கறுப்புப்பணத்தை வெள்ளையாக்க பொதுமன்னிப்புத் திட்டத்தை அமலாக்க வேண்டும்

நமது நாடு 10 சதவிகித வளர்ச்சியை பெற தொழிவ்துறையினர் கூறும் 5 அம்ச தொழில்கொள்கையை பின்பற்ற வேண்டும்.கறுப்புப்பணத்தை வெளிக்கொணர ஒரே ஒரு முறை பொது மன்னிப்புத்திட்டத்தை அமலாக்கலாம் என இந்திய தொழிலகங்களின் கூட்டமைப்பு (சிஐஐ)புதிய தலைவர் பி.முத்துராமன் தெரிவித்தார்.

அவர் தில்லியில் திங்கள்கிழமை தனது புதிய பதவிப்பொறுப்பை ஏற்ற பின் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

கறுப்புப்பணம் வைத்திருப்பவர்கள் அதை தாங்களே முன்வந்து அறிவித்து வரிசெலுத்த ஒரு முறைமட்டும் பொது மன்னிப்புத்திட்டத்தை மத்திய அரசு அறிவிக்கலாம். அந்த திட்ட அமலாக்கம் முடிந்த பின்னர் கறுப்புப்பணம் வைத்திருப்பவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளலாம். ஒரே ஒரு முறை மட்டும்தான் இந்த திட்டம் கொண்டுவரப்படும் என்ற நிபந்தனையைக்கூட அரசு விதித்துக்கொள்ளலாம். இது எனது தனிப்பட்ட கருத்துமட்டுமல்ல. தொழில்நிறுவனங்களின் கருத்தும் இதுதான்.

நமது நாட்டின் வளர்ச்சி விகிதத்தை 10 சதவிகிதமாக உயர்த்த வேண்டுமானால் நாங்கள் (தொழில்துறையினர்) சொல்லும் 5 அம்சத் திட்டத்தை மத்திய அரசு பின்பற்ற வேண்டும்.

அரசிடமிருந்து தொழில்நிறுவனங்கள் பெற வேண்டிய அனுமதிகளைப் பெறுவதும் இன்னும் சவாலான விஷயமாகவே இருக்கிறது. அரசின் உயர்நிலையில் உள்ளவர்களுக்கு தரப்பட்டுள்ள சுயமாக முடிவெடுக்கும் சிறப்பு அதிகாரங்களை ரத்து செய்ய வேண்டும். ஏனென்றால் பெரும்பாலும் இவை தவறாகவே பயன்படுத்தப்படுகின்றன.

தாதுக்கள் போன்ற இயற்கை வளங்களை அரசிடமிருந்து தொழில் நிறுவனங்கள் கொள்முதல் செய்ய வேண்டியிருக்கிறது. இவற்றை வாங்கும்போது வெளியில் தெரிவிக்காத பல விதிமுறைகளைச் சுட்டிக்காட்டுகிறார்கள். விலையையும் முன்கூட்டியே வெளிப்பைடையாகத் தெரிவிப்பதில்லை. இவற்றையும் மாற்றியமைத்து விலை, விற்பனை அளவு ஆகியவற்றில் வெளிப்படைத் தன்மையை புகுத்த வேண்டும். ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரித்திட்டத்தை அமலாக்க வேண்டும். அத்தியாவசிய பொருள்கள் சட்டத்தைக் கைவிட வேண்டும். இதனால் இந்தியா முழுவதிலும் விவசாய விளைபொருள்களை எளிதாக எடுத்துச்செல்ல இது தடையாக இருக்கிறது. இவை பற்றி ஆலோசிக்க தற்போது 6 மாநில அரசுகளுடன் சேர்ந்து ஆலோசிக்க கூட்டாக பணிக்குழுக்கள் அமைத்திருக்கிறோம். இனி வரும் ஆண்டுகளில் மற்ற மாநில அரசுகளுடன் சேர்ந்து பணிக்குழு அமைக்கவிருக்கிறோம்.

எல்லா மாநிலங்களிலும் ஒரேமாதிரியான சட்டங்களை அமலாக்குதல்,வரிச்சீரமைப்பு ஆகியன மூலம் நாடு முழுவதிலும் எல்லா பொருள்களும் ஒரேவிலையில் கிடைக்கும் நிலையை உருவாக்க வேண்டும். இது மற்ற நாட்டு நிறுவனங்கள் நமது நாட்டில் பொருள்களை விரும்பி விற்கும் நிலையை உருவாக்கும்.

சிஐஐ கடந்த ஆண்டு அறிவித்த “வாழ்வுக்கு வர்த்தகம்” என்ற கொள்கை தொடர்ந்து அமலாக்கப்படும்.

நமது நாட்டில் அரசுகளிடம் தொழில் நிறுவனங்கள் சந்திக்கும் பிரச்னைகள் ஏராளம். இது விஷயத்தில் அரசு நிர்வாகம் வெளிப்படைத் தன்மையுடன் நடந்து கொள்ள வேண்டும். அப்படிச் செய்தால்தான் நமது நாட்டில் தொழில்முதலீட்டை அதிக அளவில் ஈர்க்க முடியும். பன்னாட்டு நிறுவனங்களும் முதலீடு செய்ய விரும்பத்தக்க நாடாக நமது நாட்டை கருதும் நிலை ஏற்படும்.

சாலைகள், துறைமுகங்கள், விமானநிலையங்கள் போன்ற அடிப்படைத் துறைகள் உள்ளடங்கியவகையில் 100 பெரிய திட்டங்களை அரசு துரிதகதியில் அமலாக்க வேண்டும். இதன் மூலமே நமது நாடு 10 சதவிகித வளர்ச்சியைப் பெற முடியும். உலக அளவில் பொருள்களின் விலைகள் உயர்ந்து விட்டன.

எனவே, வெளிநாடுகளில் கச்சாப்பொருள்களை வாங்கி தொழில்நடத்தும் இந்திய நிறுவனங்கள் கூடுதல்நிதிச்சுமையைச் சந்திக்க வேண்டியிருக்கிறது. இது அந்த நிறுவனங்களுக்கு சவாலான விஷயமாக இருக்கிறது. இதையும் மத்திய அரசு கவனத்தில் கொள்ளவேண்டும். ஒவ்வொரு தொழிலுக்கும் தனித்தனியாக தொழிற்பேட்டைகள் நவீனமுறையும் அரசு அமைத்துத்தர வேண்டும் என்றார்.

(di)

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s