site4any

Free downloadable Tamil & Tamil dubbed movies, Free Tamil books & News, Articles, Health tips…

கட்சிப் பணிகளையே சிறந்ததாகக் கருதிய மாபெரும் தலைவர் காமராஜர்…

Posted by sambala87(சூரியன்) on April 12, 2011

தமிழகத்தில், 1963ம் ஆண்டு, காமராஜர், முதல்வர் பதவி வகித்தார். அப்போது, இந்திய காங்கிரசில் உட்கட்சி பூசல் அதிகரித்து காணப்பட்டது. இதை சரிசெய்ய, காமராஜர் தலைமையில் நேரு ஆலோசனைக் கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்தார். அதில், கட்சியின் உட்கட்சி பூசல்களுக்கு தீர்வு காணும் வகையில் திட்டம் ஒன்று வகுக்கப்பட்டது. “காமராஜர் திட்டம்’ (கே பிளான்) என, பெயர் வைக்கப்பட்ட அத்திட்டத்தில், அரசியலில் இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்க முன்வர வேண்டும்; முதியவர்கள் தாங்கள் வகிக்கும் பதிவியிலிருந்து விலகி, கட்சிப் பணிகளில் ஈடுபட வேண்டும், என்ற தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
இதை, பெருந்தன்மையோடு ஏற்றுக்கொண்ட காமராஜர், தனது முதல்வர் பதவியை, காந்தியடிகள் பிறந்த நாளான அக்டோபர் 2ம் தேதி ராஜினாமா செய்துவிட்டு, முழுநேர கட்சிப் பணியில் ஈடுபட்டார். இதையடுத்து, 1964ம் ஆண்டு நேரு இறந்தார். அவரின் மரணம், நாட்டு மக்களை மிகவும் சோகத்தில் ஆழ்த்தியது. அவருக்கு பின்னர் பிரதமராக யாரை அறிவிப்பது என்ற கேள்வி, கட்சியினரிடையே பலமாக ஒலித்தது.
பெரும்பான்மையினர், காங்கிரஸ் கட்சியின் அப்போதைய தலைவராக இருந்த காமராஜரை ஆதரித்தனர். ஆனால், லால் பகதூர் சாஸ்திரியை பிரதமராக காமராஜர் அறிவித்தார். அதன் பின், 1966ம் ஆண்டு லால் பகதூர் சாஸ்திரி இறந்தார். கட்சியில் மீண்டும் பிரதமர் யார் என்ற கேள்வி வலுத்தது. அப்போதும், பதவியை பெரிதாக நினைக்காத காமராஜர், நேருவின் மகள் இந்திராவை பிரதமராக அறிவித்தார். இதுபோல, பல்வேறு காலகட்டங்களிலும் பதவிகளை பெரிதாக கருதாமல் கட்சிப் பணிகளையே சிறந்ததாகக் கருதிய மாபெரும் தலைவர் காமராஜர்.

(dm)

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: