அன்னா ஹசாரே நாடு முழுவதும் பிரசாரம் செய்ய திட்டம்

லோக்பால் மசோதா விவகாரத்தில் மிகவும் கண்டிப்பாக இருந்த அன்னா ஹசாரே, தற்போது சற்று இறங்கி, தான் விதித்த கெடுவைத் தளர்த்த முன்வந்துள்ளார். ” நம் நாட்டில் பார்லிமென்ட் தான், மிக உயர்ந்த ஜனநாயக அமைப்பு. லோக்பால் மசோதா பார்லிமென்டில் புறக்கணிக்கப்பட்டால், அந்த முடிவை நான் ஏற்றுக் கொள்வேன்’ என, அவர் கூறியுள்ளார்.

ஊழலுக்கு எதிரானவர்களை தண்டிக்க வகை செய்யும் லோக்பால் மசோதாவை கொண்டுவர வேண்டும் என்றும், வரைவு மசோதா தயாரிப்பு பணியில், பொதுமக்கள் பிரதிநிதிகளை நியமிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி, உண்ணாவிரதம் இருந்தவர், காந்தியவாதி அன்னா ஹசாரே. இவரது கோரிக்கையை மத்திய அரசு ஏற்றுக் கொண்டது. லோக்பால் வரைவு மசோதா குழுவின் முதல் கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது.இந்நிலையில், “லோக்பால் மசோதாவை, வரும் ஆகஸ்ட் 15க்குள் பார்லிமென்டில் நிறைவேற்றாவிட்டால், போராட்டம் நடத்துவேன்’ என, அன்னா ஹசாரே கெடு விதித்திருந்தார். இது, அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. தனது போராட்டத்தின் மூலம், பார்லிமென்ட் அதிகாரத்தை தவறாக பயன்படுத்துகிறார் என, ஹசாரே மீது விமர்சனம் எழுந்தது.

இந்நிலையில், செய்தியாளர்களுக்கு ஹசாரே நேற்று அளித்த பேட்டி:லோக்பால் மசோதாவை, ஆகஸ்ட் 15க்குள் நிறைவேற்ற வேண்டும் என, ஏற்கனவே தெரிவித்து இருந்தேன். ஆனால், இந்த விவகாரத்தில் அரசு சரியான திசையில் செல்கிறது என்ற நம்பிக்கை ஏற்படுமானால், இந்த காலக்கெடுவை நீட்டித்துக் கொள்ளவும் தயாராக உள்ளேன். இருந்தாலும், ஒரு மாத காலத்துக்குள்ளேயே, இந்த மசோதாவை பார்லிமென்டில் நிறைவேற்றுவதற்கு வாய்ப்பு உள்ளது.லோக்பால் விவகாரத்தில், என்னுடைய செயல்பாடுகளை பலர் விமர்சனம் செய்துள்ளனர். என்னை பொறுத்தவரை, பார்லிமென்ட் தான், மிக உயர்ந்த ஜனநாயக அமைப்பு. லோக்பால் மசோதாவை, பார்லிமென்ட் புறக்கணித்து விட்டால், பார்லிமென்டின் அந்த முடிவை ஏற்றுக் கொள்வேன். ஜனநாயகத்தில் எனக்கு நம்பிக்கை உள்ளது.பொதுமக்களுக்கு நல்ல காரியங்கள் செய்வதற்கான எனது நடவடிக்கைகளை,” நல்ல விஷயத்துக்கான பயங்கரவாதம்’ என்று கூட கூறலாம்.

லோக்பால் மசோதா தொடர்பாக, பல தரப்பிலும் ஆலோசனைகளை கேட்க தயாராக உள்ளோம். பொதுமக்கள் மட்டும் அல்லாமல், அரசியல் கட்சித் தலைவர்களும் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம்.லோக்பால் மசோதாவை கொண்டு வருவதன் மூலம் மட்டும், ஊழலை ஒழித்து விட முடியாது. இருந்தாலும், ஊழல் நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதற்கு இது உதவும். ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்கு எதிராக கடுமையான சட்டம் இயற்றப்பட வேண்டும்.அரசியல்வாதிகளை பொறுத்தவரை, முந்தைய தேர்தலில் போட்டியிடும் போது, அவர்களுக்கு இருந்த சொத்தைக் காட்டிலும், அடுத்த தேர்தலில் அதிகமாக சொத்து இருந்தால், அவர்கள் மீது தானாகவே விசாரணை நடத்தும் வகையிலான சட்டம் அவசியம்.

“சிடி’ சர்ச்சை:லோக்பால் வரைவு குழுவில் இடம் பெற்றுள்ள சாந்தி பூஷனுக்கு எதிராக சர்ச்சைக்குரிய “சிடி’ வெளியிடப்பட்டுள்ளது. இது பொய்யாக தயாரிக்கப்பட்ட “சிடி’ என, சிலர் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக, சாந்தி பூஷன், கோர்ட்டில் அவமதிப்பு வழக்கு தொடரலாம். இதுபோன்ற குற்றச்சாட்டுகள் கூறப்படும்போது, தங்களை நிரபராதி என நிரூபிக்க வேண்டிய பொறுப்பு, சம்பந்தபட்டவர்களுக்கு உள்ளது. சாந்தி பூஷனின் நம்பகத்தன்மைக்கு நான் உத்தரவாதம் அளிக்க முடியாது. என் மீதான நம்பகத் தன்மைக்கு மட்டுமே உத்தரவாதம் அளிக்க முடியும்.நாடு முழுவதும் சுற்றுப் பயணம் செய்து, ஊழலுக்கு எதிராக பிரசாரம் செய்யவுள்ளேன். இம் மாத இறுதியில் சுற்றுப் பயணத்தை துவங்குவேன். 20 மாநிலங்களில் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளேன்.இவ்வாறு ஹசாரே கூறினார்.

ஜெட்லி வரவேற்பு: பா.ஜ., மூத்த தலைவரும், ராஜ்யசபா எதிர்க்கட்சி தலைவருமான அருண் ஜெட்லி கூறுகையில், “லோக்பால் மசோதாவை, காலம் தாழ்த்தாமல் விரைவாக பார்லிமென்டில் நிறைவேற்ற வேண்டும். இதற்கு பா.ஜ., ஆதரவு அளிக்கும். லோக்பால் மசோதாவுக்கு தனித்துவம் அளிக்கப்பட வேண்டும்’ என்றார்.

(dm)

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s