உள்ளடி வேலையால் தனித்து விடப்பட்ட சி.வி.சண்முகம்

விழுப்புரம் தொகுதியில் சிட்டிங் அமைச்சரான பொன்முடியை வீழ்த்த, திண்டிவனத்தில் உள்ள அ.தி.மு.க., மாவட்ட செயலர், சி.வி. சண்முகம் களமிறக்கப்பட்டார். உள்ளூர் அ.தி.மு.க.,வினர் கோஷ்டி காரணமாக எதிரணியில் சரணடைந்து விடுவதால், வலுவான ஒரு வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்ற நோக்கில் சண்முகம் களமிறக்கப்பட்டார்.

பொன்முடி கூட்டணியினருடன் ஒருபுறமும், தம்பிகள், அவரது மனைவி, அவரது மகன்கள் தனியாகவும் ஓட்டு கேட்டு ஆதரவு திரட்டினர். தனித்தனி அணிகளாகவும், தி.மு.க.,வினர் ஆதரவு திரட்டினர். ஆனால், அ.தி.மு.க., தரப்பில், சண்முகம் தலைமையில் ஒரே அணியாக மட்டுமே பிரசாரம் மேற்கொண்டனர். கோஷ்டித் தலைவர்கள் அவ்வப்போது பிரசாரத்தை துவக்கியதும் கலந்து கொண்டனர். இவர்கள் பிரசாரம் முடிக்கும்போது காணாமல் போயிருந்தனர்.

கூட்டணிக் கட்சிகளில், மனித நேய மக்கள் கட்சியினர், ஓரிரு நாட்கள் தனியாக ஆதரவு திரட்டினர். தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், ரிஷிவந்தியத்திலும், மாவட்ட செயலர் வெங்கடேசன் திருக்கோவிலூரிலும் போட்டியிட்டதால், தே.மு.தி.க.,வினர் அங்கே குவிந்து விட்டனர்.

உள்ளூர் நிர்வாகிகள், முக்கிய கூட்டணி நிர்வாகிகள் போதிய ஒத்துழைப்பில்லாவிடினும், சக கட்சி மற்றும் கூட்டணித் தொண்டர்கள், கிராமங்களில் உற்சாகத்துடன் வரவேற்றதால், முழு நம்பிக்கையுடன் சண்முகம் பிரசாரத்தை மேற்கொண்டிருந்தார். அவரது அண்ணனும், திண்டிவனத்திலிருந்து வந்த அவரது உறவினர்களுடன், உள்ளூர் நிர்வாகிகள் சிலர் மட்டுமே நெருக்கமாக இருந்து பணியாற்றினர்.

தேர்தல் தினத்தில் கூட சண்முகம் மட்டுமே அனைத்து ஓட்டுச்சாவடிகளுக்கும் சென்று கண்காணித்தபடி பூத் ஏஜன்டுகளை உஷார்படுத்தி வந்தார். விழுப்புரத்தைச் சேர்ந்த, அ.தி.மு.க., நிர்வாகிகள் சிலர், தேர்தலன்று, உளுந்தூர்பேட்டைக்கு சென்று, குமரகுருவிற்கு ஆதரவாக பணியாற்றினர். விழுப்புரத்திற்கு சீட் கேட்டு காத்திருந்த முக்கிய நிர்வாகிகள் பெயரளவில் மட்டுமே வந்து சென்றனர். எதிர் கோஷ்டியில் உள்ள கட்சி எம்.பி.,யும் ஒரு நாள் ஓட்டு கேட்டதோடு சரி, பின்னர், திரும்பி பார்க்கவில்லை.

சண்முகம் வெற்றி பெற்று தொகுதியை தக்கவைத்துக்கொண்டால், நமக்கான வாய்ப்புகள் போய்விடுமென சிலரும், இருந்த பதவிகள் பறிக்கப்பட்டு சண்முகம் ஆதரவாளர்களுக்கு வழங்கியுள்ளதால், பதவி போன சிலர் உள்ளடி வேலையாக கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக வேலை செய்யவில்லை என தெரிவிக்கின்றனர்.

(dm)

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s