ஜெகனுக்கு தேர்தலில் நெருக்கடி: அதே பெயரில் 10 பேர் போட்டி

ஆந்திராவில் கடப்பா லோக்சபா, புலிவெந்துலா சட்டசபை தொகுதிகளுக்கு வேட்பு மனு தாக்கல் முடிவடைந்தது. கடப்பா எம்.பி., பதவியை ஜெகன்மோகன் ரெட்டியும், புலிவெந்துலா தொகுதி எம்.எல்.ஏ., பதவியை, மறைந்த ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டியின் மனைவி விஜயலட்சுமியும் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, இந்த இரு தொகுதிகளிலும் மே மாதம் 8ம் தேதியன்று இடைத்தேர்தல் நடக்கிறது.

கடப்பா லோக்சபா தொகுதிக்கு காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக மாநில சுகாதாரத் துறை அமைச்சர் ரவீந்திரநாத் ரெட்டியும், தெலுங்கு தேசம் கட்சி சார்பில் ராஜ்யசபா எம்.பி., மைசூரா ரெட்டியும், ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் கட்சி சார்பில் ஜெகன்மோகன் ரெட்டியும், பா.ஜ., சார்பில் கோபால சுப்பா ரெட்டி, பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் சுரேஷ்பாபு என்பவரும் இக்கட்சிகளின் அதிகாரப்பூர்வ வேட்பாளர்களாக வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

மேலும், சிறிய அரசியல் கட்சிகளின் சார்பில் ஏழு வேட்பாளர்களும் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

கடப்பா தொகுதியில் ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் சார்பில் முன்னாள் எம்.பி., ஜெகன் மோகன் ரெட்டி உட்பட ஜெகன்மோகன் ரெட்டி என்ற பெயர் கொண்ட 10 பேரும் வேட்பு மனு தாக்கல் செய்தனர். அதேபோன்று, புலிவெந்துலா சட்டசபை தொகுதியிலும் விஜயலட்சுமி தவிர இதே பெயரில் மேலும் ஐந்து பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

புலிவெந்துலா சட்டசபை தொகுதிக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் அமைச்சரும் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் தம்பியுமான ஒய்.எஸ்.விவேகானந்த ரெட்டியும், தெலுங்கு தேசம் கட்சியின் சார்பில் ரவீந்திரநாத் ரெட்டியும் ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் சார்பில் ஜெகன்மோகன் ரெட்டியின் தாய் ஒய்.எஸ்.விஜயலட்சுமியும் வேட்பு மனு தாக்கல் செய்தனர். ஏழு சிறிய கட்சிகளின் சார்பில் ஏழு பேரும் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

காங்கிரஸ் கட்சிக்கு எதிராகச் செயல்பட்டு வரும் ஜெகன்மோகன் ரெட்டி மற்றும் அவரது தாயாருக்கு இந்த இடைத்தேர்தலில் கடும் நெருக்கடி ஏற்படுத்த, ஒரே பெயர் கொண்ட வேட்பாளர்களை காங்கிரசார் மறைமுகமாக சுயேச்சை வேட்பாளர்களாக தேர்தல் களத்தில் நிறுத்தப்பட்டுள்ளதாக ஜெகன்மோகன் ரெட்டியின் ஆதரவாளர்கள் குறை கூறியுள்ளனர்.

கடப்பா, புலிவெந்துலா தொகுதிகளில் தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில், காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக மத்திய அமைச்சர் குலாம் நபி ஆசாத், முதல்வர் கிரண்குமார் ரெட்டி, நடிகர் சிரஞ்சீவி உட்பட மாநில அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் பிரசாரம் செய்ய உள்ளனர்.

தெலுங்கு தேசம் கட்சி சார்பில் சந்திரபாபு நாயுடு, பா.ஜ.,வின் சார்பில் அக்கட்சியின் மூத்த தலைவர் வெங்கையா நாயுடு மற்றும் வட இந்திய தலைவர்கள் பிரசாரம் செய்வர் எனக் கூறப்பட்டது.

இந்த இரு தொகுதிகளிலும் ஜெகன்மோகன் ரெட்டி, அவரது தாயார் விஜயலட்சுமி ஆகிய இருவர் தலைமையில் காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ., மட்டுமே இதுவரை பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

(dm)

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s