site4any

Free downloadable Tamil & Tamil dubbed movies, Free Tamil books & News, Articles, Health tips…

தொடரும் மின்தடை, நூல் விலை உயர்வு: நெசவாளர்கள் ஓட்டு சிதறும்?

Posted by sambala87(சூரியன்) on April 18, 2011

நூல் விலை உயர்வு, தொடர் மின்தடை போன்ற பிரச்னைகளால் கொங்கு மண்டலத்தில் உள்ள விசைத்தறி மற்றும் கைத்தறி தொழிலை சார்ந்த லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக, சட்டசபை தேர்தலில், அவர்களது ஓட்டு சிதறும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

கொங்கு மண்டலத்தில் ஈரோடு, கோவை, திருப்பூர் மாவட்டங்கள் விசைத்தறி மற்றும் கைத்தறி தொழில் நிறைந்தவை. ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை, ஈரோடு, வீரப்பன்சத்திரம், சித்தோடு, மொடக்குறிச்சி, சென்னிமலை, பவானி, கொடுமுடி ஆகிய பகுதிகளில் கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவாளர்கள் அதிகளவில் உள்ளனர். பல்வேறு வகையான துணி ரகங்களை உற்பத்தி செய்து, ஏற்றுமதி செய்கின்றனர். இந்நிலையில், கடந்த 2008ல் இருந்து, மின்தடை அமல்படுத்தப்படுவதால் நெசவாளர்கள் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தினசரி ஆறரை மணி நேர மின்தடையால் நெசவாளர்கள் கொதிப்படைந்துள்ளனர். இதன் காரணமாக, ஜவுளி உற்பத்தியில் இருக்கும் துணிகள் முற்றிலும் சேதமடைந்தன.

ஜெனரேட்டரில் இயக்கும் போது உற்பத்தி செலவு அதிகரிப்பால், ஜவுளி உற்பத்தியாளர்கள் பாதிக்கப்பட்டனர். பல விசைத்தறி கூடங்கள் மூடும் நிலைக்கு தள்ளப்பட்டன. மேலும், கடந்த மூன்று ஆண்டுகளில் நூல் விலை கட்டுக்கு 400 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. அதுபோல், துணி விலை மீட்டருக்கு 40 முதல் 60 ரூபாய் வரை அதிகரித்துள்ளது. இதுபோன்ற காரணங்களால் ஜவுளி சார்ந்த தொழிலான பிளீச்சிங், துணி பதனிடுதல் தொழிற்சாலைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. விசைத்தறி மற்றும் கைத்தறி தொழிலை நம்பியுள்ள லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளனர்.

இது குறித்து வீரப்பன்சத்திரம் விசைத்தறி உரிமையாளர்கள் சங்க செயலர் அண்ணாதுரை கூறுகையில், “ஈரோடு சுற்றுவட்டாரத்தில் மட்டும் 3,500க்கும் மேற்பட்ட விசைத்தறி கூடங்களில் பணிபுரியும் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். நூல் விலை குறைக்க கோரி தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட இருந்தோம். இப்போது அதை தவிர்த்து, தற்போது அரசியல் கட்சியில் யார் வேட்பாளராக நிறுத்தப்பட்டாலும், அவர்களை அழைத்து, நூல் விலை குறைக்க பேச்சு நடத்த உள்ளோம்’ என்றார். நூல் விலை உயர்வு, தொடரும் மின்தடை போன்ற பிரச்னையால் விசைத்தறி மற்றும் கைத்தறி தொழிலை சார்ந்த லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதால், சட்டசபை தேர்தலில் தி.மு.க.,வுக்கு சாதகமாக நெசவாளர்கள் செயல்படுவார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.

(dm)

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: