கலைந்து போனதா “காமராஜர் ஆட்சி’ கனவு? காங்கிரசில் கவலை

தமிழகத்தில், “காமராஜர்’ ஆட்சி அமைப்போம் என்ற காங்கிரசாரின் கனவு நனவாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இத்தேர்தலிலும் கழகங்களோடு கூட்டணி என்ற முடிவை எடுத்தது தான், இந்த கேள்விக்கு காரணமாக அமைந்துள்ளது.

தமிழகத்தில் கடந்த, 1967ம் ஆண்டு தேர்தலில், காங்கிரஸ் ஆட்சிக்கு வில்லனாக, தி.மு.க.,வின் வளர்ச்சி அமைந்தது. விலைவாசி ஏற்றம், இந்தி மொழி எதிர்ப்பு போன்ற பிரச்னைகளை சமாளிக்க முடியாமல், காங்கிரஸ் ஆட்சி திணறியது. இதை, நல்ல முறையில் பயன்படுத்திக் கொண்டு, காங்கிரஸ் கட்சிக்கு எதிராக, தி.மு.க., தேர்தல் பிரசாரம் செய்தது. சுதந்திரம் அடைந்தது முதல், தமிழகத்தில் தொடர்ந்து, 15 ஆண்டுகள் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்திருந்த காங்கிரஸ், படுதோல்வி அடைந்தது.

1967ம் ஆண்டு முடிந்து போன காங்கிரஸ் சகாப்தம், மீண்டும் தமிழகத்தில் ஏற்படுவதற்கு வாய்ப்பில்லை என்ற நிலை தான், 44 ஆண்டுகளாக தொடர்கிறது. இடைப்பட்ட ஆண்டுகளில் நடந்த சட்டசபை மற்றும் லோக்சபா தேர்தல்களில், ஏதாவது ஒரு கழக கட்சியின் தோள்களில் அமர்ந்து, காங்கிரஸ் தேர்தலை சந்தித்து வருகிறது. ஒவ்வொரு முறையும், “தமிழகத்தில் காமராஜர் ஆட்சி அமைய பாடுபடுவோம்’ என, காங்கிரசில் உள்ள கோஷ்டி தலைவர்கள் லாவணி பாடி வந்தனரே தவிர, அதற்கான முயற்சியில் யாரும் ஈடுபடவில்லை. தனித்து போட்டியிடவோ அல்லது கூட்டணிக்கு தலைமையேற்று போட்டியிடவோ சக்தியில்லாததாக காங்கிரஸ், “பேரியக்கம்’ ஆகி விட்டது.

இந்த தேர்தலில் தி.மு.க.,வுடன் இணைந்து போட்டியிட்ட காங்கிரஸ், முன் எப்போதும் இல்லாத வகையில், 63 தொகுதிகளை கேட்டு பெற்றது. “கொடுத்ததை வாங்கிக் கொள்ளுங்கள்’ என்று ஒவ்வொரு முறையும் அதட்டி பேசி வந்த தி.மு.க., தலைமை, ஸ்பெக்ட்ரம் விவகாரம், பின் அதை தொடர்ந்து வந்த சி.பி.ஐ., ரெய்டுகள் ஆகியவற்றால் ஆடிப்போய், காங்கிரஸ் கேட்ட தொகுதிகளை கொடுத்து விட்டது. கேட்ட தொகுதிகளை பெற்றதே பெரும் வெற்றி தான் என, கதர் சட்டைகள் பெருமிதப்பட்டுக் கொண்டன. ஆனால், ஸ்பெக்ட்ரம் விவகாரத்திற்கு பிறகும், தி.மு.க.,வுடனான கூட்டணியை காங்கிரஸ் தொடர்ந்துள்ளதால், அவர்களது, “காமராஜர் ஆட்சி’ கனவு, கனவாகவே போய்விடும்!

கடந்த, 1967ம் ஆண்டில் இருந்து, கழக கட்சிகளே மாறி, மாறி ஆட்சிக்கு வருகின்றன. இரண்டு கழகங்கள் மீதும் ஏராளமான ஊழல் புகார்களும், அது குறித்த வழக்குகளும் உள்ளன. இதனால், வெறுத்துப்போன மக்கள், கழகங்கள் அல்லாத ஒரு கட்சி ஆட்சிக்கு வர வேண்டும் என விரும்புகின்றனர். மக்களின் இந்த மனமாற்றத்தை, காங்கிரஸ் கட்சி இந்த தேர்தலில் பயன்படுத்தியிருக்க வேண்டும். “ஸ்பெக்ட்ரம் ஊழலால் கறைபடிந்துவிட்ட தி.மு.க.,வுடன், இனி கூட்டணி இல்லை’ என அதிரடியாக அறிவித்து, மூன்றாவது அணியை உருவாக்கியிருக்க வேண்டும். தே.மு.தி.க., – ம.தி.மு.க., போன்ற கட்சிகளையும், கூடவே சில சில்லறை கட்சிகளையும் உள்ளே இழுத்துபோட்டு, ஒரு அணியை அமைத்திருக்க வேண்டும். கோஷ்டி தலைவர்களில் செல்வாக்கு பெற்ற ஒருவரை முதல்வர் வேட்பாளராக அறிவித்து, “ஊழல் இல்லாத ஆட்சியை தருவோம்; மீண்டும் காமராஜர் ஆட்சி மக்களுக்கு கிடைக்கும்’ என, பிரசாரம் செய்திருக்க வேண்டும். ஏற்கனவே ஒரு மாற்றத்தை விரும்பி நிற்கும் மக்கள், இந்த அணிக்கு திரளான ஆதரவை கொடுத்திருப்பர். ஆனால், அந்த வாய்ப்பை கை நழுவவிட்டு விட்டது காங்கிரஸ். இதற்கு, காங்கிரசில் இருக்கும் கோஷ்டி மோதலே காரணம்.

இன்றைய நிலையில், சில கோஷ்டிகள் தி.மு.க.,விற்கும், சில கோஷ்டிகள் அ.தி.மு.க.,விற்கும் சாமரம் வீசிக் கொண்டிருக்கின்றன. இந்த கோஷ்டிகள் தான், காங்கிரசை காட்டிக் கொடுத்து, காமராஜர் ஆட்சியை ஏற்படுத்தவிடாமல் தடுத்து விட்டன. இப்படி ஒரு பொன்னான வாய்ப்பு, இனி வரும் தேர்தல்களில் காங்கிரசுக்கு கிடைக்குமா என்பது சந்தேகமே. ஆனால், இதை காங்கிரஸ் கட்சியின் ஒரு பிரிவினர் மறுக்கின்றனர். “காமராஜர் ஆட்சி’ என்ற எங்களின் லட்சியம் இப்போதும் நிறைவேற வாய்ப்புள்ளது என்கின்கின்றனர்.

இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: நாங்கள் அதிக தொகுதிகளை கேட்டு வாங்கியதால், தி.மு.க., குறைந்த இடங்களில் போட்டியிடுகிறது. தி.மு.க., கூட்டணி ஆட்சி அமைந்தால், காங்கிரசின் தயவில் தான் மீண்டும் ஆட்சி அமைக்க முடியும். கடந்த முறை போல நாங்கள் விட்டுத்தராமல், இம்முறை கூட்டணி ஆட்சிக் கோரிக்கையில் உறுதியாய் இருப்போம்; அதில் வெற்றி பெறுவோம். இதன் மூலம், தமிழகத்தில் காங்கிரசும் அரியணை ஏறும். இது, “காமராஜர்’ ஆட்சிக்கு அடித்தளமாக அமையும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

(dm)

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s