site4any

Free downloadable Tamil & Tamil dubbed movies, Free Tamil books & News, Articles, Health tips…

ஜெ.,வின் தொகுதி செலவு 16 நாளில் ரூ.7.84 லட்சம் மட்டுமே

Posted by sambala87(சூரியன்) on April 12, 2011

ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதாவுக்காக, 7 லட்சத்து 84 ஆயிரத்து 686 ரூபாய் செலவு செய்துள்ளதாக தேர்தல் நடத்தும் அலுவலரிடம் கணக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது.திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் தனது பூர்வீகம் என்று சொல்லி, அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா, ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து, தி.மு.க., சார்பில் ஆனந்த் என்ற இளைஞர் போட்டியிடுகிறார்.
ஸ்ரீரங்கத்தில் போட்டியிடும் ஜெயலலிதா, கடந்த 24ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்து விட்டு, அன்றே பிரசாரத்தையும் துவக்கினார். அதன் பின், திருச்சி சங்கம் ஓட்டலிலேயே தங்கி மேலும் இரண்டு நாள் ஸ்ரீரங்கம் தொகுதியில் பிரசாரம் செய்த ஜெயலலிதா, அதன் பின், மாநிலம் முழுவதும் தனது கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக சென்றுவிட்டார்.தேர்தல் கமிஷன் விதிமுறைப்படி, வேட்பாளர்களின் தேர்தல் செலவுக் கணக்கு தினமும் காட்டப்பட வேண்டும்.
ஜெயலலிதா மாநிலம் முழுவதும் பிரசாரத்தில் உள்ளதால் அவருக்கு பதிலாக, தேர்தல் பொறுப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ள குமார் எம்.பி., மூலம் தினமும் ஸ்ரீரங்கம் தொகுதிக்கான செலவுக் கணக்கு, தேர்தல் செலவின பார்வையாளர் தேவதாசனிடம் ஒப்படைக்கப்பட்டு வருகிறது. கடந்த 24ம் தேதி முதல் ஏப்., 8ம் தேதி வரை ஒப்படைக்கப்பட்ட செலவுக் கணக்கில், ஜெயலலிதா போட்டியிடும் ஸ்ரீரங்கம் தொகுதிக்கு 16 நாளில், 7 லட்சத்து 84 ஆயிரத்து 686 ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளதாக கணக்கு காட்டப்பட்டுள்ளது.இதில், அவர் சங்கம் ஓட்டலில் தங்கியதற்காக, 19 ஆயிரத்து 327 ரூபாய்க்கு செக் வழங்கப்பட்டது முதல், தேர்தல் பிரசார கார், ஆட்டோ செலவு, தோரணம் கட்டியது, மைக் செட், பந்தல், ஆடியோ, வீடியோ ஆகிய செலவுகளும் அடங்கும்.
அதேபோல், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா போட்டியிடும் ஸ்ரீரங்கத்தில் பிரசாரம் செய்ததற்காக கட்சியினருக்கு செய்யப்பட்ட சாப்பாடு, டீ, நொறுக்கு தீனிகள் ஆகியவையும் செலவுக் கணக்கில் காண்பிக்கப்பட்டுள்ளது.தேர்தலுக்கு இன்னும் இரண்டு நாளே உள்ளதால், ஜெயலலிதாவின் தேர்தல் செலவுக் கணக்கை, 11 லட்சத்துக்குள் அ.தி.மு.க.,வினர் முடித்து விட வாய்ப்புள்ளது. சட்டசபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர், 16 லட்ச ரூபாய் வரை தேர்தல் செலவு செய்யலாம் என்று தேர்தல் கமிஷன் வரையறை வகுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

(dm)

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: