விருதுநகர் மாவட்டம் கடைசி நேர “விறு விறு’

விருதுநகர் மாவட்டத்தில், போட்டியிட்ட அமைச்சர்கள், சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோரின் தொகுதிகளில், கடைசி நேர விறு விறுப்பால், அமைச்சர்கள் இருவரும் சோர்ந்து போய் உள்ளனர்.

அருப்புக்கோட்டை: முதன் முறையாக, சாத்தூர் தொகுதியை விட்டு வெளியேறி, அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன், மறுசீரமைக்கப்பட்ட அருப்புக்கோட்டை தொகுதியில் போட்டியிட்டார். இவரை எதிர்த்து, அ.தி.மு.க., வைகைச்செல்வன் போட்டியிட்டார். அமைச்சர், உள்ளூர் வேட்பாளர். வைகைச் செல்வன் வெளியூர் வேட்பாளராக இருந்தாலும், கடைசி நேரம் வரை அமைச்சருக்கு சரியான போட்டியை கொடுத்துள்ளார்.

இரண்டு தரப்பினருமே, பண பட்டுவாடாவில் சளைக்கவில்லை என்றாலும், ஆளும் கட்சி பண பட்டுவாடாவில் முந்தியது. கடைசி நேரம் வரை அமைச்சர், தமக்கு சாதகமாக இருக்குமோ, இருக்காதோ என்ற பயத்தில் தான் இருந்தார். கடைசி நேரத்தில் மக்கள் ஆர்வமுடன் ஓட்டுப் போட்டதால், 83.84 சதவீதம் வரை பதிவாகியிருந்தது.

இதில், 78,037 பெண் வாக்காளர்களும், 72,109 ஆண் வாக்காளர்களும் ஓட்டளித்தனர். ஓட்டுப்பதிவு சதவீதம் எகிறிய நிலையில், அதிர்ச்சியில் இருந்து மீள முடியாமல் அமைச்சரும், “மக்கள் ஓட்டு போட்டு தள்ளி விட்டனர்’ என்ற மகிழ்ச்சியில், அதிருப்தியில் இருந்த, அ.தி.மு.க., வேட்பாளர் வைகைச்செல்வனும் உள்ளனர்.

திருச்சுழி: புதியதாக உருவாக்கப்பட்ட திருச்சுழி தொகுதி, பழைய அருப்புக்கோட்டை தொகுதியில் முக்கால்வாசி பகுதிகளை உள்ளடக்கியது.

கடந்த முறை, அருப்புக்கோட்டை தொகுதியில் போட்டியிட்ட தங்கம் தென்னரசு, 9,000 ஓட்டுகள் வித்தியாசத்தில் தான் வெற்றி பெற்றார். இவருக்கு, திருச்சுழி தொகுதியில் எதிர்ப்பு வலுவாக இருந்தாலும், பண பட்டுவாடா செய்யப்பட்டது.

அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழக வேட்பாளர் இசக்கிமுத்து வெளியூர்க்காரர் என்றாலும், தொகுதியில் இவர் மீது அதிக எதிர்பார்ப்பு இருந்தது. இதிலிருந்து மீண்டு, ஆளும் கட்சிக்கு எப்படியும் வெற்றி தேடித்தர வேண்டும் என்ற நோக்கில் அமைச்சர் தரப்பினர் செயல்பட்டனர்.

விருதுநகர் மாவட்டத்திலேயே திருச்சுழி தொகுதியில், அதிக ஓட்டுப்பதிவாக, 84.22 சதவீதம் பதிவானது. அமைச்சர் தரப்பில் ஆளும் கட்சியினர் செய்த நலத்திட்டங்களும், இலவசங்களுக்காகவும் ஓட்டு விழுந்ததாக நினைத்தாலும், அடிவயிற்றில் புளி கரைப்பது போன்ற நிலையில் தான் உள்ளனர்.

இசக்கிமுத்துவோ, மின் தடையாலும், ஆளும் கட்சி மீதுள்ள அதிருப்தியாலும் தான் அதிகளவில் ஓட்டு பதிவாகியுள்ளது என, மகிழ்ச்சியில் உள்ளார்.

(dm)

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s