அருணாசல பிரதேச முதல்வர் டோஜி காண்டு மாயம்: கண்டுபிடிக்க இஸ்ரோ உதவி

அருணாசல பிரதேச முதல்வர் டோஜிகாண்டு சென்ற ஹெலிகாப்டர் மாயமானது குறித்து ஜனாதிபதி பிரதீபாபாட்டீல், காங்.,தலைவர் சோனியா உள்ளிட்டோர் கவலை தெரிவித்துள்ளனர். இவர் மாயமானது தொடர்பாக மாநில கவர்னரை தொடர்பு கொண்டு ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் விசாரித்தார். அவர் விரைவில் நலமாக திரும்புவார் என நம்பிக்கை தெரிவித்துள்ளளார். காங்., தலைவர் சோனியா மற்றும் சபாநாயகர் மீராகுமார் உள்ளிட்ட பிரமுகர்கள், டோஜிகாண்டு நிலை குறித்து விவரம் கேட்டவண்ணம் உள்ளனர். மாநில தலைமைசெயலர் தலைமையில் உயர்நிலை கூட்டம் அவசரமாக கூடிமுதல்வர் டோஜி காண்டுவை தேடும் பணியை முடுக்கி விடவும், இது தொடர்பான அடுத்தக்கட்ட பணிகள் குறித்தும் விவாதிக்கப்ட்டன. மாயமான ஹெலிகாப்டரை தேடி கண்டு பிடிக்க மத்திய உள்துறை அமைச்சகம் இஸ்ரோவிடம் உதவி கோரியுள்ளது.

அருணாச்சல பிரதேச முதல்வர் டோர்ஜி காண்டு பயணித்த ஹெலிகாப்டர் திடீரென மாயமானது. பின்னர் ஹெலிகாப்டர் பூடானில் தரையிறங்கியதாகவும், முதல்வர் டோர்ஜி காண்டு உட்பட அவருடன் பயணித்த அனைவரும், பத்திரமாக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனால், நேற்று மாலை திடீரென இத்தகவல் மறுக்கப்பட்டது. ஹெலிகாப்டர் கண்டுபிடிக்கப்பட்டதா இல்லையா என்பதிலும் குழப்பம் நீடிக்கிறது.

அருணாச்சல பிரதேச முதல்வர் டோர்ஜி காண்டு. இவர் நேற்று காலை 9.56 மணியளவில், தவாங் என்ற இடத்தில் இருந்து தலைநகர் இடாநகருக்கு ஹெலிகாப்டரில் புறப்பட்டார். அவருடன், பாதுகாப்பு அதிகாரி, உறவுப் பெண் ஒருவர் மற்றும் இரு கேப்டன்கள் என, மொத்தம் ஐந்து பேர் பயணித்தனர். சரியாக, 11.30 மணிக்கு அவர் பயணித்த ஹெலிகாப்டர் இடாநகரில் தரையிறங்கி இருக்க வேண்டும். ஆனால், ஹெலிகாப்டர் புறப்பட்ட 20 நிமிடங்களில், செலாபாஸ் என்ற இடத்தின் மீது பறந்து கொண்டிருந்த போது, அதன் அனைத்துத் தொடர்புகளும் துண்டிக்கப்பட்டன.

கலவரம் அடைந்த அதிகாரிகள், ஹெலிகாப்டர் ஏதேனும் விபத்துக்குள்ளாகியிருக்குமோ என, பீதியடைந்தனர். தொடர்ந்து ராணுவம் மற்றும் விமானப் படைப் பிரிவுகள் உஷார் படுத்தப்பட்டன. அசாம் மாநிலம் திஸ்பூரிலிருந்து இரண்டு ராணுவ ஹெலிகாப்டர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டன.

இந்நிலையில், முதல்வர் டோர்ஜி காண்டு பயணித்த ஹெலிகாப்டரில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால், பூடான் நாட்டு எல்லையில் டபோரிஜோ என்ற இடத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டதாகவும், முதல்வர் உட்பட ஐந்து பேரும் பத்திரமாக இருப்பதாகவும் செய்திகள் வெளியாகின. ஆனால் நேற்று மாலை செய்தியாளர்களிடம் பேசிய அருணாச்சல பிரதேச துணை போலீஸ் டி.ஜி.பி., ராபின் ஹிபு, “”காணாமல் போன ஹெலிகாப்டர் பற்றியும் அதில் பயணித்த முதல்வர் உட்பட ஐந்துபேர் பற்றியும் எந்தத் தகவலும் இல்லை. அவர்களைத் தேடும் பணி தொடர்கிறது,” என்றார்.

இதனால் முதல்வர் நிலை என்ன என்பதில் குழப்பம் நீடிக்கிறது. இந்திய ராணுவத்தில் உளவுப் பிரிவில் பணியாற்றிய டோர்ஜி காண்டு, 2007 ஏப்ரல் 9ம் தேதி, அருணாசல பிரதேச மாநிலத்தின் ஐந்தாவது முதல்வராக பதவியேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

(dm)

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s