ஓட்டு எண்ணிக்கை மைய பாதுகாப்பில் மாற்றம்

தமிழகம் முழுவதும் ஓட்டு எண்ணிக்கை மைய பாதுகாப்பு ஏற்பாட்டில், சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

தமிழக சட்டசபைக்கான தேர்தல் கடந்த 13ம் தேதி ஒரே கட்டமாக நடந்தது. தேர்தல் முடிந்த அன்று இரவுக்குள் அந்தந்த பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள ஓட்டு எண்ணிக்கை மையங்களில் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன. இதற்காக, தமிழகம் முழுவதும் 91 இடங்களில் ஓட்டு எண்ணிக்கைக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.மேற்கு வங்க தேர்தல் முடிந்த பின், அதாவது, வரும் மே 13ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடப்பதால், அதுவரை, ஓட்டுப்பதிவு இயந்திரங்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டிய நிலை போலீசுக்கு ஏற்பட்டுள்ளது. தேர்தல் கமிஷன் உத்தரவையடுத்து, ஓட்டு எண்ணிக்கை மையங்களில் மூன்று அடுக்கு பாதுகாப்பை ஏற்படுத்தியுள்ளது.

மின்னணு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஸ்ட்ராங் அறையின் முன், ஆயுதப்படை போலீசாரும், அடுத்த கட்டமாக வெளிப்புறத்தில் உள்ளூர் போலீசாரும் நேற்று முன்தினம் வரை இருந்தனர். துணை ராணுவப்படையினர் வந்தபின், அவர்களும் ஒரு குறிப்பிட்ட இடத்தில் இருந்து பாதுகாப்பை கவனிப்பார்கள் என்று கூறப்பட்டது.இதற்கிடையில், அ.தி.மு.க., பொதுச்செயலர் ஜெயலலிதா, ஓட்டு எண்ணிக்கை மையங்களுக்கு மத்திய ரிசர்வ் படை பாதுகாப்பு ஏற்படுத்த வேண்டும் என்று தேர்தல் கமிஷனை கேட்டுக் கொண்டார். இதையடுத்து, நேற்று முன்தினம் இரவு திடீரென ஆயுதப்படை போலீசாருக்கு பதில், ஆயுதம் ஏந்திய தமிழ்நாடு சிறப்பு போலீசார் பாதுகாப்பு பணிக்காக நியமிக்கப்பட்டனர்.

துணை ராணுவப்படையினர் இன்று பிற்பகல் வரும்பட்சத்தில், ஓட்டு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்கான பாதுகாப்பை அவர்கள் ஏற்பார்கள். அடுத்த கட்டமாக, தமிழ்நாடு சிறப்பு போலீசார் நிறுத்தப்படுகின்றனர். வெளியில், உள்ளூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.இது தவிர, ரோந்துப்படையினரும் ஓட்டு எண்ணிக்கை மைய கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். தேர்தல் கமிஷன் சார்பில், ஏற்கனவே தேர்தல் அதிகாரியாக பணியாற்றிய ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் சிலருக்கும், ஓட்டு எண்ணிக்கை மைய பாதுகாப்பை கண்காணிக்கும் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. அவர்கள், எந்த நேரமும் சம்பந்தப்பட்ட மையங்களுக்கு சென்று பார்வையிட உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.ஒட்டு மொத்தத்தில், தேர்தலை விட அதிக பாதுகாப்பு ஏற்பாடுகள், ஓட்டு எண்ணிக்கை மையங்களுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

(dm)

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s