site4any

Free downloadable Tamil & Tamil dubbed movies, Free Tamil books & News, Articles, Health tips…

மது விற்பனை இரண்டு நாட்களில் மட்டும், 141 கோடி

Posted by sambala87(சூரியன்) on April 18, 2011

டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை இரண்டு நாட்களில் மட்டும், 141 கோடி ரூபாய்க்கு விற்பனை நடந்துள்ளது.

தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் மதுக்கடைகள், காலை, 10 மணி முதல், இரவு, 10 மணி வரை செயல்படுகின்றன. சட்டசபை தேர்தலை முன்னிட்டு, பிரசாரம் முடிவுக்கு வந்த நாளான, 11ம் தேதி, மாலை 5 மணி முதல், “டாஸ்மாக்’ கடைகளையும் மூட தேர்தல் கமிஷன் உத்தரவிட்டது. ஏப்ரல் 13 காலை, 10 மணி வரை கடைகள் மூடித்தான் இருக்கும்.

இரவில் குடிப்பதை, தமது அன்றாட கடமைகளின் ஒன்றாக கொண்டுள்ள “குடிமகன்’கள் தவித்துப் போய்விடுவர் என்பதால், ஆங்காங்கே கள்ளச்சந்தையில் சரக்கு விற்பனை நடந்துகொண்டு தான் இருக்கிறது. இருப்பினும், தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள தம் தொண்டர்களுக்கு, தாகத்தால் தொண்டை வறண்டுவிடக் கூடாது என்பதற்காக, அரசியல் கட்சி பிரமுகர்களும் முந்தைய நாட்களிலேயே சரக்குகளை வாங்கி இருப்பு வைத்துள்ளனர். அந்த வகையில், 11ம் தேதி காலை, 10 மணி முதல், மாலை, 5 மணி வரை (ஏழு மணி நேரத்தில்) மட்டும், 64 கோடி ரூபாய்க்கு சரக்கு விற்பனை நடந்துள்ளது. அதற்கு முந்தைய நாளான 10ம் தேதி காலை முதல், இரவு வரை, 12 மணி நேரத்தில் 77 கோடி ரூபாய்க்கு விற்றுத் தீர்ந்துள்ளது.

பொதுவாக, வார நாட்களில், 40 முதல், 45 கோடி ரூபாய்க்கு சரக்கு விற்பனை இருக்கும். வாராந்திர நாட்களான சனி, ஞாயிறுகளில், 60 கோடி ரூபாய் இருக்கும். தேர்தல் ஸ்பெஷலாக, திங்கள்கிழமை, 77 கோடி ரூபாயும், செவ்வாய்கிழமை, 64 கோடி ரூபாயும் விற்றுள்ளது. “டாஸ்மாக்’கின் மாதாந்திர சராசரி விற்பனை 1,800 கோடி ரூபாய். அதையும் இந்த மாத விற்பனை முறியடித்து விடும். ஏனெனில், ஏப்ரல் முதல் தேதியிலிருந்து, 11ம் தேதி வரை மட்டும், 800 கோடி ரூபாய்க்கு விற்றுள்ளது. “குடிமக்கள் இப்படி கெட்டுவிட்டனரே’ என வருத்தப்படுவதற்கு எதுவும் இல்லை. இந்த பணம் தான், நமக்கு கிரைண்டராகவும், மிக்சியாகவும் திரும்ப கிடைக்க போகிறது!

(dm)

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: