site4any

Free downloadable Tamil & Tamil dubbed movies, Free Tamil books & News, Articles, Health tips…

பின்லேடன் கொல்லப்பட்டது கூட்டு நடவடிக்கையில் அல்ல: ஜர்தாரி

Posted by sambala87(சூரியன்) on May 3, 2011

அமெரிக்கப் படைகளால் பின்லேடன் கொல்லப்பட்டது பாகிஸ்தானுடன் இணைந்து எடுக்கப்பட்ட நடவடிக்கை அல்ல என அந்நாட்டின் அதிபர் ஆசிப் அலி ஜர்தாரி தெரிவித்தார்.

பாகிஸ்தான் மண்ணில் பயங்கரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க பாகிஸ்தான் தவறிவிட்டது என்று கூறப்படுவதையும் அவர் நிராகரித்தார்.

பின்லேடன் அந்த இடத்தில்தான் இருக்கிறார் என்பது பாகிஸ்தான் நிர்வாகதுக்கு தெரியாது. அவர் அங்கு இருப்பார் என்பதை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. எனினும் தற்போது அவர் இல்லை என ஜர்தாரி வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையில் பின்லேடன் மரணம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை நடந்தது கூட்டு நடவடிக்கை அல்ல. அமெரிக்காவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே நீண்டகாலமாக இருந்த ஒத்துழைப்பின் காரணமாக மனித இனத்துக்கு தொடர்ந்து அச்சுறுத்தலாக இருந்த பின்லேடன் கொல்லப்பட்டார் என ஜர்தாரி குறிப்பிட்டார்.

பின்லேடனைப் பிடிக்கும் நடவடிக்கையில் பாகிஸ்தான் ஆர்வம் இல்லாமல் இருந்ததாகக் கூறுவது உண்மையல்ல. பின்லேடனால் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாகிஸ்தானியர் உயிரிழந்துள்ளனர் என அவர் தெரிவித்தார்.

(di)

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: