site4any

Free downloadable Tamil & Tamil dubbed movies, Free Tamil books & News, Articles, Health tips…

வடிவேலுக்கு தி.மு.க., கொடுத்த “சன்மானம்’ எவ்வளவு?

Posted by sambala87(சூரியன்) on April 22, 2011

தி.மு.க., கூட்டணியின், “ஸ்டார்’ பேச்சாளராக தமிழகத்தை வலம்வந்த நடிகர் வடிவேலுவின் பிரசாரம் குறித்த சுவையான தொகுப்பு:

* வடிவேலுவுடன் வேனில் பயணம் செய்த இணை இயக்குனர்கள் இருவரும், எந்தத் தொகுதியில், யாரை பற்றி என்ன பேச வேண்டும் என்று, அந்த ஏரியா கட்சிக்காரர்களிடம் முன்னதாகவே எழுதி வாங்கி விடுவர். இத்துடன், அங்கு அரசு செயல்படுத்திய திட்டங்கள், மேலும் செய்யவேண்டியவைகளையும் குறித்து, வடிவேலுவிடம் படித்து காட்டுவர். அதை, வடிவேலு காதில் வாங்கி, மனசிற்குள் ஒரு முறை பேசிப்பார்ப்பார். தேவையென்றால் வேனுக்குள் மற்றவர்களிடம் பேசி, ஒத்திகையும் பார்த்துக்கொள்வார். எம்.ஜி.ஆர்.,படப் பாடல்களை பேச்சுக்கு இடையே பொருத்தமாக சேர்க்க வேண்டிய இடத்தில் சேர்த்து பாடி, பேசுவதையும் வழக்கமாக வைத்திருந்தார். ஓரிடத்தில் பேசிவிட்டு, அடுத்த கூட்டத்திற்கு செல்லும் இடைவெளியில், வேனுக்குள் இந்த ஒத்திகை நடந்துள்ளது. இப்படிதான் பத்து நாட்களும் பிரசாரம் நடந்துள்ளது.

* வடிவேலு படங்களில் நடித்த கேரக்டர்களின் பெயர்களான, “வண்டு முருகன், ஸ்நேக் பாபு, அசால்ட் ஆறுமுகம், தீப்பொறி திருமுகம், நாய் சேகர், டெலக்ஸ் பாண்டியன், கைப்புள்ள’ போன்ற பெயர்களை குழந்தைகளும்,பெரியவர்களும் பிரசாரத்தின் போது சொல்லி, வடிவேலுவை அழைத்துள்ளனர். இதனால், உற்சாகமான வடிவேலு, “கண்ணுங்களா… நீங்க இல்லாம நானில்லை. என்னை எப்பவும் நீங்க மறந்துடக்கூடாது’ என்று உருக்கத்தோடு பேசினார்.

* தேர்தல் பிரசார பயணத்தில், சில இடங்களில் ஓட்டல்களிலும், சில இடங்களில், தி.மு.க., பிரமுகர்கள் வீடுகளிலும் தங்கியுள்ளார். கட்சி நிர்வாகிகள் வீடுகளில் தங்கும் போது, அங்குள்ள குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, வடிவேலுடன் குரூப் போட்டோ எடுத்துக்கொள்ள அதிக ஆர்வம் காட்டினர்.

* கடைசி ஒரு நாள் முழுவதும் ரிஷிவந்தியத்தில் பிரசாரம் செய்ய வேண்டும் என்று விரும்பிய வடிவேலு, முதல்வர் கருணாநிதியை நேரில் சந்தித்து அனுமதி கேட்டார். முதல் நாள் திருக்கோவிலூரில் நடந்த பிரசாரத்தில், கல் வீச்சு நடந்து, வேட்பாளர் மண்டை உடைந்ததால், சென்னையிலிருந்து பிரபல தனியார் செக்யூரிட்டி நிறுவனத்தை சேர்ந்த, 30 பேர் மறுநாள் அவசர, அவசரமாக ரிஷிவந்தியத்திற்கு அழைத்து வரப்பட்டனர். ஆனாலும், முன் கூட்டியே ரிஷிவந்தியத்தில் நேரம் குறிப்பிட்டு விஜயகாந்த் பிரசாரம் செய்ய அனுமதி வாங்கியிருந்ததால், வடிவேலுவுக்கு அங்கு பிரசாரம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டது. காங்கிரஸ் வேட்பாளர் சிவராஜ் போலீஸ் அதிகாரிகளிடம் கெஞ்சியும்,போராடியும் யாரும் மசியாததால் ரிஷிவந்தியத்தை தவிர, தொகுதியில் உள்ள மற்ற கிராமங்களில் வடிவேலு பிரசாரம் செய்துவிட்டு திரும்பினார்.

* ரிஷிவந்தியத்தில் கடைசி நாள் பிரசாரம் என்பதால், ஜெயலலிதாவையும், விஜயகாந்தையும் காரசாரமாக வடிவேலு பேசுவார் என்று ஆளுங்கட்சியினர் எதிர்ப்பார்த்திருந்தனர். ஆனால், மற்ற நாட்களைவிட அன்று வடிவேலு வேகம் காட்டாமல், அடக்கியே வாசித்தார். அவரது பிரசாரத்தில் ஜெயலலிதா பற்றி ஒரு வார்த்தைகூட பேசவில்லை. தன் பேச்சு, “ஸ்கிரிப்ட்’ இப்படித்தான் இருக்க வேண்டுமென, வடிவேலு சொன்னதால் அதற்கேற்ப உதவியாளர் கள் ஜெ.,வை தவிர்த்து தயாரித்துள்ளனர்.

* ரிஷிவந்தியத்தில் கடைசி நாள் பிரசாரம் முடித்து வடிவேலு சென்னை திரும்பும் நேரத்தில், “பிரசாரம் மூலம் இரண்டுகோடிக்கு மேல மக்களை நேரில் சந்திருப்பேன். எல்லாரையும் சிரிக்க வச்சிருக்கேன்; சிந்திக்க வச்சுருக்கேன். அதோட, “டிவி’ மூலம் தமிழகத்தில் அனைத்து மக்களுக்கும் என் பேச்சு சென்றடைந்திருக்கும். எப்படியோ, தி.மு.க.,வுக்கு நல்லது நடக்கணும்’என்று சொல்லி பெருமிதப்பட்டுள்ளார் வடிவேலு.

* வடிவேலுவுக்கும், 18 பேர் கொண்ட குழுவினருக்கும், 10 நாட்களுக்கு சாப்பாட்டு செலவு, 1 லட்சத்து, 12 ஆயிரம் ரூபாய் ஆகியுள்ளது. இத்துடன் வடிவேலுவுக்கு, அந்தந்த மாவட்ட செயலர்கள் மூலம், “போதும், போதும்’ என்று வடிவேலு மகிழும் வகையில், பணம் கொடுக்கப்பட்டுள்ளது. இவைகளுடன் தி.மு.க., தலைமை கழகத்தின் மூலம், பெரும் தொகை ஒன்றும் வழங்கப்பட்டுள்ளது. கூட்டிக்கழித்து பார்த்தால், “சன்மானம்’ சில கோடிகளைத் தொடும் என்கிறது தகவலறிந்த வட்டாரம்.

(dm)

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: