கறுப்புப் பணத்தின் அளவு: உறுதியான தகவல் இல்லை

சுவிட்சர்லாந்து வங்கியில் இந்தியர்கள் பதுக்கி வைத்திருக்கும் கறுப்புப் பணத்தின் அளவு பற்றிய அதிகாரப்பூர்வமான தகவல் ஏதும் தங்களிடம் இல்லை என நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

வெளிநாட்டு வங்கிகளில் இந்தியர்கள் பலர் பல லட்சம் கோடி ரூபாய் பணத்தைப் பதுக்கி வைத்திருப்பதாக நீண்ட காலமாகவே கூறப்பட்டு வருகிறது. இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், கறுப்புப் பணத்தைப் பதுக்கி வைத்திருப்போரின் பெயர்களைத் தெரிவிக்குமாறு மத்திய நிதியமைச்சகத்துக்கு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் ஒருவர் மனு செய்திருந்தார். இந்த மனுவுக்கு அமைச்சகம் அளித்த பதிலில், “சுவிட்சர்லாந்து வங்கிகளில் இந்தியர்கள் வைத்திருக்கும் கறுப்புப் பணத்தின் அளவு பற்றி எங்களிடம் உறுதியான எந்தத் தகவலும் இல்லை’ எனக் கூறப்பட்டுள்ளது.

கறுப்புப் பணம் பற்றிய சில தகவல்கள் தங்களிடம் இருப்பதாகவும் அவை தொடர்பாக உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ள நிதியமைச்சகம், “விவகாரம் தற்போது நீதிமன்றத்தில் இருப்பதால் இந்த விவரங்களை வெளியிடுவது புலனாய்வைப் பாதிக்கும். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் பிரிவு 8 (1) (எச்)-படி இந்த விவரங்களை வழங்குவதற்கு விலக்கு இருக்கிறது’ என்று தனது பதிலில் குறிப்பிட்டுள்ளது.

“இரட்டை வரிவிதிப்பு தவிர்ப்பு ஒப்பந்தப்படி, இந்தியர்களின் வங்கிக் கணக்குகள் பற்றிய விவரங்களைத் தரும்படி ஒவ்வொரு காலகட்டத்திலும் சுவிட்சர்லாந்து அரசிடம் கேட்டிருக்கிறோம். ஆனால், ஒப்பந்தத்தின் பயன்பாட்டுக்காக இந்தத் தகவல்கள் கோரப்படவில்லை; இந்தியச் சட்டத்தை அமல்படுத்துவதற்காகவே கோரப்படுகின்றன. அதனால், இந்தத் தகவல்களை தர வேண்டிய அவசியம் இல்லை என்று அந்நாட்டு மத்திய வரிவிதிப்பு நிர்வாகத்தினர் தெரிவித்துவிட்டனர் எனவும் நிதியமைச்சகம் அளித்திருக்கும் பதிலில் கூறப்பட்டுள்ளது.

(di)

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s