site4any

Free downloadable Tamil & Tamil dubbed movies, Free Tamil books & News, Articles, Health tips…

பழத்தை திருப்பி அனுப்பிய ஓமந்தூராரின் நேர்மை

Posted by sambala87(சூரியன்) on April 12, 2011

சுதந்திர இந்தியாவின் முதல் தமிழக முதல்வர் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார். எளிமை, நேர்மை, கண்டிப்பானவர். ஒரு முறை குற்றாலம் சென்றபோது, தனது நண்பரின் பங்களாவில் ராமசாமி தங்கினார். மறுநாள், காரில் சென்னை திரும்பிக் கொண்டிருந்தார். காரில், பலாப்பழம் வாசனை கமகமத்தது. டிரைவரிடம் விசாரித்தார். அவர், “நீங்கள் தங்கியிருந்த பங்களா அருகே பலா மரம் இருந்தது. அதைப் பறித்து வந்தேன்’ என்றார்.

ஆத்திரமடைந்த ராமசாமி, சென்னை சென்றதும், “இந்தப் பழத்தை குற்றாலம் சென்று நண்பரிடம் ஒப்படைக்க வேண்டும். அவர் பழத்தை பெற்றுக்கொண்டதற்கு ஒப்புகைச் சான்று பெற்று வர வேண்டும்’ என உத்தரவிட்டார். போக்குவரத்து செலவிற்கு பணம் கொடுத்து அனுப்பினார்.வேறு வழியின்றி, டிரைவர், குற்றாலம் சென்று, பழத்தை ஒப்படைத்து, சான்றுடன் திரும்பினார்.

டிரைவரின் போக்குவரத்து செலவிற்கு கொடுத்தனுப்பிய பணத்தை, அவரின் மாத சம்பளத்திலேயே ராமசாமி பிடித்தம் செய்தார்.இப்படி, தான் நேர்மையாக இருந்து, தனக்கு கீழ் இருப்பவர்களையும் கண்காணித்து, கண்டித்து முன்னுதாரணம் படைத்தவர் ஓமந்தூரார்.

(dm)

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: