வடிவேலு ஒரு சாக்கடை!!! : அமீர்

இந்தத் தேர்தலில் எல்லாரது பேச்சையும் கேட்டேன். ஆனால் வடிவேலு அளவுக்கு மோசமாகப் பேசியவர்கள் யாருமில்லை. நாகரீகமான முதல்வருக்குப் பக்கத்தில் இந்த அநாகரீகமான சாக்கடை எதற்கு? என்று கடுமையாகத் தாக்கியுள்ளார் அமீர்.

சமீபத்தில் ஆனந்த விகடன் பத்திரிகைக்கு அவர் அளித்த பேட்டியில், “இந்த தேர்தலில் சீமானின் எழுச்சிமிகு பேச்சு தொடங்கி, ,வைகோ வின் மவுனம் உட்பட,அனைத்து அரசியல் தலைவர்ல்களின் பேச்சையும் நான் கூர்ந்து கவனித்தேன்.வடிவேலு அளவுக்கு யாரும் கேவலாமாகவோ கிழ்த்தரமாகவோ பேசவில்லை. விஜயகாந்தை குடிகாரன் என்கிறார் இவர். குடிக்கிரவன் கெட்டவன் என்றால் அதை விற்கிறவன்? இதை கேட்டால் நான் யாரையோ ஆதரிப்பதாக நினைக்க வேண்டாம்.

அரசே நடத்தும் மதுக்கடையில் அரசு நிர்ணயைத்த விலையை கொடுத்து ,மது குடிப்பதை தவறு என்று எப்படி சொல்ல முடியும்? தவறுன்னா ஏன் அரசாங்கமே அந்த கடைகளை திறந்து வெச்சிருக்கு?

விஜயகாந்த் வேட்பாளரை அடிச்சது உண்மைன்னா நிச்சயமா அது தப்புதான்… விஜயகாந்த் வேட்பாளரை அடிச்சாரா இல்லை, உதவியாளரை தட்டினாரா என்பது தெளிவாக தெரியவில்லை… ஆனால் அவர் அடிச்ச மாதிரியான காட்சிக்கு பிண்ணனி இசை எல்லாம் அமைச்சு, கிராஃபிக்ஸ் வேலைகளை காட்டியது, அடிச்சதை விட மோசமான விசயம்.

குடிச்சதையும் அடிச்சதையும் சொல்லி சொல்லியே மக்களோட பிரச்சனைகளை மறக்கடிச்சிட்டாங்களே அதுதான் ஜீரணிக்க முடியாத துரோகம்.

சாமி ஊர்வலத்துக்கும், சாவு வீட்டுக்கும் கூட்டம் வரும். வேடிக்கை பார்ப்பது தமிழ் மக்களோட தவிர்க்க முடியாத கலாச்சாரம். யாரையும் திட்டிப் பேசினா, நாலு பேர் கேட்கத்தான் செய்வாங்க. அந்த மாதிரிதான் வடிவேலுக்கும் கூட்டம் சேர்ந்தது.

விஜயகாந்துக்கு கேப்டன்கிற பட்டம் ஏன் கேட்குற வடிவேலுக்கு வைகை புயல் கிற பட்டம் மட்டும் ஏன்..? இந்த புயல் எந்த மரத்தை சாய்ச்சுச்சு..? எந்த வீட்டை இடிச்சுச்சு..? வட்ட செயலாளர் தொடங்கி, ரொளடிங்க வரைக்கும் அத்தனை பேருக்கும் பட்டம் கொடுத்தே இந்த ஊரு பழகிடுச்சு.

விஜயகாந்தை பத்தி இத்தனை பேசற வடிவேலு, அந்த அம்மையார் விசயத்தில் அடக்கி வாசிப்பது ஏன்..?ஆட்சி மாறினால் அதோ கதி ஆகிடும்ங்கிற பயம்தானே..?எப்போதுமே… அம்மையார் என்றுதான் அழைப்பேன் என 87 வயதிலும் நாகரீகத்துடன் பேசுகிறார் முதல்வர் கலைஞர். அந்த அசாத்திய நாகரீகத்துக்கு பக்கத்தில் இந்த சாக்கடை எதற்கு?

சினிமாவில் ஒரு காமெடி நடிகரோட ரோல் ஹீரோவின் பின்னால் ஒளிந்து கொள்வதுதான்! நிஜத்திலும் வடிவேல் அதைத்தான் பண்ணி இருக்கார்.கலைஞர்,ஸ்டாலின், அழகிரி பின்னால் ஒளிந்துகொண்டு பேசினார்.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு, திருவிழா பொம்மை போல தெருவுக்கு வரும் அத்தனை சினிமா நட்சத்திரங்களையும் கண்டிக்கிறேன்…கடந்த தேர்தலில் அ.தி.மு.க வுக்கு ஆதரவாக ஓட்டு கேட்ட சிம்ரனும்,கவிஞர் சினேகனும் இன்றைக்கு எங்கே போனார்கள்..?” என்று ஆவேசமாகக் கூறியுள்ளார்.

(tt)

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s