திருமங்கலம் பார்முலாவுடன் தி.மு.க.,அணுகுமுறை: சாதகமா – பாதகமா?

தமிழக தேர்தலில், திருமங்கலம் பார்முலாவை தி.மு.க., கூட்டணி கட்சியினர், பல தொகுதியில் அரங்கேற்றியுள்ளனர். தி.மு.க.,வின் தேர்தல் அணுகுமுறைக்கு மக்கள் சாதகமான பதிலை தருவார்களா என்பது, கேள்விக்குறியாகியுள்ளது.

எந்த தேர்தலிலும் இல்லாத அளவுக்கு, தேர்தல் கமிஷன் சட்ட விதிமுறைகளை கெடுபிடியாக கடைபிடித்ததால், கடந்த தேர்தல் காலங்களில் இருந்த பரபரப்பும், தேவையற்ற ஆர்ப்பாட்டங்களில் இருந்தும் மக்கள் தப்பினர்.அதே நேரம், பணப் பட்டுவாடாவை தடுக்க, தேர்தல் கமிஷன் அதிரடியாக களம் இறங்கிய போதும், போலீசாரின் ஒத்துழைப்பு இல்லாமல் பல இடங்களில் பணப் பட்டுவாடாவை தடுக்க முடியாமல் போனது.
சில இடங்களில் எதிர்க்கட்சிகளும், சில இடங்களில் பொதுமக்களும் பணப் பட்டுவாடாவை தடுக்க எடுத்த முயற்சிக்கு, தேர்தல் அலுவலர்கள் கை கொடுத்திருப்பது பாராட்டுக்குரியது.

கடந்த இரு ஆண்டுகளாக, தமிழகத்தில் நடந்த இடைத்தேர்தல்களில், குறிப்பாக, மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதியிலும், கடந்தாண்டு இறுதியாக நடந்த தர்மபுரி மாவட்ட பென்னாகரம் இடைத்தேர்தலிலும், தி.மு.க., எந்த தேர்தலிலும் இல்லாத அளவுக்கு, வாக்காளர்களுக்கு, பணத்தை வாரி வழங்கியது. ஒரு ஓட்டுக்கு, 1,000 முதல், 2,000 ரூபாய் வரை வழங்கப்பட்டது.தி.மு.க.,வின் பணப் பட்டுவாடாவை தடுக்க தேர்தல் கமிஷன் எடுத்த நடவடிக்கை எதுவும் பலிக்கவில்லை. பென்னாகரம் இடைத்தேர்தலின் போது, பா.ம.க.,வினர் தேர்தல் பணியில் மிக முக்கிய பங்காக, தி.மு.க.,வின் தேர்தல் பண வினியோகத்தை தடுக்க, பல்வேறு முயற்சிகள் எடுத்ததால், கட்டுக்கட்டாக பணம், வேட்டி, சேலைகள் பிடிக்கப்பட்டன. அதையும் மீறி தேர்தலில் பணப் பட்டுவாடா தடுக்க முடியாமல் போனது.தற்போதைய தேர்தலில், தேர்தல் கமிஷன் பண வினியோகத்தை தடுக்க ஒரு மாதமாக சோதனைச் சாவடிகள் அமைத்தும், பறக்கும் படை அமைத்தும் பண கடத்தலை தடுக்க முயற்சி எடுத்தது. இந்த முயற்சியில் வியாபாரிகளும், அப்பாவி மக்களும் மட்டுமே சிக்கினர்.

தர்மபுரி மாவட்டத்தில் ஐந்து தொகுதியிலும், தி.மு.க., கூட்டணி கட்சியினர் இறுதிக்கட்ட பணப் பட்டுவாடா முயற்சிகளில் களம் இறங்கினர். பல இடங்களில் எதிர்க்கட்சியினர், போலீசாருக்கும் தேர்தல் பறக்கும் படை அலுவலர்களுக்கும் புகார் அளித்தும், முறையான நடவடிக்கை எடுக்கவில்லை. பல இடங்களில், அ.தி.மு.க., கூட்டணியினரும் தங்களுக்கு பலகீனமாக உள்ள சில இடங்களில், பணப் பட்டுவாடாவில் இறங்கினர்.தி.மு.க., கூட்டணி கட்சியினர், ஓட்டுக்கு, 200 ரூபாய் என, கடந்த மூன்று நாட்களாக வழக்கம் போல் வாக்காளர்களுக்கு வினியோகம் செய்துள்ளனர்.

பல இடங்களில், “200 ரூபாய் தானா’ என, மக்கள் கேள்வி எழுப்பினர். தி.மு.க.,வின் திருமங்கலம் பார்முலா தொகுதி முழுவதும் வாக்காளர்களை நோக்கி பாய்ந்த போதும், எதிர்பார்ப்புடன் காத்திருந்த வாக்காளர்களுக்கு கணிசமான பணம் கிடைக்கவில்லை.
இதனால், தி.மு.க., திருமங்கலம் பார்முலாவுக்கு வாக்காளர்கள் என்ன முடிவை கொடுப்பது என்ற முடிவோடு இன்று ஓட்டுப் பதிவில் கலந்து கொள்ள உள்ளனர். பல இடங்களில் ஓட்டுக்கு பணம் வாங்குவது குற்றம் என்பது தெரிந்த போதும், வலுக்கட்டாயமாக வந்த பணத்தை பாசத்தோடு வாக்காளர்கள் வாங்கியிக்கும் போதும், அது ஓட்டாக மாறுமா என்பது கேள்விக்குறியாகியுள்ளது.

தேர்தல் கமிஷன் கட்டுப்பாடுகளை எல்லாம் மீறி, தி.மு.க., கூட்டணி கட்சியினர் வாக்காளர்களுக்கு வினியோகம் செய்த பணத்துக்கு ஓட்டு கிடைக்குமா என்பது, மே 13ம் தேதி தேர்தல் முடிவு மட்டுமே வெளிச்சம் போட்டு காட்டும்.

(dm)

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s