இலங்கை தொடந்து வந்த நாடகம்

எம்.ஜி.ஆர்., ஆட்சிக் காலத்தில் (1985ம் ஆண்டு) தமிழகத்தில் மேல்சபை இயங்கியது. மேல்சபை தலைவராக ம.பொ.சி., இருந்தார். தி.மு.க., தலைவர் கருணாநிதி மேல்சபையில் உறுப்பினராக இருந்தார். இலங்கை தமிழர் பிரச்னை தொடர்பாக அப்போதைய வேளாண்மைத் துறை அமைச்சர் காளிமுத்துவுக்கும், கருணாநிதிக்கும் இடையே விவாதம் நடந்தது. அதன் விவரம்:

கருணாநிதி: இலங்கை தமிழர் பிரச்னையை பொறுத்தவரையில், வேளாண்மைத் துறை அமைச்சர் காளிமுத்து, “அவரை தம்பி என்று அழைப்பதா? நண்பர் என்று சொல்வதா?’ என்று எனக்கு புரியவில்லை.

காளிமுத்து: திராவிட இயக்கத்தை சேர்ந்த அனைவரும் சகோதரர்கள் தான். அதனால், தம்பி என்றே சொல்லுங்கள்.

கருணாநிதி: சரி. என்னை, “அகதி’ என்று வர்ணித்த அருமைத்தம்பி காளிமுத்து…

காளிமுத்து: என்னை, “கிறுக்கன்’ என்று முரசொலி வர்ணித்ததே…

கருணாநிதி: என்றைக்குமே நான் அவரை அப்படி வர்ணித்தது இல்லை. அப்படி நான் சொன்னதாக எடுத்துக் காட்டினால், அதற்கு வருத்தம் தெரிவித்துக் கொள்ள தயாராக இருக்கிறேன். அவர் ஏதாவது கடுமையாக சொன்னதற்கு, “முரசொலி’யில் அவ்வாறு பதில் வந்திருக்கலாம். இப்போது நான் சொல்ல வந்தது, இலங்கை தமிழர் பிரச்னை பற்றி காளிமுத்து எழுதியுள்ள புத்தகத்தில், “இந்திய ராணுவத்திடம் துப்பாக்கி இருப்பது, நவராத்திரியில் கொலு வைத்து அழகு பார்க்கவா’ என்று கேட்டுள்ளார்.

அதோடு, அந்த புத்தகத்தில் அவர் எழுதும் போது, “வேடிக்கையான நாட்டுப்பாடல் உண்டு. இலங்கைக்கு தன் கணவனை அனுப்புகிறாள் மனைவி; அவன் திரும்பி வருகிறான். மனைவி அவனை பார்த்து, “கண்டிக்கு போன மச்சான்… கடல் கடந்து போன மச்சான்… எனக்கு என்ன வாங்கி வந்தே’ என்று கேட்கிறாள்.

அதற்கு கணவன் பதில் அளிக்கும் போது, “கண்டியிலே ஆறு மாசம்… கப்பலிலே ஆறு மாசம்… சீக்கிலே ஆறு மாசம்… செலவழிஞ்சு போச்சுதடி. அதைப்போல தான், இலங்கை இனப்படுகொலை நடந்து எத்தனையோ மாதமாகி விட்டது; பிரச்னை முடியவில்லை. கவலை தெரிவிக்க பல நாட்கள்… கண்டனம் தெரிவிக்க பல நாட்கள்… நரசிம்மராவை இலங்கைக்கு அனுப்ப 10 நாட்கள்… பார்த்தசாரதியை அனுப்ப 10 நாள்…’ என்று அமைச்சர் காளிமுத்து தனது ஆழ்ந்த வேதனையை அந்த புத்தகத்தில் வெளிப்படுத்தியுள்ளார்.

மேலவை தலைவர்: இவ்வளவு புத்தகங்களை படித்திட, உங்களுக்கு எப்படி தான் நேரம் கிடைக்கிறது?

காளிமுத்து: அவரால் உருவாக்கப்பட்ட இந்த தம்பியின் புத்தகங்களை படித்திட நிச்சயம் அவருக்கு நேரம் இருக்கும்.

(மேலவையில் இப்படி நடந்துள்ளது விவாதம். இலங்கை பிரச்னையில் காளிமுத்து எழுதியதாக தி.மு.க., தலைவர் குறிப்பிட்டது இந்த காலத்திற்கும் பொருத்தமாக இருப்பது ஆச்சர்யம் தானே!)

(dm)

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s