site4any

Free downloadable Tamil & Tamil dubbed movies, Free Tamil books & News, Articles, Health tips…

ஓட்டு போட பெண்கள் குவிந்தது ஏன்?

Posted by sambala87(சூரியன்) on April 19, 2011

சட்டசபை தேர்தலில் கோபி தொகுதியில், அ.தி.மு.க., வேட்பாளராக களம் கண்டவர் செங்கோட்டையன். அ.தி.மு.க., தலைமை நிலைய செயலராக உள்ள இவர், அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதாவின், “டூர் புரோகிராமை’ திறம்பட வழிநடத்தி, அவரின் பாராட்டைப் பெற்றவர். ஜெயலலிதா பயணத் திட்டத்தில், எந்த இடத்தில் பேச வேண்டும் என்பது உள்ளிட்ட அனைத்து விஷயங்களையும் விரல் நுனியில் வைத்துக் கொண்டு, கட்சிக்காரர்களை விரட்டி வேலை வாங்குவதில் வல்லவர் இவர்.

தேர்தலுக்குப் பின் கோபி குள்ளம்பாளையத்தில் உள்ள தன் பண்ணை வீட்டில் ஓய்வில் இருக்கும் அவர் அளித்த, “ரிலாக்ஸ்’ பேட்டி: ஐந்தாண்டுகளாக உயர்ந்து வரும் விலைவாசி, கடுமையான மின் வெட்டு, சட்டம் ஒழுங்கு பிரச்னைகளால், தமிழக மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். பல்வேறு தொழில்களில், ஆளும் கட்சியினரின் குடும்பத்தினர் தலையீடு காரணமாக அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், சென்னை முதல் கன்னியாகுமரி வரை அ.தி.மு.க.,வுக்கு ஆதரவான அலை வீசுகிறது.

அ.தி.மு.க., தேர்தல் அறிக்கையில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளான, பெண்களுக்கு இலவச கிரைண்டர், மிக்சி, பேன், 20 கிலோ இலவச அரிசி, தாலிக்கு நான்கு கிராம் தங்கம், திருமண உதவித் தொகை 25 ஆயிரம் ரூபாயாக உயர்வு போன்றவை காரணமாக, பெண்கள் மனதில் எழுச்சி ஏற்பட்டுள்ளது. இதனால் தான் ஓட்டுப்பதிவு நடந்த 13ம் தேதி, பெண்கள் காலை 7 மணி முதல் ஓட்டுச்சாவடிகளில் குவிந்தனர். தமிழக பெண்கள், சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.,வுக்கு ஆதரவாக மவுனப் புரட்சியை நடத்தியுள்ளனர்.

வரும் மே 13ம் தேதிக்குப் பிறகு, மூன்றாவது முறையாக ஜெயலலிதா தமிழக முதல்வராக பொறுப்பேற்றுக் கொள்வதை, எந்த சக்தியாலும் தடுக்க முடியாது. ஜெயலலிதா தலைமையில் பல திட்டங்களை செயல்படுத்தி, முன்னேற்ற பாதையில் தமிழகம் செல்லும் நாள் வெகுதொலைவில் இல்லை. இவ்வாறு செங்கோட்டையன் தெரிவித்தார்.

(dm)

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: