ஸ்விஸ் வங்கிக் கணக்கு: பட்டியலில் இந்தியர்கள்- விக்கிலீக்ஸ்

ஸ்விட்சர்லாந்து வங்கியில் கறுப்புப் பணம் வைத்துள்ளவர்கள் பட்டியலில் இந்தியர்களும் இடம்பெற்றுள்ளதாக விக்கி லீக்ஸ் நிறுவனத் தலைவர் ஜூலியன் அசாஞ்சே தெரிவித்துள்ளார். இந்த பட்டியல் விரைவில் வெளியிடப்படும் என்றும் அவர் கூறினார்.

இந்தியர்களின் பெயர்கள் இதில் உள்ளன. இதை ஏற்கெனவே வெளியிட்டுவிட்டோமா அல்லது இனிமேல் வெளியாகும் பட்டியலில் பெயர் இருக்குமா என்பது தெரியாது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தியர்களின் பெயர்கள் நினைவில் இல்லை, இருப்பினும் இந்தியர்கள் உள்ளனர் என்று தெரியும் என்று தனியார் தொலைக்காட்சி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறினார்.

இந்தியாவில் மிகப் பெரும் புள்ளிகளின் பெயர்கள் இந்த பட்டியலில் நிச்சயம் இருக்கும் என்று கூறிய அவர், ஸ்விட்சர்லாந்தில் உள்ள தனியார் வங்கிகளில் பணத்தைப் போடுவதற்கு குறைந்தபட்சம் 10 லட்சம் டாலர் இருக்க வேண்டும் என்று தெரிவித்தார். இந்த அளவுக்குப் பணத்தைப் போடுபவர் சாதாரண இந்தியராக இருக்க முடியாது என்று அவர் குறிப்பிட்டார்.

பட்டியல் எப்போது வெளியிடப்படும் என்று கேட்டதற்கு, நம்பிக்கை இழக்காமலிருங்கள், பட்டியல் நிச்சயம் வெளியிடப்படும் என்றார். இருப்பினும் இது தொடர்பாக வேறு எந்த தகவலையும் அவர் தெரிவிக்கவில்லை. ஸ்விஸ் வங்கியில் இந்தியர்கள் தவிர வேறு எவரும் பணத்தை முதலீடு செய்திருப்பதாகத் தெரியவில்லை என்றும் அவர் கூறினார்.

வெளிநாடுகளில் போடப்பட்டுள்ள கறுப்புப் பணத்தை மீட்பதில் ஜெர்மனி அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் மிகவும் பாராட்டுக்குரியது. அந்த அளவுக்கு முழு உத்வேகத்தோடு இந்தியா செயல்பட்டால் மட்டுமே கறுப்புப் பணத்தை மீட்க முடியும் என்றார்.

விக்கி லீக்ஸ் வெளியிடும் தகவலுக்கு இந்திய அரசு தெரிவித்துள்ள கருத்துகள் உலகிலேயே மிகவும் மோசமானவை என்று அவர் கூறினார். தேச மக்களை தவறாக வழிகாட்டுவதிலும், தகவல் தரும் இணையதளத்தைப் பற்றி அவதூறு பேசுவதும் இங்குதான் தான் பார்த்ததாக அவர் கூறினார். கறுப்புப் பணத்தைக் கொண்டு வருவதற்காக இரட்டை வரி விதிப்பு தொடர்பான ஒப்பந்தம் போடுவது மட்டும் தீர்வாக இருக்காது. இதற்கும் சொத்துகளை மறைப்பதற்கும் எவ்வித சம்பந்தமும் கிடையாது என்றார். ஊழல் முறைகேடுகளை விட மோசமானது வெளிநாட்டு வங்கிகளில் கறுப்புப் பணத்தைபோட்டு வைப்பது என்று அவர் குறிப்பிட்டார்.

(di)

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s