இன்டர்நெட் உபயோகம் வரமா… சாபமா…?

இன்டர்நெட் மூலம் உலகமே உள்ளங்கையில் வந்து விட்டது.
இவ்வளவு பெரிய விஞ்ஞான வளர்ச்சி, பல்வேறு வகைகளில் சமூக மேம்பாட்டிற்கு உதவினாலும், கலாசார சீர்கேடுகள் உருவாகாமல் இல்லை.
இது, மாணவர்களின் வாழ்க்கை தடத்தை புரட்டி விடுவதால், எதிர்காலம் கேள்விக்குறியாகவும் மாறிவிடும். இளம் தலைமுறையை ஆட்டுவிக்கும் இன்டர்நெட் வரமா… சாபமா… நல்லதா… கெட்டதா… வேண்டுமா… வேண்டாமா… என்ற யோசனையுடன், கம்பம் ஸ்ரீஆதிசுஞ்சனகிரி மகளிர் கல்லூரி மாணவியரை அணுகினோம்.
சும்மா சொல்லக் கூடாது, இன்டர்நெட் பயன்பாட்டை பற்றி நன்றாக தெரிந்து வைத்து, ஆழமாக விவாதித்தனர்.

* ஜி.சரண்யா: இன்டர்நெட் பயன்பாட்டின் மூலம், நகர்புற மாணவர்களுக்கு கிடைக்கும் கல்வி, வேலைவாய்ப்புகள் கிராமப்புற மாணவர்களுக்கும் கிடைக்கின்றன. நகர்புற, கிராமப்புற மாணவர்களுக்கு இடையிலான வேறுபாடு குறைந்துள்ளது. ஆனால், மாணவர்களின் வாசிக்கும் திறன் முற்றிலும் குறைந்து விட்டது.

* சி.லாவண்யா: பிரவுசிங் சென்டர்களில் நகர்புறம், கிராமப்புறம் வேறுபாடு இன்றி தவறுகள் நடக்கின்றன. இன்டர்நெட்டில் தேவையில்லாத பல தகவல்கள், மாணவர்களின் மூளையை மழுங்கச் செய்து, மனதை விஷமாக்குகிறது. “சாட்டிங், டேட்டிங்’ கலாசாரம் மாணவர் சமுதாயத்தை பெரும் ஆபத்தில் தள்ளி விடுகிறது.

* எம்.உமா மகேஸ்வரி: மாணவர்கள் போட்டி தேர்வுகளில் பங்கேற்க தேவையான எல்லா விஷயங்களும், இன்டர்நெட்டில் கிடைக்கின்றன. குறைந்த செலவில் வெளிநாடுகளில் உள்ள நம் குடும்ப உறுப்பினர்களின் முகம் பார்த்து தொடர்பு கொண்டு பேச முடிகிறது. இதனால், நன்மைகளே அதிகம் நடக்கின்றன.

* டி.நதியா: தற்போதைய தொழில் நுட்பத்தில், எல்லா “பாஸ்வேர்டு’களையும் திருடுகின்றனர். நம் இ-மெயில் முகவரியை பயன்படுத்தி, பயங்கரவாதிகள் சமூகத்திற்கு பேராபத்தை உருவாக்குகின்றனர். இதனால் ஏற்படும் பாதிப்பினை உணர முடிவதில்லை.

* என்.பிரியா: இன்டர்நெட் பயன்பாடு இல்லாவிட்டால், நாம் மிகவும் பின்தங்கி விடுவோம். இந்த உலக சூழ்நிலையோடு பொருந்த முடியாத சிக்கலில் மாட்டிக் கொள்வோம். வங்கி கடன் பரிவர்த்தனை, கல்வி உதவித்தொகை, அரசு திட்டங்கள், சரக்கு வர்த்தகம் எல்லாம் இன்டர்நெட் மயமாகி விட்டது.

* ஏ.அஷீரா பானு: படித்துக் கொண்டே இன்டர்நெட் மூலம் வேலைவாய்ப்பு பெறலாம். நமக்கு எது சரி, எது தேவை என்பதை பயன்படுத்த தெரிந்தால், இன்டர்நெட்டை வென்று விடலாம். நம்மை அறிவுசார்ந்த அடிமைகளாக மாற்றுகிறது என்பதும் உண்மை தான்.

* ஜி.முத்துலட்சுமி: மாணவர் சமுதாயத்தை குறி வைத்து ஆபாசமான தகவல்கள், படங்களை இன்டர்நெட் கிளப்புகள் வெளியிடுகின்றன. இளைய சமுதாயம் பாதிக்கப்படுகிறது என்பது தெரிந்தும், பல இணையதள சேவைகளை அரசு ஏன் இன்னமும் தடை செய்யவில்லை? இன்டர்நெட் பயன்படுத்துவது பற்றி தெளிவான வழிகாட்டுதல் வேண்டும்.

* வி.ரேவதி: இன்டர்நெட் என்ற கட்டுப்பாடற்ற சுதந்திரம், மாணவர்கள் சமுதாயத்தை மட்டுமல்ல, எல்லா தரப்பு மக்களையும் நெருக்கடியில் தள்ளுகிறது. உலகத்தின் மிகப்பெரிய அச்சுறுத்தலாக “ஆன்-லைன்’ மோசடி உருவாகி வருகிறது. திருமண மோசடிகளும் சமூக கலாசாரத்தை சீரழிக்கின்றன.

* கே.ஆதவி: வைரஸ் திருடர்கள், மோசடி பேர்வழிகள் எல்லோருக்கும் சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்கிறது. நம் போட்டோ கிடைத்தாலோ, வங்கி கணக்கு எண் கிடைத்தாலோ, நம்மை குழிதோண்டி புதைத்து விடுவர். விருப்பப்பட்ட அனைத்தும் ஒரே இடத்தில் எல்லாம் கிடைப்பதால் சோம்பலும், தேடும் திறனும் குறைந்து விடுகிறது. இவ்வளவு சுதந்திரம் வழங்குவதை அரசு தடுத்தேயாக வேண்டும்.

(dm)

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s