site4any

Free downloadable Tamil & Tamil dubbed movies, Free Tamil books & News, Articles, Health tips…

ராஜாவின் கைதுக்கு காரணமான தமிழர்

Posted by sambala87(சூரியன்) on April 20, 2011

“ஸ்பெக்ட்ரம்’ ஊழலில் பதவி விலகி, தற்போது டில்லி திகார் சிறையில் உள்ளார் முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா. இதற்கு சி.பி.ஐ., மற்றும் சி.ஏ.ஜி., காரணம் என்றாலும், “ஸ்பெக்ட்ரம்’ விவகாரத்தில் என்ன நடந்தது என்பதை சி.பி.ஐ.,க்கு விலாவாரியாக எடுத்துச் சொன்னவர் ஒரு தமிழர்.

சுற்றுச்சூழல் துறையில், ராஜா அமைச்சராக இருந்தபோது, அவருக்கு கூடுதல் தனிச் செயலராக பணியாற்றினார் அந்த தமிழர். தொலைத்தொடர்புத் துறைக்கு ராஜா மாறியபோது, இந்த தமிழரும் அவரோடு சேர்ந்து கொண்டார். 2009ல் லோக்சபா தேர்தல் நடைபெறுவதற்கு முன், ராஜாவிற்கும், அந்த தமிழருக்கும் ஏதோ பிரச்னை ஏற்பட, அவர் ராஜாவிடமிருந்து பிரிந்து போனார். அவர் தான் சி.பி.ஐ.,க்கு அனைத்து விவரங்களையும் கூறியுள்ளார்.

கனிமொழி எப்படி இந்த பிரச்னையில் தலையிட்டார்? தி.மு.க., தொலைக்காட்சிக்கு எப்படி பணம் போனது? ராஜாவிற்கு நெருக்கமான தொழிலதிபர்கள் யார்? நிரா ராடியாவிற்கும், ராஜாவிற்கும் எப்படி தொடர்பு? என, அனைத்து விவரங்களையும் போட்டுக் கொடுத்து விட்டாராம். தற்போது இவருக்கு மத்திய அரசு பாதுகாப்பு அளித்துள்ளது.

(dm)

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: