site4any

Free downloadable Tamil & Tamil dubbed movies, Free Tamil books & News, Articles, Health tips…

முதல்வர் டோர்ஜி கிடைப்பாரா? தொடர்ந்து தேடல்

Posted by sambala87(சூரியன்) on May 3, 2011

ஹெலிகாப்டரில் சென்ற, அருணாச்சல் முதல்வர் டோர்ஜி காண்டு, மாயமாகி மூன்று நாட்களுக்கு மேல் ஆகிவிட்ட நிலையில், அவரைப் பற்றிய தகவல் எதுவும், இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. இதற்கிடையே, மோசமான வானிலை காரணமாக, நேற்று, தேடுதல் பணியில் ஈடுபடச் சென்ற ஹெலிகாப்டர்கள் மற்றும் விமானங்கள், தவாங்கிற்கு திரும்பி விட்டன.

அருணாச்சல பிரதேச முதல்வர் டோர்ஜி காண்டு, கடந்த 30ம் தேதி காலையில், தவாங் என்ற இடத்தில் இருந்து, இடாநகருக்கு ஹெலிகாப்டரில் சென்றார். அவருடன், மேலும் நான்கு பேர் இருந்தனர். திட்டமிட்டபடி, குறித்த நேரத்தில் அந்த ஹெலிகாப்டர் இடாநகரில் தரை இறங்கவில்லை. ஹெலிகாப்டரும், அதில் சென்ற டோர்ஜி காண்டு உள்ளிட்டோரும் மாயமாகி விட்டனர். இவர்களை தேடும் பணி, முடுக்கி விடப்பட்டது. ராணுவம் மற்றும் இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்பு படையினர் உட்பட, 2,400 பேர், இரவு பகலாக, அடர்ந்த மலைப் பிரதேசங்களில் தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஹெலிகாப்டர் மாயமானதாக கருதப்படும் பகுதியில், நேற்று மோசமான வானிலை நிலவியது. இதையடுத்து, தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட இரண்டு ஹெலிகாப்டர்களும், போர் விமானங்களும், தேடும் பணியைத் தொடர முடியாமல், மீண்டும் தவாங் நகருக்கு திரும்பி விட்டன. இதனால், வான் வழி தேடுதல் வேட்டை, நேற்று மாலை ரத்து செய்யப்பட்டது. இருந்தாலும், அந்த பகுதியில் தரை இறங்கியுள்ள பாதுகாப்பு படையினர், தேடுதல் பணியை தீவிரப்படுத்தியுள்ளனர்.

இதற்கிடையே, இஸ்ரோ சாட்டிலைட் மூலம் எடுக்கப்பட்ட புகைப்படங்களிலும், போர் விமானங்கள் மூலம் எடுக்கப்பட்ட புகைப்படங்களிலும், ஹெலிகாப்டர் குறித்த காட்சிகள் எதுவும் இடம் பெறவில்லை. இதனால், எந்த இடத்தில் தேடுவது என தெரியாமல், மீட்புக் குழுவினர் குழப்பம் அடைந்துள்ளனர். அருணாச்சல பிரதேசத்தைச் சேர்ந்த, 25 பேர் அடங்கிய குழு ஒன்றும், தனியாக தேடும் பணியை துவக்கியுள்ளது. அருணாச்சல் எம்.பி., தகாம் சஞ்சய் தலைமையிலான இக்குழுவில், அசாம் வனத்துறை அமைச்சர் ரோகிபுல் உசேன் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர். இவர்கள், ஒரு வாரத்துக்கு தேவையான உணவுப் பொருட்களுடன், அடர்ந்த மலைப் பிரதேசங்களில் தேடும் பணியைத் துவக்கியுள்ளனர். ஹெலிகாப்டரில் சென்ற முதல்வரும், அவருடன் சென்றவர்களும் மாயமாகி, மூன்று நாட்களுக்கு மேல் ஆகிவிட்ட நிலையில், முதல்வரைப் பற்றிய உறுதியான தகவல் எதுவும் தெரியவராததால், அவரது கதி என்ன ஆனது என்பது, தொடர்ந்து மர்மமாகவே இருந்து வருகிறது. முதல்வர் நலமுடன் திரும்ப வேண்டி, அருணாச்சல பிரதேசத்தின் பல்வேறு இடங்களில், புத்த துறவிகள் நேற்று சிறப்பு பிரார்த்தனை நடத்தினர். இதற்கிடையே, கடந்த 30ம் தேதி மாலையில், முதல்வர் பத்திரமாக தரை இறங்கி விட்டதாக, மாநில அரசு தெரிவித்த தவறான தகவலால் தான், தேடுதல் பணி, பல மணி நேரம் தாமதமாகி விட்டதாக, அருணாச்சல் மாநில பா.ஜ., சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

(dm)

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: