site4any

Free downloadable Tamil & Tamil dubbed movies, Free Tamil books & News, Articles, Health tips…

உள்ளாட்சிதேர்தலில் முதன்முறையாக ஆன்லைன் அறிமுகம்

Posted by sambala87(சூரியன்) on April 20, 2011

தகவல் தொழில்நுட்ப புரட்சியினை பயன்படுத்துமவிதமாக குஜராத் மாநிலத்தில் முதலாக உள்ளாட்சி தேர்தலில் ஆன்லைன் மூலம் வாக்களிக்கும் முறை பரிச்சார்த்த முறையில் அறிமுகப்படுத்தப்பட்டு அதில் கனிசமான அளவு வெற்றியும் கிடைத்துள்ளது.

குஜராத் மாநிலத்தில் உள்ள மாநகராட்சிகளில் மிகச்சிறிய மாநகராட்சி காந்திநகர் ஆகும். இங்கு மொத்தம் 1 லட்சத்து 35 ஆயிரம் வாக்காளர்களே உள்ளனர். மொத்தம் 11 வார்டுகளை உள்ளடக்கியது காந்திநகர் மாநகராட்சி. காந்திநகர் துவக்கத்தில் , அம்மாநில தலைநகர் ஆமதாபாத்தின் கட்டுப்பாட்டி்ல் இருந்தது. இந்நகர் மக்‌களுரிமை உரிமை அமைப்பினர் மாநகார்டசியாக அறிவிக்க கோரி ஐகோர்ட் வரை சென்று வெற்றியும் பெற்றனர்.

அப்படிப்பட்ட இம்மாநகராட்சிக்குட்பட்ட 11 வார்டுகளுக்கும் நேற்று உள்ளாட்சி தேர்தல் நடந்தது. இதில் 116 பேர் போட்டியிட்டனர். பா.ஜ., காங்கிரஸ் சார்பில் வேட்பாளர்கள் களம் இறங்கினர். இது குறித்து மாநில தேர்தல் ஆணையர் கே.சி.கபூர் கூறுகையில், சோதனை அடிப்படையில் ஆன்லைன் மூலம் தேர்தல் நடத்த முதல்கட்டமாக 670 பேர் தங்களது பெயர்களை ஆன்லைன் மூலம் வாக்களிக்க பதிவுசெய்திருந்தனர்.

தேர்தலின் கடைசி நேரத்தின் போது 500 பேர் ஆன்லைனில் மூலம் தங்களது வாக்கினை பதிவு செய்துள்ளனர். இது எங்களது முயற்சிக்கு கிடைத்த வெற்றி, பொதுவாக ஆன்லைன் மூலம் வாக்களிக்கும் திட்டம் பெருமளவு தோல்வியடைந்துள்ளது. ஆனால் எங்களது இந்த சிறிய முயற்சி நல்ல பலன்கிடைத்துள்ளது என்றார்.

மேலும் இவரது முயற்சியினை கேள்விபட்ட ஆந்திரா, மகாராஷ்டிரா, கர்நாடகா ‌மாநில தேர்தல் ஆணையர்களும் தங்களது மாநிலத்தில் செயல்படுத்த முயன்று வருகினறனர். குஜராத் மாநிலத்தின் வளர்ச்சியில் அதிதீவிர முயற்சி மேற்கொண்டு வரும் அம்மாநில முதல்வர் நரேந்திர மோடியின், தகவல்தொழில்நுட்பத்தில் ஏற்படுத்தியுள்ள திட்டங்களில் இதுவும் ஒன்று எனலாம். அது ஓரளவுக்கு வெற்றி பெற்றுள்ளது.

(dm)

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: