site4any

Free downloadable Tamil & Tamil dubbed movies, Free Tamil books & News, Articles, Health tips…

  • Tamil

  • Movies Blog

    Visit http://www.freetamildubbedmovies.com for free Tamil Dubbed Movies download .

  • Click here for Free Dubbed Movies Download

  • மேலும் சுவையான செய்திகளை தமிழில் வாசிக்க…

  • Tutorials

  • Visitors from Countries

    free counters
  • Blog Stats

    • 283,666 hits
  • Advertisements

“கூடை’க்கு போன தே.மு.தி.க., ஓட்டுகள்

Posted by sambala87(சூரியன்) on April 27, 2011

ரிஷிவந்தியம் சட்டசபை தொகுதியில் தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்துக்கும், காங்., எம்.எல்.ஏ., சிவராஜிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. தங்களுக்கு வர வேண்டிய ஓட்டுகள் எந்த வகையிலும் எதிரணிக்கு போய்விடக்கூடாது என்பதில் இரு கட்சியினரும் முனைப்புடன் களப்பணியாற்றினர்.
அதேபோல் எதிரணிக்கு கிடைக்கும் ஓட்டுக்களை பிரித்து தங்களுக்கு கிடைக்கச்செய்யவும் திட்டமிட்டு செயல்பட்டனர். அதற்காக காங்., தரப்பில், விஜயகாந்த் என்ற பெயரில் உள்ளவரை தேடிபிடித்து சுயேச்சை வேட்பாளராக மனுதாக்கல் செய்ய வைத்தனர்.அதேபோல் அவருக்கு கூடை சின்னம் கேட்டு விண்ணப்பித்தனர். அந்த சின்னத்தை மற்ற சுயேச்சைகள் யாரும் கோராததால் கூடை சின்னம் சுயேச்சை விஜயகாந்துக்கு ஒதுக்கப்பட்டது. தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்துக்கு ஒதுக்கப்பட்ட முரசு சின்னமும், சுயேச்சை விஜயகாந்துக்கு ஒதுக்கப்பட்ட கூடை சின்னமும் பார்ப்பதற்கு ஒரே வடிவத்தில் இருந்தது காங்., கட்சிக்கு சாதகமாக மாறியுள்ளது.
முழுக்க முழுக்க கிராமங்கள் நிறைந்த ரிஷிவந்தியம் தொகுதியில் படிக்காத வாக்காளர்கள் அதிகம் வசிக்கின்றனர். இவர்களை குழப்புவதற்காகவே திட்டமிட்டு சுயேச்சை வேட்பாளர் விஜயகாந்தை களமிறக்கி அவருக்கு கூடை சின்னம் கேட்டுப் பெற்றதில், காங்., கட்சி வெற்றி பெற்றது.
தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்துக்கு ஓட்டு போட வந்த படிக்காத மக்கள் பலரும் ஓட்டு பெட்டியில் இருந்த முரசு சின்னத்திற்கும், கூடை சின்னத்திற்கும் வித்தியாசம் தெரியாமல் ஓட்டுக்களை மாற்றி போட்டுள்ளது தற்போது தெரிய வந்துள்ளது. அதேபோல் ஓரளவு படிக்க தெரிந்தவர்களும், விஜயகாந்த் என்ற பெயரை பார்த்தவுடன் சுயேச்சை வேட்பாளர் விஜயகாந்த் பெயருக்கு நேரில் உள்ள கூடை சின்னத்தை முரசு சின்னமாக கருதி மாற்றி ஓட்டளித்துள்ளனர்.இதனால் தங்களுக்கு வரவேண்டிய ஓட்டுகள், சுயேச்சை விஜயகாந்துக்கு சென்றுவிட்டதே என்று தே.மு.தி.க., வினர் கவலையடைந்துள்ளனர்.
இதே குழப்பத்தின் காரணமாக, கடந்த லோக்சபா தேர்தலில், கள்ளக்குறிச்சி தொகுதியில் தே.மு.தி.க., சார்பில் போட்டியிட்ட சுதீஷிற்கு கிடைத்திருக்க வேண்டிய 10 ஆயிரம் ஓட்டுகள் கூடை சின்னத்தில் போட்டியிட்ட சுயேச்சை வேட்பாளருக்கு சென்றது.அதேபோல், இத்தேர்தலிலும் சின்னம் மற்றும் பெயர் குழப்பத்தால் ஓட்டுகள் மாற்றி விழுந்துள்ளதால், காங்., கட்சிக்கு சாதகமாக போய்விடுமோ என்ற அச்சம் தே.மு.தி.க.,வினருக்கு ஏற்பட்டுள்ளது.

(dm)

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: