site4any

Free downloadable Tamil & Tamil dubbed movies, Free Tamil books & News, Articles, Health tips…

மே.வங்க அரசு கஜானா காலி

Posted by sambala87(சூரியன்) on April 27, 2011

மேற்குவங்க மாநில அரசு ஊழியர்களுக்கு, இம்மாத சம்பளம் கொடுக்க கடன் கேட்டு, டில்லி சென்ற அம்மாநில நிதி அமைச்சக செயலர் வெறும் கையுடன் திரும்பி இருப்பதால், அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கொடுப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

மேற்குவங்க மாநிலத்தை, ஆட்சி செய்யும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான, இடதுசாரி ஆட்சி, கடும் நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. ஏற்கனவே, மாநிலம் இரண்டு லட்சம் கோடி ரூபாய் கடனில் சிக்கியுள்ளது. இதனால், மாநில அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கொடுப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.மாத சம்பளம், பென்ஷன் கொடுக்க மாநில அரசுக்கு மாதம் ஒன்றுக்கு 2,900 கோடி ரூபாய் தேவைப்படுகிறது. இது மட்டுமின்றி, அன்றாடம் தவிர்க்க முடியாத செலவினங்களுக்கு 1,000 கோடி ரூபாய் தேவைப்படுகிறது. அரசுக்கு வரி மற்றும் மற்ற வருவாயாக 1,600 கோடி ரூபாய் வருமானம் வருகிறது. இதை கழித்துக் கொண்டாலும், மாநிலத்திற்கு எப்படியும் இம்மாதம் 2,300 கோடி ரூபாய் தேவைப்படுகிறது.

நிதி நெருக்கடியை சமாளிக்க, மத்திய அரசிடம் கடன் கேட்டு, மாநில நிதி அமைச்சக செயலர் சி.எம்.பசாவத், கடந்த மூன்று வாரங்களில், இருமுறை டில்லி சென்று, வெறும் கையுடன் திரும்பி உள்ளார்.இதுகுறித்து, மாநில அரசு தலைமை செயலக ஊழியர்கள் அமைப்பின் பொது செயலர் கமல் சக்ரவர்த்தி கூறும்போது, “மாநில அரசின் நிதி நெருக்கடி பற்றி எங்களுக்கு தெரியும். கடன் பெற்று சம்பளம் மற்றும் பென்ஷன் வழங்க அரசு அனைத்து முயற்சிகளிலும் இறங்கி உள்ளது. ஹிட்கோ பணம் அரசின் பணம் அல்ல. ஹிட்கோவில் இருந்து கடன் பெற மத்திய அரசின் அனுமதி தேவை’ என்றார்.

தனியாரிடம் இருந்து கடன் பெற மத்திய அரசின் அனுமதி தேவை. கடந்த 1991ம் ஆண்டில், இதேபோன்று, நிதி நெருக்கடியில் சிக்கிய மறைந்த முன்னாள் முதல்வர் ஜோதிபாசு அரசு, பியர்லெஸ் ஜெனரல் பைனான்சில் இருந்து கடன் பெற்றது. ஆனால், அப்போது தேவைப்பட்டது வெறும் 60 கோடி ரூபாய் தான். ஆனால், இன்று தேவைப்படும் தொகை அதிகமாக இருப்பதால், மாநில அரசு திண்டாடி வருகிறது.இம்மாதம் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்காவிட்டால், மே 3, 7 மற்றும் 10 ஆகிய தேதிகளில் நடக்கும் இறுதி மூன்று கட்ட தேர்தல்களில் அரசுக்கு எதிராக, அரசு ஊழியர்களின் ஓட்டு திரும்பும் என்ற கலக்கத்தில் தற்போது இடதுசாரி அரசு உள்ளது.

(dm)

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: