அண்ணாதுரை பிறந்த மாவட்டத்தில் நிலவரம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 11 சட்டசபை தொகுதிகள் உள்ளன. தி.மு.க., கூட்டணியில் தி.மு.க., – பா.ம.க., – காங்கிரஸ் தலா 3 தொகுதிகளிலும், விடுதலைச் சிறுத்தைகள் இரண்டு தொகுதிகளிலும் போட்டியிட்டன. அ.தி.மு.க., கூட்டணியில் அ.தி.மு.க., 9 தொகுதிகளிலும், தே.மு.தி.க., இரண்டு தொகுதிகளிலும் போட்டியிட்டன. ஓட்டுப்பதிவு சதவீத அடிப்படையில் தொகுதிகளின் தற்போதைய நிலவர விவரம் வருமாறு:

காஞ்சிபுரம்: பட்டுச் சேலைக்கு புகழ் பெற்ற காஞ்சிபுரம், அண்ணாதுரை பிறந்த ஊர். இத்தொகுதியில் 1 லட்சத்து 17 ஆயிரத்து 539 ஆண்கள், 1 லட்சத்து 20 ஆயிரத்து 235 பெண்கள், 17 திருநங்கைகள் என மொத்தம் 2 லட்சத்து 37 ஆயிரத்து 791 வாக்காளர்கள் உள்ளனர். தேர்தலில், 96 ஆயிரத்து 387 ஆண்கள், 94 ஆயிரத்து 96 பெண்கள் என மொத்தம் 1 லட்சத்து 90 ஆயிரத்து 433 வாக்காளர்கள் ஓட்டளித்துள்ளனர். ஓட்டுப்பதிவு 80.11 சதவீதம்.

அ.தி.மு.க., அதிக முறை வெற்றி பெற்ற தொகுதி. இரண்டாவது முறையாக தொகுதி பா.ம.க.,விற்கு ஒதுக்கப்பட்டதால் தி.மு.க.,வினரிடையே ஏற்பட்ட அதிருப்தி, கூட்டணி பலம் ஆகியவற்றால் அ.தி.மு.க., வேட்பாளர் சோமசுந்தரம் தெம்பாக உள்ளார்.

அதோடு, 1962ம் ஆண்டு தேர்தலில் 88.18 சதவீதம் ஓட்டுகள் பதிவான போது, இத்தொகுதியில் அண்ணாதுரை தோல்வி அடைந்தது பழைய வரலாறு. பா.ம.க., வேட்பாளர் உலகரட்சகன் சமுதாய பலத்தை நம்பியுள்ளார். இரு தரப்பினரும் ஓட்டுக்காக பணம் கொடுத்துள்ளனர். சுயேச்சை வேட்பாளரான கல்வியாளர் ராதாகிருஷ்ணனும் பணத்தை வாரி இறைத்தார். இவர் பெறும் ஓட்டு, யாருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்ற கேள்வியும் தொடர்கிறது.

உத்திரமேரூர்: இத்தொகுதியில் வெற்றி பெறும் கட்சியே ஆட்சியைப் பிடிக்கும் என்ற நம்பிக்கை மக்களிடையே உள்ளது. இத்தொகுதியில் 96 ஆயிரத்து 753 ஆண்கள், 97 ஆயிரத்து 426 பெண்கள், 17 திருநங்கைகள் என மொத்தம் 1 லட்சத்து 94 ஆயிரத்து 196 வாக்காளர்கள் உள்ளனர். தேர்தலில், 84 ஆயிரத்து 728 ஆண்கள், 82 ஆயிரத்து 910 பெண்கள் என மொத்தம் 1 லட்சத்து 67 ஆயிரத்து 368 வாக்காளர்கள் ஓட்டளித்துள்ளனர்.

அ.தி.மு.க., வேட்பாளர் கணேசன் தொகுதியில் நன்கு அறிமுகமானவர். அனைவரிடமும் கட்சிப் பாகுபாடின்றி பழகுபவர். ஆளும் கட்சி மீதான மக்கள் அதிருப்தி, எம்.எல்.ஏ., சுந்தருக்கு சீட் கொடுக்காதது, தொகுதிக்கு அறிமுகம் இல்லாதவருக்கு சீட் கொடுத்தது ஆகியவற்றால் வெற்றி என் பக்கம் என்ற நம்பிக்கையுடன் கணேசன் உள்ளார். பா.ம.க., செல்வாக்கு தன்னை கரை சேர்க்கும் என பொன்.குமார் நம்புகிறார்.

செய்யூர் (தனி): மாவட்டத்தில் மிகவும் பின்தங்கிய தொகுதி. தொழிற்சாலைகள் அதிகம் இல்லாத பகுதி. அச்சரப்பாக்கம் தொகுதியை நீக்கிவிட்டு புதிதாக உருவாக்கப்பட்டது. இத்தொகுதியில் 88 ஆயிரத்து 293 ஆண்கள், 85 ஆயிரத்து 554 பெண்கள், 17 திருநங்கைகள் என மொத்தம் 1 லட்சத்து 73 ஆயிரத்து 864 வாக்காளர்கள் உள்ளனர். தேர்தலில், 73 ஆயிரத்து 88 ஆண்கள், 68 ஆயிரத்து 931 பெண்கள் என மொத்தம் 1 லட்சத்து 42 ஆயிரத்து 19 வாக்காளர்கள் ஓட்டளித்துள்ளனர்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் பார்வேந்தன் ஏற்கனவே இப்பகுதியை உள்ளடக்கிய அச்சரப்பாக்கம் தொகுதியில், பா.ம.க., சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்தவர். விடுதலைச் சிறுத்தைகள் கட்சிப் பிரமுகர்கள் மீது மக்களுக்குள்ள அதிருப்தி, தங்களுக்கு வெற்றியை கொடுத்து விடும் என்ற நம்பிக்கையில் அ.தி.மு.க.,வினர் வெற்றி விழாவிற்கு தயாராகி வருகின்றனர்.

மதுராந்தகம் (தனி): கடந்த முறை காங்கிரஸ் வெற்றி பெற்ற தொகுதி. இத்தொகுதியில் 90 ஆயிரத்து 472 ஆண்கள், 89 ஆயிரத்து 971 பெண்கள், 13 திருநங்கைகள் என மொத்தம் 1 லட்சத்து 80 ஆயிரத்து 456 வாக்காளர்கள் உள்ளனர். தேர்தலில், 75 ஆயிரத்து 86 ஆண்கள், 72 ஆயிரத்து 311 பெண்கள் என மொத்தம் 1 லட்சத்து 47 ஆயிரத்து 397 வாக்காளர்கள் ஓட்டளித்துள்ளனர்.

இரு கட்சி வேட்பாளர்களும் தொகுதிக்கு புதிது. அ.தி.மு.க.,விற்கு உள்ள தனிப்பட்ட செல்வாக்கு மற்றும் கூட்டணி பலம் காரணமாக அக்கட்சி வேட்பாளர் கணிதா சம்பத் தெம்பாக உள்ளார். தி.மு.க., ஓட்டு தன்னை கைவிடாது என காங்கிரஸ் வேட்பாளர் ஜெயக்குமார் நம்புகிறார்.

செங்கல்பட்டு: மாவட்டத்தின் மையப் பகுதியில் அமைந்துள்ள இத்தொகுதியில் 1 லட்சத்து 27 ஆயிரத்து 449 ஆண்கள், 1 லட்சத்து 24 ஆயிரத்து 853 பெண்கள், 53 திருநங்கைகள் என மொத்தம் 2 லட்சத்து 52 ஆயிரத்து 355 வாக்காளர்கள் உள்ளனர். தேர்தலில் 96 ஆயிரத்து 536 ஆண்கள், 89 ஆயிரத்து 982 பெண்கள் என மொத்தம் 1 லட்சத்து 86 ஆயிரத்து 518 பேர் ஓட்டளித்துள்ளனர்.

கூட்டணி பலம், சமுதாய செல்வாக்கு ஆகியவற்றால் பா.ம.க., வேட்பாளர் ரங்கசாமி தெம்பாக உள்ளார். அ.தி.மு.க., தயவில் வெற்றி பெற்று விடலாம் என தே.மு.தி.க., வேட்பாளர் முருகேசன் நம்புகிறார்.

திருப்போரூர்: இத்தொகுதியில் 97 ஆயிரத்து 350 ஆண்கள், 94 ஆயிரத்து 643 பெண்கள், 7 திருநங்கைகள் என மொத்தம் 1 லட்சத்து 92 ஆயிரம் வாக்காளர்கள் உள்ளனர். அ.தி.மு.க., சார்பில் மனோகரன், பா.ம.க., சார்பில் எம்.எல்.ஏ., ஆறுமுகம் போட்டியிட்டனர்.

கடந்த முறை பா.ம.க., வெற்றி பெற்ற தொகுதி. எனவே, இம்முறையும் வெற்றி வசப்படும் என்ற நம்பிக்கையில் பா.ம.க.,வினர் உள்ளனர். எனினும், கூட்டணி பலம் காரணமாக வெற்றி நமதே என அ.தி.மு.க.,வினர் வலம் வருகின்றனர்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s