“49 ஓ’: தமிழகம் முழுவதும் 24 ஆயிரத்து 591 பேர்…

சட்டசபை தேர்தலில், தமிழகம் முழுவதும், 24 ஆயிரத்து 591 பேர், “49 ஓ’ வாய்ப்பை பயன்படுத்தியுள்ளனர். சட்டசபை தேர்தலில், அதிகபட்சமாக கீழ்வேளூர் தொகுதியில், 91.89 சதவீதமும், குறைந்தபட்சமாக, துறைமுகம் தொகுதியில், 63.65 சதவீதமும் ஓட்டுக்கள் பதிவாகி உள்ளன.

தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:
இந்த சட்டசபை தேர்தலில், யாருக்கும் ஓட்டளிக்க விரும்பவில்லை என்பதற்காக, “49 ஓ’ வாய்ப்பை, 24 ஆயிரத்து 591 பேர், பதிவு செய்துள்ளனர். இதில், கே.வி.குப்பம் தொகுதியில் பதிவானவர்கள் விவரம் வரவில்லை. நெய்வேலி, ரிஷிவந்தியம், விருதுநகர் மாவட்டத்தில் ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், விருது நகர், அருப்புக்கோட்டை ஆகிய தொகுதிகளில் ஒருவர் கூட, “49 ஓ’ வாய்ப்பை பயன்படுத்தவில்லை.
மாவட்ட வாரியாக, “49 ஓ’ பயன்படுத்தியவர்கள்:
திருவள்ளூர் 1,347
சென்னை 3,407
காஞ்சிபுரம் 1,391
வேலூர் 464
கிருஷ்ணகிரி 381
தர்மபுரி 252
திருவண்ணாமலை 209
விழுப்புரம் 280
சேலம் 940
நாமக்கல் 530
ஈரோடு 1,133
திருப்பூர் 1,796
நீலகிரி 1,306
கோவை 3,061
திண்டுக்கல் 554
கரூர் 335
திருச்சி 1,046
பெரம்பலூர் 203
அரியலூர் 106
கடலூர் 430
நாகப்பட்டினம் 377
திருவாரூர் 181
தஞ்சை 543
புதுக்கோட்டை 331
சிவகங்கை 233
மதுரை 783
தேனி 336
விருதுநகர் 269
ராமநாதபுரம் 209
தூத்துக்குடி 879
திருநெல்வேலி 1,109
கன்னியாகுமரி 170

திருவாரூர் தொகுதியில் 59 பேரும், ஸ்ரீரங்கம் தொகுதியில் 31 பேரும், கொளத்தூர் தொகுதியில் 209 பேரும், மயிலாப்பூர் தொகுதியில் 260 பேரும், “49 ஓ’ வாய்ப்பை பயன்படுத்தியுள்ளனர். மொத்த ஓட்டுப்பதிவை பொறுத்தவரை, துறைமுகம் தொகுதியில் தான் மிகக் குறைவாக 63.65 சதவீதம் ஓட்டுக்கள் பதிவாகியுள்ளன. அதிகபட்சமாக கீழ்வேளூர் (தனி) தொகுதியில் 91.89 சதவீத ஓட்டுக்கள் பதிவாகி உள்ளன. இதில், 88.23 சதவீதம் ஆண்கள்; 95.57 சதவீதம் பெண்கள்.

அதிகபட்சமாக, 86 சதவீதம் ஓட்டுக்கள் பதிவான கரூர் மாவட்டத்தில், குளித்தலை தொகுதியில் தான் அதிகமாக 88.66 சதவீதம் ஓட்டுக்கள் பதிவாகி உள்ளன. தமிழகத்தில் தேர்தல் பணியில் ஈடுபட்ட 2.88 லட்சம் அரசு ஊழியர்கள், 66 ஆயிரம் முன்னாள் ராணுவத்தினர் மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் ஆகியோர், தபால் ஓட்டு போட்டு உள்ளனர்.

இந்த தபால் ஓட்டுக்கள், இன்னும் வந்து சேரவில்லை. எட்டு ஓட்டுச்சாவடிகளில் மறு ஓட்டுப்பதிவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இவை அனைத்தும் தெரிந்த பின் தான், முழுமையான ஓட்டுப்பதிவு சதவீதம் வெளிவரும். இவ்வாறு பிரவீன்குமார் தெரிவித்தார்.

(dm)

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s