கறுப்பு பண விவகாரத்தில் மத்திய அரசு தூங்குவது ஏன்?

‘கறுப்பு பண விவகாரத்தில் விசாரணை ஏஜென்சிகள் இத்தனை ஆண்டுகளாக தூங்கி கொண்டிருந்ததா’ என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். வெளிநாட்டு வங்கிகளில் இந்தியர்கள் பலர் பதுக்கி வைத்துள்ள கறுப்பு பணத்தை மீட்டு வர மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரி, பிரபல வக்கீல் ராம்ஜெத்மலானி உட்பட 5 பேர் தாக்கல் செய்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கு நீதிபதிகள் சுதர்சன் ரெட்டி, நிஜார் ஆகியோர் முன்பாக நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அவர்கள் கூறியதாவது:

புனே குதிரை பண்ணை அதிபர் ஹசன் அலி மீது மட்டும் அரசு கவனம் செலுத்தி விசாரணை நடத்தி வருகிறது. அப்படியானால், வெளிநாட்டு வங்கிகளில் குவிக்கப்பட்டுள்ள கறுப்பு பணம் அவர் மட்டுமே பதுக்கியதா? வேறு யாருமே கறுப்பு பணத்தை பதுக்கி வைக்கவில்லையா? மற்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இத்தனை ஆண்டுகளாக மத்திய அரசு தூங்கிக் கொண்டிருப்பது ஏன்? வெளிநாட்டு வங்கிகளில் இந்தியர்கள் பதுக்கியுள்ள பணம் எப்படி வந்தது? அது தீவிரவாதிகள் பணமாக இருக்கலாம் அல்லது போதை கடத்தல் மூலமாக வந்திருக்கலாம். இதுதான் மிகப்பெரிய கேள்வி. இந்த பிரச்னை மிகவும் முக்கியமானது. இதில் மத்திய அரசு முழு ஈடுபாட்டுடன் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிடர் ஜெனரல் கோபால் சுப்ரமணியம் கூறுகையில், ‘கறுப்பு பண விவகாரம் குறித்து பல்வேறு கோணங்களில் விசாரிக்க வேண்டியுள்ளது. எனவே, வெளிநாட்டு வங்கிகளில் இந்தியர்கள் பதுக்கி உள்ள கறுப்பு பணம் குறித்து ரிசர்வ் வங்கி, சி.பி.ஐ, அமலாக்கப் பிரிவினர் விசாரிக்க தனித்தனியாக வழக்கை பிரித்து கொடுக்க வேண்டும்’ என்றார்.

இந்த பதிலில் அதிருப்தி அடைந்த நீதிபதிகள், ‘இவ்வளவு காலம் இந்த பிரச்னையில் அரசு விசாரணை ஏஜென்சிகள் தூங்கி கொண்டிருந்தன என்று சொல்கிறீர்களா? தனித்தனி விசாரணை அமைப்புகள் விசாரிக்க வேண்டும் என்று இப்போது சொல்கிறீர்கள். பல அமைப்புகள் விசாரிப்பதை விட, சிறப்பு விசாரணை குழு அமைத்து, விசாரணையை தீவிரப்படுத்தியிருக்கலாம்’ என்று கருத்து தெரிவித்தனர். மனுதாரர்கள் சார்பில் மூத்த வக்கீல் அனில் திவான் வாதிடுகையில், ‘சிறப்பு விசாரணை குழு அமைக்கவோ, விசாரணையை தனது கட்டுப்பாட்டில் இருந்து இழக்கவோ மத்திய அரசு விரும்பவில்லை’ என்றார். இதையடுத்து, ‘மத்திய அரசின் கருத்தை கேட்டு, சிறப்பு விசாரணை குழு அமைப்பது குறித்த விவரங்களை 25ம் தேதி நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும்’ என்று சொலிசிடர் ஜெனரலுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். விசாரணை 25ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

(dkn)

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s