கனிமொழி கைதாக மாட்டார்?..திமுகவின் தைரியம்!

2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் திமுக எம்பி கனிமொழி தவிர, கலைஞர் தொலைக்காட்சியின் நிர்வாகி சரத்குமார் ரெட்டி, சினியுக் பிலிம்ஸ் புரமோட்டர் கரீம் மொரானி ஆகியோரும் நாளை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும்.

இந் நிலையில் கரீம் மொரானி முன்ஜாமீன் கோரி சிபிஐ நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். அதில், தன்னை சிபிஐ கைது செய்ய வாய்ப்பிருப்பதாக மொரானி கூறி்யுள்ளார்.

இந்த ஜாமீன் மனு நேற்று விசாரணைக்கு வந்தபோது சிபிஐ தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், நாங்கள் மொரானியை கைது செய்வோம் என்று கூறுவது தவறான கருத்து (‘misconceived’) என்றார்.

இதனால் அவரை சிபிஐ கைது செய்ய வாய்ப்பில்லை என்று தெரிகிறது.

கலைஞர் டிவிக்கு ரூ. 214 கோடி தரப்பட்டது தொடர்பான பண பரிவர்த்தனை வழக்கில் தான் மொரானியும், கனிமொழியும் சிபிஐ ற்றப்பத்திரிக்கையில் சேர்க்கப்பட்படுள்ளனர். இதில் மொரானியை சிபிஐ கைது செய்யும் திட்டத்தில் இல்லாவிட்டால், அதே அடிப்படையில் கனிமொழியும் கைதாக வாய்ப்பில்லை என்ற சிறிய தைரியத்தில் திமுக உள்ளது.

அமலாக்கப் பிரிவிடம் கனிமொழி ஆஜர் எப்போது?:

இதே வழக்கில் இன்று (வியாழக்கிழமை) நேரில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு கனிமொழிக்கு அமலாக்கப் பிரிவு சம்மன் அனுப்பியிருந்தது.

இந்த வழக்கில் தொடர்புடைய கலைஞர் டி.வியின் நிர்வாக இயக்குநர் சரத்குமார், ஸ்வான் டெலிகாம் நிர்வாகி உஸ்மான் பல்வாவின் சகோதரர் ஆசிப் பல்வா, குசேகாவோன் பழங்கள் மற்றும் காய்கறிகள் நிறுவனத்தின் இயக்குனர் ராஜீவ் அகர்வால், சினியுக் நிறுவன இயக்குனர் கரீம் மொரானி ஆகியோருக்கும் சம்மன்கள் அனுப்பப்பட்டுள்ளன.

பண மோசடி தடுப்புச் சட்டத்தின் (Prevention of Money Laundering Act-PMLA) கீழ் இந்த சம்மன்கள் அனுப்பப்பட்டுள்ளன.

மேலும் பணப் பரிவர்த்தனைகள், வருவாய் ஆதாரங்கள், சொத்துகள் பற்றிய ஆவணங்களையும் கனிமொழி உள்ளிட்டோரிடம் அமலாக்கத்துறை கேட்டுள்ளது.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டால் முறைகேடாக லாபமடைந்த டி.பி.ரியால்டி நிறுவனம், தனது குசேகாவோன் பழங்கள் மற்றும் காய்கறிகள் நிறுவனம் மற்றும் சினியுக் நிறுவனம் ஆகிய துணை நிறுவனங்கள் மூலமாக கலைஞர் டி.விக்கு ரூ.214 கோடி நிதியுதவி அளித்தது.

இது தொடர்பாக கலைஞர் டி.வியில் தலா 20 சதவீத பங்குகளை வைத்திருக்கும் கனிமொழி, சரத்குமார் ஆகியோரிடம் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் விசாரிக்க திட்டமிட்டுள்ளனர்.

ஆனால், சிபிஐ நீதிமன்றத்தில் நாளை ஆஜராக வேண்டிய நிலையில் உள்ள கனிமொழி இன்று அமலாக்கப் பிரிவினரிடம் ஆஜராக வாய்ப்பில்லை என்றே தெரிகிறது.

(tt)

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s