விடுத்த அறிவிப்பில், “ஊழலுக்கு எதிராக அமைதியான முறையில் அறப்போராட்டம் நடத்தி, உறுதியான ஒருமைப்பாட்டை ஏற்படுத்தியவர் என்ற அடிப்படையில் ஹசாரே விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்’ என்றார். இது குறித்து நேற்று அகமது நகர் மாவட்டத்தில் ரலேகானில் நிருபர்களுக்கு பேட்டியளித்த அன்னா ஹசாரே, “டில்லியை சேர்ந்த அமைப்பு அறிவித்துள்ள விருதை நான் ஏற்கப்போவதில்லை. எதற்காக இந்த முடிவை எடுத்தேன் என சொல்லமாட்டேன். இந்த விருதை ஏற்க வேண்டாம் என மனது சொல்கிறது’ என்றார். மற்றொரு கேள்விக்கு பதிலளிக்கையில்,”தான் நடத்திவரும் தன்னார்வ நிறுவனமான இந்து ஸ்வராஜ் அறக்கட்டளை சார்பில், முழு ஆண்டு தணிக்கை அறிக்கை தாக்கல் செய்யவில்லை என புகார் தெரிவித்துள்ள, புனேயிலுள்ள அறக்கட்டளை கமிஷனர் அலுவலகத்தின் மீது மான நஷ்ட வழக்கு தொடர முடிவு செய்துள்ளேன்’ என்றார்.

(dm)

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s