ஹசாரேவுக்கு மோடி கடிதம்!

பிரபல சமூக சேவகர் அண்ணா ஹசாரே சில விஷமிகளின் வாயால் சொல்லடி படுவதை குஜராத்தியர் விரும்பவில்லை என்றும், அண்ணா ஹசாரே குஜராத் அரசுக்கு பாராட்டு தெரிவித்திருத்திருப்பது தனக்கு கூடுதல் பலம் தருவதாக உள்ளது என்றும் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி ஹசாரேவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது இணையதளத்தில் அந்த கடிதத்தை வெளியிட்டு குறிப்பிட்டுள்ளதாவது:

தாய் ஜகதாம்பிகையின் நவராத்திரியில் 8-வது நாள் விரதமான இன்று, அதிகாலை 5 மணிக்கு இந்த கடிதத்தை தங்களுக்கு எழுதுகிறேன்.

நீங்கள் தில்லியில் உண்ணாவிரதம் மேற்கொண்டபோது, நானும் நவராத்திரி விரதத்தை கடைபிடித்து வந்தேன். ஜகதாம்பிகையின் அருளால் நானும் உங்கள் நோக்கத்தில் ஒரு சக பயணியாக இருந்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.

குஜராத் அரசுக்கும் எனக்கும் நீங்கள் பாராட்டு தெரிவித்தது மிகவும் மகிழ்ச்சி. உங்கள் ஆசிக்கு எனது நன்றிகள்.

நான் அரசியலுக்கு வருவதற்கு முன்னரே, உங்கள் மீது பெரும் மதிப்பு வைத்திருந்தேன். நான் முழுநேர ஆர்.எஸ்.எஸ். தொண்டராக இருந்தபோது, கூட்டங்களுக்கு வரும் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் மூத்த தலைவர்கள் உங்களைப் பற்றி கூறியதை கேட்டிருக்கிறேன். ஊரக வளர்ச்சி பணிகளில் உங்கள் பங்கு குறித்து அவர்கள் பெருமையாக கூறினர். அது எனக்குள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

தற்போது உங்கள் பாராட்டு எனக்கு கூடுதல் பலத்தை தருகிறது. அதேநேரத்தில் எனது பொறுப்பும் கூடுதலாகிறது. இதனால், நான் செய்யும் சிறு தவறுகள் கூட ஏராளமான இளைஞர்களை ஏமாற்றமடையச் செய்யலாம். எனவே, கூடுதல் கவனத்துடன் இருக்க நீங்கள் ஆசிர்வதிக்க வேண்டும்.

ஹசாரேஜி, நீங்கள் ஒரு காந்தியவாதி மட்டுமல்ல, உறுதியில் ஒரு ராணுவ வீரரும் கூட.

ஆனால், குஜராத் மீதான உங்கள் பாசத்தை சீர்குலைக்க சில விஷமிகள் முயற்சி செய்யலாம். கேரள கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி. அப்துல்லா குட்டி என்னை பாராட்டினார் என்பதற்காக கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.

குஜராத் சுற்றுலாவுக்கு இலவசமாக பிரசாரம் செய்த காரணத்துக்காக நடிகர் அமிதாப் பச்சனும் கடும் எதிர்ப்புக்கு உள்ளானார்.

குஜராத் அரசை பாராட்டிய மவுலானா குலாம் வஸ்தனவியும் எதிர்ப்பை சந்திக்க வேண்டியிருந்தது.

குஜாராத் வளர்ச்சியையும் என்னையும் பாராட்டிய ராணுவ உயர் அதிகாரி ஐ.எஸ். சின்ஹாவுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரப்பட்டது.

இவை அனைத்தும் சில உதாரணங்களே. இதுபோல், உங்களையும் சில விஷமிகள் வருத்தப்படச் செய்வதை 6 கோடி குஜராத்தியர்களும் விரும்பவில்லை. உங்களுக்கு கடவுள் பலம் அளிக்க வேண்டும்.

நாட்டுக்கு நீங்கள் செய்த தியாகங்களுக்கும் சேவைகளுக்கும் நான் தலை வணங்குகிறேன். நீங்கள் நல்ல ஆரோக்கியத்துடன் வாழ கடவுள் அருள் புரியட்டும்.

இவ்வாறு முதல்வர் நரேந்திர மோடி தனது இணையதளத்தில் அண்ணா ஹசாரே பற்றி எழுதியுள்ளார்.

(di)

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s