site4any

Free downloadable Tamil & Tamil dubbed movies, Free Tamil books & News, Articles, Health tips…

தேர்தல் முடிந்ததும் பெரும் அடி…..

Posted by sambala87(சூரியன்) on May 1, 2011

சர்வதேச அளவில், தொடர்ந்து அதிகரித்து வரும் கச்சா எண்ணெய் விலை உயர்வால், ஐந்து மாநில சட்டசபை தேர்தல் முடிவுக்கு பின், பெட்ரோல், டீசல், காஸ், மண்ணெண்ணெய் விலையை உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

தற்போது தமிழகம், கேரளா, அசாம், புதுச்சேரி மாநிலங்களின் தேர்தல் முடிந்த நிலையில், மேற்குவங்க தேர்தல் மட்டும் பாக்கி உள்ளது. தேர்தல் முடிவு, வரும் 13ம் தேதி வெளியாகிறது.இதைத் தொடர்ந்து பெட்ரோல், டீசல், காஸ் மற்றும் மண்ணெண்ணெய் விலையை உயர்த்த, இந்தியன் ஆயில் கார்பரேஷன், இந்துஸ்தான் பெட்ரோல் கார்பரேஷன் லிமிடெட், பாரத் பெட்ரோல் கார்பரேஷன் லிமிடெட் ஆகியவை தயாராகி வருகின்றன.சர்வதேச அளவில், கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வருகிறது. கடந்தாண்டு ஏப்ரல் மாதத்திற்கு பின், கடந்த 28ம் தேதி வரை, ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை, 5,566 ரூபாயை தொட்டுள்ளது.கடந்த நிதியாண்டில், சர்வதேச அளவில், ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 3,910 ரூபாயாக இருந்தது. தற்போது, 1,610 ரூபாய் அதிகரித்து, 5,566 ரூபாயை தொட்டுள்ளது.

எனினும், இந்தியாவில் விலையை ஏற்றாமல், இதன் மீதான மானியத்தை மத்திய அரசே ஏற்று வருவதால், அரசுக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது என, எண்ணெய் அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.தற்போது, ஒரு லிட்டர் டீசல் மீது, 16 ரூபாய் 10 பைசாவும், பெட்ரோல் மீது, 27 ரூபாயும், எல்.பி.ஜி., காஸ் சிலிண்டர் மீது, 316 ரூபாயும் அரசுக்கு நஷ்டம் ஏற்படுகிறது. அதாவது, என்ன விலைக்கு, வீட்டு உபயோகத்திற்கான காஸ் சிலிண்டர் வழங்கப்படுகிறதோ, அதற்கு இணையான நஷ்டத்தை அரசு ஏற்று கொள்கிறது.”மத்திய அரசுக்கு ஏற்படும் நஷ்டத்தையும், சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையும் அதிகரித்து வருவதால், பொதுமக்களுக்கான வினியோக விலையை அதிகரிப்பது கட்டாயமாக இருக்கிறது’ என, மத்திய நிதி துறைக்கான தலைமை பொருளாதார ஆலோசகர் கவுசிக் பாசு, சமீபத்தில் தெரிவித்து இருந்தார்.

இது குறித்து, எண்ணெய் நிறுவன அதிகாரிகள் கூறுகையில், “நாட்டின் தற்போதைய டீசல், பெட்ரோல், மண்ணெண்ணெய், எல்.பி.ஜி., காஸ் சிலிண்டர் ஆகியவை, சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை பேரல் ஒன்று 4,600 ரூபாயாக இருந்த போது நிர்ணயிக்கப்பட்டது. தற்போது விலை 5,566 ரூபாயாக அதிகரித்துள்ளது. எனவே, இவற்றின் மீதான விலை உயர்வு தவிர்க்க முடியாதது’ என்று தெரிவிக்கின்றனர்.

நடப்பு 2010-2011ம் ஆண்டில், சில்லறை விற்பனையாளர்களுக்கு, மத்திய அரசு, 38 ஆயிரம் கோடி ரூபாய் மானியம் அளித்து இருந்தது. 2011-2012ம் நிதியாண்டில், 23 ஆயிரம் கோடி ரூபாய் மானியம் வழங்க திட்டமிட்டு ஒதுக்கி உள்ளது. ஆனால், கச்சா எண்ணெய் விலை உயர்வால், இந்த மானியம் அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
“கச்சா எண்ணெய் சப்ளை நாடுகளில் முக்கியமானது சவுதி அரேபியா. இந்நாட்டின் எண்ணெய் உற்பத்தி, வரும் ஆண்டுகளில், தேவைக்கு ஏற்ப அதிகரிக்காது என்றும் நிபுணர்கள் கருத்து தெரிவிப்பதால், பெட்ரோல், டீசல், காஸ், மண்ணெண்ணெய் விலை ஏற்றம், தவிர்க்க முடியாததாகி விடும்’ என்கின்றனர், பொருளாதார ஆராய்ச்சி வல்லுனர்கள்.
எனவே, ஐந்து மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியான உடன், இந்த நான்கு எண்ணெய்களின் விலையையும் உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

(dm)

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: