site4any

Free downloadable Tamil & Tamil dubbed movies, Free Tamil books & News, Articles, Health tips…

கவனிப்பாரற்று கிடக்கும் சாலை திட்டங்கள்….

Posted by sambala87(சூரியன்) on May 4, 2011

தேசிய நெடுஞ்சாலை அதிகார ஆணையத்தின் கீழ், 2009ம் ஆண்டு ஒப்புதல் அளிக்கப்பட்ட, சென்னை – பெங்களூரு இடையிலான எக்ஸ்பிரஸ் ஆறு வழி சாலை திட்டத்தில், கடந்த இரண்டு ஆண்டுகளாக, எந்தவொரு முன்னேற்றமும் இல்லையென, தெரிய வந்துள்ளது. சென்னை துறைமுகம் – மதுரவாயல் இடையிலான பறக்கும் சாலை திட்டம் மற்றும் மதுரை ரிங் ரோடு அமைக்கும் திட்டம் ஆகியவையும் கண்டுகொள்ளப்படாமல் இருப்பது, அதிகாரப்பூர்வமாக வெளிவந்துள்ளது.

சென்னைக்கும், பெங்களூருக்கும் இடையில், ஆறு வழி எக்ஸ்பிரஸ் சாலை அமைப்பது என்று முடிவு செய்து, 2009ல் மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. தேசிய நெடுஞ்சாலை மேம்பாட்டுத் திட்டம்-6ன் கீழ், இந்த திட்டம் அனுமதிக்கப்பட்டது. ஏறத்தாழ 16 ஆயிரத்து 680 கோடி ரூபாய் செலவில் இந்த திட்டம், வரும் 2015ம் ஆண்டிற்குள் அமைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.நேற்று மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் சார்பில் வெளியிடப்பட்ட, தேசிய நெடுஞ்சாலை அதிகார ஆணையத்தின் அறிக்கை விவரங்கள், இந்த திட்டம் கடந்த இரண்டு ஆண்டுகளாக எந்தவொரு முன்னேற்றமும் அடையவில்லை என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.

கடந்த 2009, ஜூலை மாதம், இந்த எக்ஸ்பிரஸ் சாலை, எந்த வழியில் அமைப்பது என்று முடிவெடுக்கப்பட்டு, ஆய்வறிக்கை தயாரிக்கப்பட்டது. 2009ம் ஆண்டு ஏப்ரல் 30ம் தேதி, இதற்கான ஒப்பந்தமும் போடப்பட்டது.பின், 2009ம் ஆண்டு ஆகஸ்டில், மாதிரி வரைவு திட்டமும் தயார் செய்யப்பட்டு சமர்ப்பிக்கப்பட்டது. அதன் பிறகு இந்த சாலை அமைக்கும் திட்டம் குறித்த பணிகள் எதுவும் துவக்கப்படவில்லை என்பது, அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.இதே திட்டத்தோடு சேர்ந்து ஆரம்பிக்கப்பட்ட, வதேத்ரா – மும்பை இடையிலான 400 கி.மீ., தூரம் கொண்ட ஆறு வழிச் சாலை அமைக்கும் திட்டம், தீவிர முன்னேற்றத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளதால், பணிகள் துவங்க வேண்டியது தான் பாக்கி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இத்தனைக்கும் சென்னை – பெங்களூரு இடையிலான ஆறு வழி எக்ஸ்பிரஸ் சாலை திட்டத்திற்கு, தமிழகம், ஆந்திரா, கர்நாடகா என, மூன்று மாநில அரசுகளுமே ஒப்புதல் அளித்துவிட்டன. ஆனாலும், மத்திய அரசு இந்த திட்டத்திற்கு, போதிய முன்னுரிமை அளிக்காமல் இருக்கும் நிலை காணப்படுகிறது.

அதேபோல, தேசிய நெடுஞ்சாலை மேம்பாட்டுத் திட்டம்-7ன் கீழ், தமிழகத்திற்கு இரண்டு திட்டங்கள் கிடைத்தன. அதில், சென்னை துறைமுகத்தில் இருந்து, மதுரவாயல் வரை, பறக்கும் சாலை அமைக்கும் திட்டம். இந்த திட்டம், 2008லேயே ஒப்புதல் கிடைக்கப் பெற்று, 1,485 கோடி ரூபாய் வரையிலான செலவில் தீட்டப்பட்டது. இந்த திட்டத்திற்கான, “கான்ட்ராக்ட்’ விடும் பணி, 2009ம் ஆண்டு, ஜனவரியில் விடப்பட்டது. ஆனால், இன்னும் பணிகள் ஆரம்பிக்கப்படவில்லை. ஏறத்தாழ இரண்டரை ஆண்டுகள் ஆகியும், பணிகள் ஏன் துவக்கப்படவில்லை என்பது குறித்து அந்த அறிக்கையில் காரணம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. மற்றொரு திட்டம், மதுரையில் ரிங் ரோடு திட்டம். இதுவும், தேசிய நெடுஞ்சாலை மேம்பாட்டுத் திட்டம்-7ன் கீழ், 2009ம் ஆண்டு ஏப்ரலில் கிடைத்தது. ஆனால், இந்த திட்டத்தில் சிறிது கூட முன்னேற்றம் இல்லை.

அந்த அறிக்கையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள திட்டங்கள் வரிசையில், கோயம்புத்தூர் ரிங் ரோடு திட்டம், திருச்சி ரிங் ரோடு திட்டம், திருநெல்வேலி ரிங் ரோடு திட்டம் ஆகியவையும் குறிப்பிடப்பட்டுள்ளன.என்ன காரணத்தினால் இந்த திட்டங்கள் எல்லாம் காத்திருக்கும் பட்டியலுக்கு தள்ளப்பட்டுள்ளன என்ற விவரம் தெரியவில்லை.

தகவலறிந்த வட்டாரங்கள் கூறியதாவது: தமிழகத்திற்கு கிடைத்த இந்த திட்டங்கள் அனைத்தும், ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் முதல் ஆட்சியில் கிடைத்தவை. அப்போது, தமிழகத்தைச் சேர்ந்த டி.ஆர்.பாலு அமைச்சராக இருந்தார். இரண்டாம் முறையாக ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி மலர்ந்தபோது, அமைச்சராக கமல்நாத் பொறுப்பேற்றார். அவர், நெடுஞ்சாலைத் துறை உயர் அதிகாரிகளுக்கு வாய் வழியாக, “ஏற்கனவே சாலை திட்டங்கள் பலவற்றையும் தமிழகம் பெற்றுவிட்டது. எனவே, தமிழகத்திற்கான திட்டங்களை கருத்தில் கொள்ள வேண்டாம்’ என, உத்தரவிட்டுள்ளார். இதுதான், தமிழக சாலை திட்டங்கள் கவனிக்கப்படாமல் கிடப்பதற்கான உண்மையான காரணம்’ என்று தெரிவிக்கின்றன.

(dm)

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: